வருமான வரித்தாக்கல்
வருமான வரிப்படிவம்
FORM -16 தட்டுத்தடுமாறி
BSNL நிர்வாகத்தால்
வெளியிடப்பட்டுள்ளது.
ஆனாலும் பெருங்குழப்பம்
நிலவுகின்றது.
குறிப்பாக விருப்ப ஓய்வில்
சென்ற தோழர்களின்
வருமான வரிப்படிவம்
FORM -16
தப்பும், தவறுமாக வெளியிடப்பட்டுள்ளது.
மாநில நிர்வாகத்தில் அனுபவமுள்ள கணக்கு அதிகாரிகள் இப்போதைக்கு யாரும் இல்லை என்பதையே இது காட்டுகின்றது.
பணியில் உள்ள தோழர்களுக்குப்
பிரச்சினை இல்லை.
விருப்ப ஓய்வில் சென்ற
தோழர்களின்
FORM -16 PART –A பகுதியில்
மொத்த வருமானம்
கூடுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு வழங்கப்பட்ட
கருணைத்தொகை
EXGRATIA இந்த வருமான
வரியாண்டில்
வழங்கப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது.
எனவே வருமானம் கூடுதலாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் PART – B யில்
மொத்த வருமானம் சரியாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
PART –A படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள
GROSS INCOME மொத்த வருமானம்
மற்றும்
பிடித்தம் செய்யப்பட்ட
வரி ஆகியவை
வருமானவரி இணையத்தோடு
இணைக்கப்பட்டிருக்கும்.
எனவே கூடுதல் வருமானம்
காட்டப்பட்டிருப்பதால்
கூடுதல் வரி என்று நிலை நிலவுகின்றது.
மொத்த வருமானத்தை குறைத்துக்காட்ட
வருமான வரி இணையம் அனுமதிப்பதில்லை.
எனவே வருமான வரித்தாக்கல்
செய்வதில் சிக்கல் நிலவுகின்றது.
மேலும் விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களின்
மாதாந்திர ஓய்வூதியம்
கணக்கில் காட்டப்படவில்லை.
DOT வருமான வரிப்பிடித்தம்
செய்தவர்களுக்கு
மட்டுமே FORM -16 வெளியிட்டுள்ளது.
FORM -16 குளறுபடிகள்
CORPORATE அலுலகத்தால் மட்டுமே
சரிசெய்யப்படும் என்று
கூறப்படுகின்றது.
அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனவா
என்பது தெரியவில்லை.
இத்தகைய சூழலில்...
வருமான வரித்தாக்கல்
செய்ய டிசம்பர் 31 வரை தேதி
நீட்டிக்கப்பட்டுள்ளதால்
விருப்பம் ஓய்வில் சென்ற தோழர்கள்
FORM -16 படிவம் சரி
செய்யப்பட்டு
மறுவெளியீடு வரும் வரை
பொறுமையாக இருக்கவும்.
No comments:
Post a Comment