தானைத்தலைவர் குப்தா நூற்றாண்டு தொடக்க நாளான 08/04/2021 அன்று பரமக்குடியில் மாவட்டத்தலைவர் தோழர். லால்பகதூர் அவர்கள் தலைமையில் NFTE காரைக்குடி மாவட்டச்சங்க செயற்குழு சிறப்பாக நடைபெற்றது.
தோழர் குப்தா நூற்றாண்டு
தொடக்க விழா...
பரமக்குடி தோழர் சங்கரன்
பணிநிறைவு விழா....
மாவட்டச்செயற்குழு....
என்று மூன்று முத்தான
விழாக்கள் நடைபெற்றன.
அஞ்சல் பகுதியின் அருமைத்தோழர் செல்வராஜ் அவர்கள் தோழர் குப்தா பற்றி சீரிய சிறப்புரையாற்றினார்.
தோழர் குப்தா பற்றிய கருத்தரங்கத்தில் அற்புத சாட்சியாகத் தங்கள் வாழ்வில் தோழர் குப்தா நிகழ்த்திய அற்புதங்கள் பற்றி தோழர்கள் உணர்வுப் பூர்வமாக எடுத்துரைத்தனர்.
பங்கு கொண்ட தோழர்களுக்கு கடலூர் தோழர் ஜெயராமன் எழுதிய தமிழகத்தின் முதல் முதலமைச்சர் ஓமந்தூரார் பற்றிய புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
விருப்ப ஓய்வுக்குப்பின் மாவட்டச்சங்க நிர்வாகிகள் பலர் ஓய்வு பெற்றதால்....புதிய மாவட்டச்செயற்குழு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
மாவட்டத்தலைவர்
தோழர்.
சுப்பிரமணியன், TT/இராமநாதபுரம்
மாவட்டச்செயலர்
தோழர்.
சுபேதார் அலிகான், OS/காரைக்குடி
மாவட்டப்பொருளர்
தோழர்.
பங்கஜ்குமார், JE/முதுகுளத்தூர்
ஆகியோரைக் கொண்ட புதிய இளைய மாவட்டச்செயற்குழு முழுக்க முழுக்கப் பணியில் உள்ள தோழர்களைக் கொண்ட மாவட்டசெயற்குழு தோழர்களின் ஒட்டுமொத்த ஆதரவோடு... உற்சாகத்தோடு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தோழர் சுப்பிரமணியின்
வழிகாட்டுதலில்....
தோழர் சுபேதார் செயல்பாட்டில்.....
காரைக்குடி மாவட்டச்சங்கம்
தனது பாரம்பரிய பாதையில்
புதிய தடம் பதிக்க.... வரலாறு படைக்க வாழ்த்துக்கள்....
No comments:
Post a Comment