நமது மத்திய சங்கம்
BSNL நிர்வாகத்தைச் சந்தித்து
கீழ்க்கண்ட பிரச்சினைகளை விவாதித்துள்ளது.
- 2010ம் ஆண்டிற்குப்பின் JAO இலாக்காத் தேர்வு நடைபெறவில்லை. எனவே உடனடியாக காலியிடங்களைக் கணக்கிட்டு JAO தேர்வை அறிவிக்க மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும் எந்தெந்த கேடர்கள் மூன்றாம் பிரிவில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கும் விளக்கம் அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 78.2 சத IDA சம்பள நிர்ணய அடிப்படையில் வீட்டு வாடகைப்படி HRA வழங்கிட BSNL நிர்வாகத்தை மத்திய சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
- நிராகரிக்கப்பட்ட கருணை அடிப்படையிலான விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலிக்கவும், விபத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.
- தொழிற்சங்கங்கள் CORPORATE அலுவலகத்தில் அதிகாரிகளை சந்திப்பதற்கான நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. இது 01/12/2015 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
- கேடர் பெயர்மாற்றக்குழுவின் பரிந்துரையை மீண்டும் BSNL நிர்வாகக்குழுவிற்கு அனுப்பிட மத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.
- புதிய இணைப்புக்கள் கொடுப்பதற்கு பல்வேறு மாநிலங்களில் கேபிள்கள் இல்லாத நிலை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment