குறைந்த பட்சக்கூலியைக் கொடு...
|
குறைந்த பட்சக்கூலி கேட்டு சிகாகோவில் தொழிலாளர்கள் போராட்டம் |
கூலியைக் கொடு...
குறைந்த பட்சக்கூலியைக் கொடு...
இது உலகெங்கும் எதிரொலிக்கும்
தொழிலாளர்களின் உரிமைக்குரல்...
இந்தியாவில்...
1948ல் குறைந்த பட்சக்கூலிக்கான சட்டம் இயற்றப்பட்டது...
ஆனாலும் இன்றுவரை தொழிலாளர்கள்
குறைந்த பட்சக்கூலி கேட்டுப் போராடித்தான் வருகிறார்கள்...
சட்டங்களும்... திட்டங்களும் இந்தியாவில் ஏராளம் உண்டு...
ஆனாலும் அவைகள் மக்களைச் சென்றடைவதில்லை...
ஒருவர் இன்புற...
ஓராயிரம் பேர் துன்புற...
இந்த இழிநிலைதான் இன்று...
இந்தியாவில் நாம் காணும் காட்சி...
ஏழாவது ஊதியக்குழு...
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படைச்சம்பளம்
மாதம் ரூ.18000/= வழங்கியுள்ளது...
ஆனால் அடிமட்ட ஊழியர்களுக்கு...
மாதம் ரூ.9100/= என்பதே இன்றைய
குறைந்தபட்சக்கூலியாக மத்திய அரசு அறிவித்துள்ளது...
2014ல் அமுல்படுத்தப்பட வேண்டிய
குறைந்தபட்சக்கூலி 2017ல்தான் அமுலாகியுள்ளது...
தற்போதைய கூலி நிலவரம்...
UNSKILLED WORKER
தொலைபேசி நிலையங்களில் பணி செய்வோருக்கு...
A பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.523/=
B பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.437/=
C பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.350/=
WATCH AND WARD WITHOUT ARMS
காவல் பணி செய்வோருக்கு...
A பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.637/=
B பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.579/=
C பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.494/=
கேபிள் பணி செய்வோருக்கு...
A பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.579/=
B பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.494/=
C பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.410/=
CLERICAL DUTY
அலுவலகங்களில் எழுத்தர் பணி செய்வோருக்கு...
A பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.637/=
B பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.579/=
C பிரிவு நகரம் - நாளொன்றுக்கு ரூ.494/=
மேற்கண்ட கூலி 19/01/2017 முதல் அமுலுக்கு வருகிறது...
தற்போது நமது பகுதியில் ஒப்பந்த ஊழியர்கள்...
HOUSE KEEPING, CABLE MAINTENANCE, WATCH AND WARD
ஆகிய பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்...
HOUSE KEEPING என்ற பெயரில் தொழிலாளிகள்
சுத்தம் செய்தல், துப்புரவுப்பணி, அலுவலகப்பணி,
கணிப்பொறியில் வேலை செய்தல், எழுத்தர் பணி மற்றும் என்னென்ன பணிகளில் ஈடுபடுத்தப்படுமோ அனைத்திலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஆனால் அனைவரும்
திறனற்ற தொழிலாளி - UNSKILLED
என்று பெயரிடப்பட்டு...அவர்களுக்கு..
ஒரே விதமான கூலியே வழங்கப்படுகிறது...
சம வேலைக்கு சம ஊதியம் என்று சட்டம் சொன்னாலும்...
உச்ச நீதிமன்றம் உரக்க சொன்னாலும்...
அது இன்னும் கானல் நீராகவே உள்ளது...
காரணம் படித்தவர்கள் செய்யும் பாவமே...
எனவே...
அவரவர் செய்யும்...
பணிக்கேற்ற கூலி என்பதே...
நமது கோரிக்கையாகும்..
நமது முழக்கமாகும்...
நமது இலட்சியமாகும்...
பணிக்கேற்ற கூலி என்னும்
நம் கோரிக்கை வலுப்பெற...
பிப்ரவரி 11- 12ல்
NFTCL ஒப்பந்த ஊழியர்
தமிழக மாநில மாநாட்டில்
காரைக்குடியில் கூடுவோம்...
கரம் உயர்த்துவோம்...
களம் காண்போம்...
வாரீர்... தோழர்களே...