Sunday, 11 April 2021

நீதி கிட்டியது... நிதி கிட்டியது...  

தோழர்களே...

மிக நீண்ட பிரச்சினையான ஒப்பந்த ஊழியர் சம்பள நிலுவை வழக்கு தற்போது இறுதிக்கட்டத் தீர்வை எட்டியுள்ளது. 

சம்பளம் கிடைக்குமா.... கிடைக்காதா என்ற சந்தேகம் நிலவிய நிலையில்.... ஊதியம் என்பது உழைத்தவனின் உரிமை... அதனைப் பெற்றே தீருவோம் என்று நமது TMTCLU சங்கம் தொடுத்த வழக்கின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்குத் தற்போது நியாயம் வழங்கப்பட்டுள்ளது. 

நீதிமன்ற உத்திரவுப்படி... 

BSNL நிர்வாகம் இதுவரை

35 கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை 4 தவணைகளாக

DY. CLC தொழிலாளர் ஆணையரிடம் செலுத்தியுள்ளது. 

DY. CLC தொழிலாளர் ஆணையர்... 

13/11/2020 அன்று

1857 ஊழியர்களுக்கு 6,10,15,236/= ரூபாய் பட்டுவாடா செய்துள்ளார்.

ஏறத்தாழ 5000 ஊழியர்கள் பணிபுரிந்த நிலையில்

1857 பேருக்கு மட்டுமே பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

இதனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றபின்

அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் நேரடியாக கள ஆய்வு செய்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்திரவிட்டது. 

அதனடிப்படையில் அனைத்து ஊழியர்களும்

நேரடி விசாரணை செய்யப்பட்டு நீதிமன்றத்தில்

விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஜனவரி 2021ல் விசாரணை முடிவடந்த நிலையிலும் தொழிலாளர் ஆணையரால் உடனடியாக விசாரணை அறிக்கையை

நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இயலவில்லை.

இதில் 386 ஊழியர்கள் நேரடி விசாரணையில்

பலவித காரணங்களுக்காக கலந்து கொள்ள இயலவில்லை. 

நமது தொடர்ந்த முயற்சியால் தற்போது...

03/04/2021 அன்று.. தலா 40 ஆயிரம் வீதம்...

2902 ஊழியர்களுக்கு 8,40,30,005/= ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. 

தொழிலாளர் ஆணையர் 3345 ஊழியர்கள் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப் பணம் செலுத்திருந்தாலும் 443 தோழர்களின் வங்கிக்கணக்கு மற்றும் இதர விவரங்கள் சரியில்லை என்று சொல்லி.... பாரத ஸ்டேட் வங்கி 1,25,84,714/= ரூபாயைத் திருப்பி அனுப்பியிருந்தது. 

இதனிடையே...

12/04/2021 மற்றும் 13/04/2021 ஆகிய இரு தேதிகளில் 291  விடுபட்ட ஊழியர்களுக்கு 4 மையங்களில் மறுவிசாரணை நடக்கவுள்ளது.

இது நீதிமன்றத்தின் மனிதாபிமானமிக்க  முடிவாகும். 

தற்போது தவறுதலான விவரங்கள் கொண்ட

443 ஊழியர்களின் வங்கிக்கணக்குகள் சரிசெய்யப்பட்டு மாவட்ட வாரியாக மாநில நிர்வாகத்திற்கு அனுப்பப்படவுள்ளன.

இரண்டொரு நாளில் விடுபட்ட ஊழியர்களின்

சம்பளம் கிடக்க வாய்ப்புள்ளது.

இரண்டு தவணை சம்பளப் பட்டுவாடா போக

DY. CLC தொழிலாளர் ஆணையர் வசம்

தற்போது  20 கோடியே 90 லட்சம் ரூபாய் கையிருப்பு உள்ளது.

எனவே 40ஆயிரத்திற்கு மேல் நிலுவை உள்ளவர்களுக்கு உடனடியாக மிச்சமுள்ள நிலுவை கிடைக்கும்.

மேற்கண்ட பணியினை

10 நாட்களுக்குள் முடித்திட நீதிமன்றம் பணித்துள்ளது.

அடுத்த விசாரணை 21/04/2021 அன்று நடைபெறும்.

எனவே அதற்கு முன்பாக ஒப்பந்த ஊழியர்களின் அனைத்து நிலுவைகளும் பட்டுவாடா செய்யப்படும். 

தோழர்களே...

முயற்சி திருவினையாக்கும் என்பது பழமொழி...

ஒப்பந்த ஊழியர்கள் சம்பளப்பிரச்சினையில் நமது ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் விடாமுயற்சியும், தொடர்ந்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுசென்று நியாயம் கிடைக்க வழிவகை செய்த வழக்கறிஞர் தோழர்.N.K.சீனுவாசன் அவர்களின் சீரிய பணியும் நமக்கு நீதி கிடைக்க வழி செய்துள்ளது. 

“இயக்கம் என்பது இல்லாமல் உயர்ந்த எதனையும் சாதிக்க இயலாது” என்று சுவாமி விவேகாநந்தர் சொன்னார்....

NFTE மற்றும் TMTCLU என்னும் இயக்கங்கள் இல்லாமல்...

நம்மால் இதனை சாதித்திருக்க இயலாது.

நிதி கிடைக்க  நீதிமன்றம் சென்றோம்...

இதோ... நீதியால் நிதி கிடைத்தது.... 

TMTCLU உறிஞ்சும் இயக்கம் அல்ல...

உரிமைக்காக தொடர்ந்து உழைக்கும் இயக்கம்...

எனவே தோழர்கள் முழுமையான நிலுவை பெற்றவுடன்...

நமது இயக்கத்திற்கு உரிய நிதி வழங்கிட வேண்டும்.

அதுவே இயக்கத்திற்கு நாம் செய்யும் கைமாறு.

No comments:

Post a Comment