Sunday, 6 November 2016

 திசையெட்டும் பரவட்டும்...

நனவான கனவுகளின்... 
நீண்ட பாதையில்
சில மைல் கற்களை... 
பெயர்த்தெடுத்திருக்கலாம்...

அவசரமாக அவற்றை 
குழிதோண்டி புதைத்திருக்கலாம்....

எனினும்... 
முளைத்துக் கொண்டேயிருக்கும்...
புதிய மைல்கற்கள்...
புதிய பயணத்தில்...
புதிய பாதையை நோக்கி...

எதிரிகள்... நம்..
நனவுகளை நொறுக்கலாம்...
கனவுகளை என்ன செய்வார்கள்?

எங்கள் போர் மீண்டும் வெடிக்கும்...
இதயங்கள் மீண்டும்  துடிக்கும்...
லெனின் மீண்டும் வருவார்...
நவம்பர் மீண்டும் மலரும்...

ரஷ்ய நாட்டுத் திரைப்படப் பாடல் 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அனைவருக்கும் நவம்பர் -7
பொதுவுடைமைப் புரட்சி தின வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment