Saturday, 25 September 2021

நாடு தழுவிய மறியல்

நாடாள்வோரின்...

நாசகாரக் கொள்கைகள் எதிர்த்து...

நாடு தழுவிய

மறியல் போராட்டம்

செப்டம்பர் – 27

தோழர்களே... அணி திரள்வீர்...

பா ர த்   ப ந் த்...

விவசாயிகள் விரோத...

தொழிலாளர் விரோத...

மக்கள் விரோத..

மத்திய அரசை எதிர்த்து....

மக்கள் சொத்துக்களைத்

தனியாருக்குத் தாரைவார்க்கும்...

தரமற்ற நடவடிக்கைகள் எதிர்த்து...

பொதுத்துறைகளை நாசம் செய்யும்...

நாசகாரக் கொள்கைகள் எதிர்த்து

செப்டம்பர் -27 – திங்கள்கிழமை

அனைத்து மத்திய சங்கங்கள் பங்கேற்கும்...

பாரத் பந்த்


----------------------------------------------------

NFTE மத்திய சங்க அறைகூவலுக்கிணங்க....

தலமட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்...

தோழர்களே... அணி திரள்வீர்...

Wednesday, 22 September 2021

 அரை நிர்வாணப் பக்கிரி

அரை நிர்வாணப்பக்கிரி ...

இப்படித்தான் பிரிட்டனின் வின்ஸ்டன் சர்ச்சில்

நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியை அழைத்தார்... 

மகாத்மா காந்தியின் அரை நிர்வாணம்

பிறந்த இடம் மதுரை...

பிறந்த நாள் 1921 செப்டம்பர் 22...

நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன... 

மாபெரும் வரலாற்று நிகழ்வு நடந்த மதுரையில்...

நேற்று எந்த அசைவும் மக்களிடம் இல்லை...

ஜிகர்தண்டா... பன்புரோட்டா..

இதுவே இன்று மதுரை மக்கள்  வாழ்வு...

 

மகாத்மா காந்தியின் பேத்தி

திருமதி. தாரா காந்தி பட்டாச்சார்யா அவர்கள்

நேற்று மதுரைக்கு வந்திருந்து காந்தி சிலைக்கு

மாலை அணிவித்து மரியாதை செய்தார்...

மதுரை மண்ணை மிதித்ததால்...

தான் மிகவும் பெருமை கொண்டதாக குறிப்பிட்டார்.

 

தோழர் வெங்கடேசன் MP தலைமையில்

சிறுவர்கள் மாறுவேடம் போட்டு ஊர்வலம் செல்ல..

மாறுவேடம் போடுவதை

மாபெரும் தொழிலாகக் கொண்ட

நமது அரசியல்வாதிகளும்...

ஆளும் அமைச்சர்களும்...

சமூக வலைத்தளங்களில்

இங்கொன்றும்.. அங்கொன்றுமாக..

தங்கள் தியாகக் கருத்துக்களை விதைத்திருந்தனர்...

 

மக்கள் பங்கேற்பு இல்லாத..

மிகவும் சிறிய நிகழ்வாக மதுரையில்...

நேற்றைய நூற்றாண்டு நிகழ்வு முடிந்தது...

காந்தி பிறந்த...

அதே குஜராத் மாமண்ணில்...

அவதரித்த நமது எளிமையின் இலக்கணம்..

மாண்புமிகு பிரதமர் அவர்கள்..

மக்கள் வாழ்வு மேம்பட அமெரிக்கா சென்றுவிட்டார்... 

ஐன்ஸ்டின் போன்ற மாபெரும் அறிவாளிகள்

பார்த்து வியந்த அரைநிர்வாணப் பக்கிரியாம்

மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற

பெருமை இனியும் தொடருமா என்பது சந்தேகமே... 

அரைநிர்வாணப் பக்கிரிகள்

மக்களால் மறக்கப்பட்டதால்...

முழு நிர்வாணப் போக்கிரிகள்...

தேசமெங்கும் முளைத்து விட்டார்கள்...

வாழ்க இந்திய தேசம்... 

 டெல்லி போராட்டம் 

AUAB அனைத்து சங்க கூட்டமைப்பின் முடிவின்படி 21/09/2021 முதல் 23/09/2021 வரை மூன்று நாட்கள் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் BSNL வளர்ச்சியுறவும்... BSNL ஊழியர்களின் நீண்ட நாள் தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்காகவும்.... தொடர் தர்ணா போராட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 

டெல்லி மற்றும் அதனையொட்டிய மாநிலங்களில் இருந்து தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டு வருகின்றனர். மூன்று நாட்கள் தர்ணா போராட்டம் இன்றுடன் முடிவடைகின்றது. 

வழக்கம் போல் நிர்வாகமும் அரசும் 

கேளாச் செவியனராகவே உள்ளனர். 

மக்கள் வீதிகளில் கத்துகிறார்கள். 

மாமன்னர்கள் வானவீதியில் சுத்துகிறார்கள்.

கத்துவது நம் கடமை...

சுத்துவது மன்னர் பெருமை...

வாழ்க... இந்திய தேசம்...

Thursday, 16 September 2021

சுயமரியாதையே சுகவாழ்வு...

 

செப்டம்பர் – 17

சமூக நீதி நாள்...

தந்தைப் பெரியார் பிறந்த நாள்

----------------------------------------

பெரியார் பிறந்தார்...

சுயமரியாதை பிறந்தது...

குருடர்கள் விழித்தார்கள்...

செவிடர்கள் கேட்டார்கள்...

முடவர்கள் நடந்தார்கள்...

கேள்விக்குறி போல் வளைந்து நெளிந்தவன்...

கேள்விக்கணைகளைத் தொடுத்தான்...

இடுப்புத்துண்டை  முண்டாசாக்கினான்...

மடிச்சுக் கட்டினான்  நாலு முழ வேட்டியை...

காலுக்கு மாட்டிக்கொண்டான் காலணியை...

கம்பீரமாய் அணிந்தான் காலர் வைத்த சட்டையை ...

குடை விரித்தான் வெய்யிலுக்கும்... மழைக்கும்...

மழைக்காக கூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவன்...

மளமளவென்று பட்டங்கள் பெற்றான்....

குலத்தொழிலே கதி என்று இருந்தவன்...

அரசுப்பணியில் அதிகாரம் கொண்டான்...

கும்பிட்டே வாழ்ந்த மனிதன்...

பிறர் கும்பிடும் நிலைக்கு உயர்ந்தான்...

தமிழனுக்கு இரண்டு தந்தைகள்...

பெற்ற தந்தையும்...

பெரியார் என்னும்

உற்ற தந்தையும்....

வாழ்க... பெரியார்....

வளர்க... அவர் எழுப்பிய சமூக நீதி...

-----------------------------------------------------------------------

தந்தைப் பெரியார் பிறந்த தின விழா...

சமூக நீதி உறுதிமொழி ஏற்பு...

17/09/2021 – வெள்ளிக்கிழமை – காலை 09.30 மணி

தந்தைப் பெரியார் சிலை முன்பு 

தல்லாகுளம் – மதுரை.

தோழர்களே.... வருக...

 நூற்றாண்டு காணும் 

முதல் இடஒதுக்கீடு அரசாணை

 

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கும்

COMMUNAL G.O., எனப்படும் வகுப்புவாரி

பிரதிநிதித்துவத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டு

இன்றோடு 100 ஆண்டுகள் ஆகின்றன.

கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில்

மெட்ராஸ் மாகாணத்தில் கல்விக்கூடங்களும்

அரசு வேலை வாய்ப்புகளும்

மெல்ல மெல்ல அதிகரிக்க ஆரம்பித்த காலகட்டத்தில்,

கல்வி பயிலும் வாய்ப்புகளையும்...

அரசில் பணியாற்றும் வாய்ப்புகளையும்

ஒரு சாரரே பெறுகிறார்கள் என கவனம் ஏற்பட ஆரம்பித்தது. 

அதன் உச்சகட்டமாகவே  COMMUNAL G.O எனப்படும் 

இடஒதுக்கீட்டிற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

 

1916ல் உருவாக்கப்பட்ட

தென்னிந்திய நல உரிமைச் சங்கம்

(South Indian Liberal Federation)

கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும்

பிராமணரல்லாதோரின் பிரதிநிதித்துவம்

குறித்து தொடர்ந்து பேசிவந்தது.

1916 நவம்பரில் வெளியிடப்பட்ட  

கொள்கை அறிக்கை எல்லா சமூகத்தினருக்கும்

சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென குறிப்பிட்டது. 

1921 ஆகஸ்ட் ஐந்தாம் தேதி சட்டப்பேரவையில் பேசிய

. தணிகாசலம் செட்டியார்

ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

ஒரு அரசு அலுவலகத்தில்

100 ரூபாய் அளவுக்கு சம்பளம் வாங்கும்

எல்லா அதிகாரிகள் மட்டத்திலும் 66 சதவீதம் அளவிற்கும்...

100 ரூபாய்க்கு கீழே ஊதியம் பெறுபவர்களில்

77 சதவீதம் அளவிற்கும்...

இட ஒதுக்கீட்டு இருக்கும் நிலை ஏற்பட வேண்டும்.

7 ஆண்டுகளில் இதை எட்ட வேண்டும்

என அந்தத் தீர்மானம் கூறியது.

இந்தத் தீர்மானத்தை நடேச முதலியார் வழிமொழிந்தார்.

 

"இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம்

நாட்டிற்கே விடுதலை அளித்த மனிதர்களாக

எதிர்கால சந்ததி நம்மைக் கருதும்" என்றார்.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இதன் தொடர்ச்சியாகவே,

Communal GO என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான அரசாணை

பனகல் அரசர் தலைமையிலான அரசால்

செப்டம்பர் 16, 1921ல் வெளியிடப்பட்டது.

 

அரசு அலுவலகங்களில்

வேலை வாய்ப்புகளை அளிக்கும்போது,

12 இடங்களாக அவற்றைத் தொகுத்து

வேலை வாய்ப்புகளை அளிக்க வேண்டும்.

 

அதன்படி, 12 இடங்களில்...

2 இடங்கள் பிராமணர்களுக்கும்

ஐந்து இடங்கள் பிராமணரல்லாதவர்களுக்கும்

இரண்டு இடங்கள் இஸ்லாமியர்களுக்கும்

இரண்டு இடங்கள் கிறிஸ்தவர், ஐரோப்பியர்கள்,

ஆங்கிலோ - இந்தியர்களுக்கும் அளிக்க வேண்டும்.

ஒரு இடம் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவருக்குத் தரவேண்டும்.

 

இந்த ஆணை ஒழுங்காக செயல்படுத்தப்படுவதைக்

கண்காணிக்க சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட

ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

 

இதற்குப் பிறகு, 1922 ஆகஸ்ட் 15ஆம் தேதி

கல்வி நிலையங்களிலும் வகுப்புவாரி

பிரதிநிதித்துவத்தை அளிக்கும் அரசாணை வெளியிடப்பட்டது.

 

ஆனால், 1928 டிசம்பர் 15ஆம் தேதி

வெளியிடப்பட்ட மூன்றாவது  Communal GO மூலம்தான்,

இந்த இட ஒதுக்கீடுகள் அமலுக்கு வந்தன.

 

உண்மையில், இந்த அரசாணைகள் பிராமணரல்லாதவர்களுக்கான

இடஒதுக்கீட்டை வழங்கும் அரசாணைகளாக கருதப்பட்டாலும்,

இவை பிராமணர்களுக்கும் 16 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கின.

 

முன்னாள் முதல்வர் அண்ணா

இந்த அரசாணை குறித்துக் குறிப்பிடும்போது,

"தென்னாட்டைப் பொறுத்தவரைCommunal GO

திராவிட சமுதாயத்தின்...ஏன்- பார்ப்பனர் உள்பட

மனித சமுதாயத்தின் சுதந்திர சாசனம் ஆகும்.

என்று குறிப்பிட்டார்.

 

இந்தியா சுதந்திரம் பெற்று,

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

அமலுக்கு வந்த பிறகு,

இந்த அரசாணையை எதிர்த்து

இரு மாணவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றபோது,

இந்த  Communal GO செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன் பிறகு இட ஒதுக்கீடு அளிக்க ஏதுவாக

இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.

 

நன்றி – BBC இணையதளம்