AUAB அனைத்து சங்க கூட்டமைப்பின் முடிவின்படி 21/09/2021 முதல் 23/09/2021 வரை மூன்று நாட்கள் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் BSNL வளர்ச்சியுறவும்... BSNL ஊழியர்களின் நீண்ட நாள் தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்காகவும்.... தொடர் தர்ணா போராட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
டெல்லி மற்றும் அதனையொட்டிய மாநிலங்களில் இருந்து தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டு வருகின்றனர். மூன்று நாட்கள் தர்ணா போராட்டம் இன்றுடன் முடிவடைகின்றது.
வழக்கம் போல் நிர்வாகமும் அரசும்
கேளாச் செவியனராகவே உள்ளனர்.
மக்கள் வீதிகளில் கத்துகிறார்கள்.
மாமன்னர்கள் வானவீதியில் சுத்துகிறார்கள்.
கத்துவது
நம் கடமை...
சுத்துவது
மன்னர் பெருமை...
வாழ்க...
இந்திய தேசம்...
No comments:
Post a Comment