Friday 4 November 2016

முத்தரப்பு பேச்சுவார்த்தை 


சம வேலைக்கு சம ஊதியம் என்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் BSNL  நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அவரவர்கள் செய்யும் பணிக்கேற்ற ஊதியம் வழங்கிடக்கோரி NFTCL மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் சென்னை DEPUTY C.L.C.,  துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையரிடம் வழக்குத் தொடுத்திருந்தார். 

பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 
 25/10/2016 அன்று DEPUTY C.L.C.,  நமது நிர்வாகத்திற்கு அளித்திருந்த கடிதத்தில்  BSNLலில் பணிபுரியும்  ஒப்பந்த ஊழியர்களில்..

கேபிள் பணி புரிவோர்...
காவல் பணி புரிவோர் 
அலுவலகங்களில் எழுத்தர் பணி புரிவோர்..

ஆகியோருக்கு  அந்தந்தப் பணிகளுக்குரிய சம்பளம் வழங்கிடவும் 
இது சம்பந்தமான அறிக்கையை சென்னை மற்றும் தமிழ் மாநில நிர்வாகங்கள்   04/11/2016 அன்று நடைபெறவுள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது சமர்ப்பிக்க வேண்டும் 
எனவும் குறிப்பிட்டிருந்தார்.

04/11/2016 அன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு 
நமது நிர்வாகம் வழக்கம் போலவே வந்திருந்தது. DEPUTY C.L.C.,யின் 25/10/2016 கடிதத்தில் உள்ள வழிகாட்டுதல்களை அமுல்படுத்துவதற்குப் பதிலாக அந்தக் கடிதத்தின் மீது மாவட்ட நிர்வாகங்களின் கருத்துக்களை தமிழ் மாநில நிர்வாகம் கேட்டிருந்தது. 

இது முறையற்ற செயல் என்று குறிப்பிட்ட DEPUTY C.L.C.,  
நமது BSNL  நிர்வாக அதிகாரிகளைக் கடிந்து கொண்டார்.

மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள BSNL நிறுவனம் 
ஒரு முன்மாதிரியான முதலாளியாக இருக்க வேண்டும் எனவும்... தொழிலாளர் நலச்சட்டங்கள் எந்தவிதத்  தயக்கமும் இன்றி அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் உறுதிபட எடுத்துரைத்தார்.  

தற்போதைய உச்ச நீதிமன்ற உத்திரவை நினைவூட்டிய DEPUTY C.L.C., அவர்கள் BSNL நிறுவனம் உச்ச நீதிமன்ற உத்திரவை மதிக்க வேண்டும் எனவும் சமவேலைக்கு சம சம்பளம் என்ற கொள்கையை அமுல்படுத்த வேண்டும் எனவும் மீண்டும் தெளிவுபடக் கூறினார். 

BSNL நிறுவனம் அமுல்படுத்த தயங்கும் பட்சத்தில்
 சட்ட ரீதியான நடவடிக்கைகள் நிர்வாகத்தின் மீது  
நிச்சயம் எடுக்கப்படும் என்பதனையும் கூறினார். 

வரும் 23/11/2016 அன்று இறுதிக்கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும். அதற்கு முன்பாக சம வேலைக்கு சம ஊதியம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு 
மாநில நிர்வாகம் உரிய உத்திரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் 
எனவும் உத்திரவிட்டுள்ளார்.

04/11/2016 கூட்டத்தில் 
தமிழ் மாநில நிர்வாகத்தின் சார்பாக 
உதவிப்பொது மேலாளர்  திரு.ஆஞ்சநேயன் அவர்களும்...
சென்னை மாநில நிர்வாகத்தின் சார்பாக 
உதவிப்பொது மேலாளர்  திருமதி.சங்கரி  அவர்களும்...

NFTCL சார்பாக மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன்,
காரைக்குடி மாவட்டச்செயலர் தோழர்.மாரி...
சென்னைத் தோழர்கள் பாபு... இளங்கோ ஆகியோரும்...

TNTCWU சார்பாக தோழர்கள். முருகையா... பழனிச்சாமி 
ஆகியோரும் கலந்து கொண்டனர்...

மிகுந்த மனித நேயத்துடன் ஊழியர் தேவைகளைப் பரிசீலித்த 
துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையர் 
திரு,ஸ்ரீவத்சவா அவர்களுக்கு நமது நன்றியும் வணக்கங்களும்....

நமது மாநில நிர்வாகங்களும் மனித நேயத்தோடு
 தங்களது பொறுப்பை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்...

No comments:

Post a Comment