Wednesday 22 September 2021

 அரை நிர்வாணப் பக்கிரி

அரை நிர்வாணப்பக்கிரி ...

இப்படித்தான் பிரிட்டனின் வின்ஸ்டன் சர்ச்சில்

நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியை அழைத்தார்... 

மகாத்மா காந்தியின் அரை நிர்வாணம்

பிறந்த இடம் மதுரை...

பிறந்த நாள் 1921 செப்டம்பர் 22...

நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன... 

மாபெரும் வரலாற்று நிகழ்வு நடந்த மதுரையில்...

நேற்று எந்த அசைவும் மக்களிடம் இல்லை...

ஜிகர்தண்டா... பன்புரோட்டா..

இதுவே இன்று மதுரை மக்கள்  வாழ்வு...

 

மகாத்மா காந்தியின் பேத்தி

திருமதி. தாரா காந்தி பட்டாச்சார்யா அவர்கள்

நேற்று மதுரைக்கு வந்திருந்து காந்தி சிலைக்கு

மாலை அணிவித்து மரியாதை செய்தார்...

மதுரை மண்ணை மிதித்ததால்...

தான் மிகவும் பெருமை கொண்டதாக குறிப்பிட்டார்.

 

தோழர் வெங்கடேசன் MP தலைமையில்

சிறுவர்கள் மாறுவேடம் போட்டு ஊர்வலம் செல்ல..

மாறுவேடம் போடுவதை

மாபெரும் தொழிலாகக் கொண்ட

நமது அரசியல்வாதிகளும்...

ஆளும் அமைச்சர்களும்...

சமூக வலைத்தளங்களில்

இங்கொன்றும்.. அங்கொன்றுமாக..

தங்கள் தியாகக் கருத்துக்களை விதைத்திருந்தனர்...

 

மக்கள் பங்கேற்பு இல்லாத..

மிகவும் சிறிய நிகழ்வாக மதுரையில்...

நேற்றைய நூற்றாண்டு நிகழ்வு முடிந்தது...

காந்தி பிறந்த...

அதே குஜராத் மாமண்ணில்...

அவதரித்த நமது எளிமையின் இலக்கணம்..

மாண்புமிகு பிரதமர் அவர்கள்..

மக்கள் வாழ்வு மேம்பட அமெரிக்கா சென்றுவிட்டார்... 

ஐன்ஸ்டின் போன்ற மாபெரும் அறிவாளிகள்

பார்த்து வியந்த அரைநிர்வாணப் பக்கிரியாம்

மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற

பெருமை இனியும் தொடருமா என்பது சந்தேகமே... 

அரைநிர்வாணப் பக்கிரிகள்

மக்களால் மறக்கப்பட்டதால்...

முழு நிர்வாணப் போக்கிரிகள்...

தேசமெங்கும் முளைத்து விட்டார்கள்...

வாழ்க இந்திய தேசம்... 

No comments:

Post a Comment