ஜூன் - 7
தோழர். ஜெகன் நினைவு நாள்
தோழர். ஜெகன் நினைவு நாள்
இகழ் மொழி மறுத்தவனே
இனிய மொழி மருத்துவனே
எளியோரை மதித்தவனே
எள்ளிநகைதல் வெறுத்தவனே
பகைத்தொழில் மறந்தவனே
பாசமழை பொழிந்தவனே
போர்வழி இகழ்ந்தவனே
ஓர்வழி புகழ்ந்தவனே..
மலையாய் வருது.. சோதனைகள்..
சிலையாய் நின்று சிரித்து விடாதே..
மலையைப் பனியாய் மாற்றி விடு..
மனங்களைப் பஞ்சாய் மகிழ விடு ..
No comments:
Post a Comment