BSNL 2018ல் நிகர லாபம் பெறும் என்று
தொலைதொடர்புத்துறை அமைச்சர்
நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்ற நிதியாண்டில் 2014-15ல்
நமது நிறுவனம் 27,242கோடி வருமானமும்
672 கோடி OPERATIVE PROFIT எனப்படும்
கூட்டு லாபமும் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
================================================
SR.TOA, TTA மற்றும் PM கேடர்களில்
RULE 8 எனப்படும் வெளிமாற்றல்கள்
அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது.
16/10/2015 அன்று நடைபெற்ற
JCM தேசியக்குழுக்கூட்டத்தில்
RULE 8 மாற்றல்களுக்கு தடையேதும் இல்லை
என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே அதனை தனி விளக்க உத்திரவாக
மாநில நிர்வாகங்களுக்கு அனுப்பிட
நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
================================================
நாலு கட்டப்பதவி உயர்வில் உள்ள குளறுபடிகளை நீக்குவதற்காக அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழு தனது அறிக்கையை இன்னும் நிர்வாகத்திற்கு அளிக்காமல் உள்ளது. எனவே அதனை விரைவு படுத்திட நமது மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.
================================================
வங்கிகளைப் போலவே நமக்கும் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டதாக கூறி போலியான டுபாக்கூர் உத்திரவு ஒன்று நம்மிடையே வலம் வந்தது. BSNLலில் எத்தனையோ பணிகள் இருக்கும்போது தங்களது பொன்னான நேரத்தை இது போன்ற வீண் செயல்களில் தோழர்கள் செலவிடுவது வருத்தத்திற்குரியது.
================================================
2016 புத்தாண்டிற்கான
நாட்காட்டி மற்றும் நாட்குறிப்புகளை
(தமிழில் சொல்வதென்றால்... காலண்டர் மற்றும் டைரி )
அச்சிட்டு வெளியிட BSNL தலைமை அலுவலகம்
மாநிலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
================================================
கருணை அடிப்படையிலான பணிகளுக்கு மரணமுற்ற ஊழியரின் மகன் அல்லது மகள் விண்ணப்பித்தால் அவர்களுக்கு பணி கிடைப்பதில்லை. மேலும் சொந்த வீடு இருந்தால் எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கப்பட்டு கருணைப்பணிக்கான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன.
இந்த நடைமுறையை மறுபரிசீலனை செய்து
புதிய மதிப்பெண் நடைமுறையை அமுல்படுத்திட
நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
================================================
போன் மெக்கானிக் இலாக்காத்தேர்வு எழுத
தற்போது SSLC கல்வித்தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
GR'D மற்றும் RM பதவிகளில் SSLC படித்த தோழர்கள் மிக மிகக்குறைவு. எனவே மேற்கண்ட கல்வித்தகுதியை சிறப்பு அனுமதியாக ஒரு முறை தளர்த்தி அனைவரும் தேர்வு எழுதிட வாய்ப்பு அளிக்கக்கோரி
நமது சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.