தீபா..வலி..
நாடு முழுக்க தீபாவளிக் கொண்டாட்டங்கள் களை கட்டி வருகின்றன..
ஆனால் மாடாய் உழைக்கும் நம் ஒப்பந்த ஊழியர்களுக்கு...
தீபாவளி... தீரா வலியாகவே உள்ளது
காரைக்குடி மாவட்டத்தில் இந்த மாதம்....
- 22 நாட்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
- மகாத்மா பிறந்த நாளுக்கு சம்பளம் மற(று)க்கப்பட்டுள்ளது.
- வார ஓய்வு வஞ்சம் கொண்ட நெஞ்சினாய் நிறுத்தப்பட்டுள்ளது...
- குறைந்த அளவே லாபம் கிடைப்பதால் போனஸ் கொடுக்க இயலாது என குத்தகைக்காரன் கைவிரிப்பு.
- தொழிலாளர் சட்ட அமுலாக்க அதிகாரி குறிப்பிட்ட 26 நாட்கள் சம்பளம் என்பதையும் வழங்குவதற்கு நிர்வாகத்திற்கு வழக்கம் போல் தயக்கம்.
- அடையாள அட்டை வழங்குவதில் கூட ஆண்டுக்கணக்கில் தாமதம்.
- மருத்துவ அட்டைக்கு தொழிலாளர்கள் போட்டாவிற்கு போஸ் கொடுத்ததோடு சரி..
- இறந்தால் சொர்க்கமோ நரகமோ கிடைக்கும்... இருக்கும்போதே EPF கிடைக்குமா? சத்தியமாகத் தெரியாது...
- கேபிள் பணியில் குழி தோண்டும் தோழர்களின் இரண்டு மாத சம்பளம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. குழியில் இருந்து அள்ளிய மண் அவர்கள் வயிற்றிலே விழுந்துள்ளது.
தனி மனிதனுக்கு உணவில்லையேல்
ஜெகத்தினை அழித்திடுவோம்....
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுக உலகியற்றியான்...
படிப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது...
இன்று மாலை அனைவருக்கும் வங்கியில் வரவு வைக்க பட்ட பணம் எந்த அளவிற்கு தோழர்களுக்கு போதுமானதாக இருக்கும் என தெரியவில்லை, ஒவ்வொரு தோழரின் முகத்திலும் ஒரு வேதனை தெரிந்தது, அவர்களின் வயிற்றெறிச்சலும் தெரிந்தது,,, சங்கம் ஏதேனும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர், அதற்கு 100 சதம் ஆதரவு தேவகோட்டையில் உண்டு தோழரே,,,, ஏஏஏதேனும் செய்ய வேண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக நன்றி வேதனையுடன் தேவகோட்டை கிளை
ReplyDeleteஇன்று மாலை அனைவருக்கும் வங்கியில் வரவு வைக்க பட்ட பணம் எந்த அளவிற்கு தோழர்களுக்கு போதுமானதாக இருக்கும் என தெரியவில்லை, ஒவ்வொரு தோழரின் முகத்திலும் ஒரு வேதனை தெரிந்தது, அவர்களின் வயிற்றெறிச்சலும் தெரிந்தது,,, சங்கம் ஏதேனும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர், அதற்கு 100 சதம் ஆதரவு தேவகோட்டையில் உண்டு தோழரே,,,, ஏஏஏதேனும் செய்ய வேண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக நன்றி வேதனையுடன் தேவகோட்டை கிளை
ReplyDeleteReally sad to see contract workers on yesterday,sterday happens to see some of my group contract workers felt very sad.,but they working even on Sundays,then on what basis management deducting the salary?let them come and work in groups eclxchanges,then only they knew the reality,in most places contract workers only running the exchange alone,then huv can their salary deducted?its very very pathatic.if management want to cut down expenditure ,they can do it on number of ways..fan always running in all rooms,dept cars missuse,without changing the Excg battery pouring the diesel like water..but not at the cost of miserable contract workers...
ReplyDeleteyes you are right mr pitchai selvaganapathy sir, so many vechiles are used for their own purposes. if you go to any switch room , then you can see number of cards kept under repair or not used if we try to mis using details of officers and management , then we cannot complete in this blog
Delete