Wednesday 4 January 2017

ஈட்டுறுதி திட்டம் ESI வரம்புயர்வு


ESI எனப்படும் ஈட்டுறுதித்திட்டத்தில்  மாதம் 15000 வரை ஊதியம் பெறுபவர்கள் மட்டுமே சேரமுடியும். 01/01/2017 முதல் ஊதிய வரம்பை 21000 என உயர்த்தி மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது. இனிமேல் மாதம் 21000 வரை ஊதியம் பெறும்  ஊழியர்கள் இத்திட்டத்தின் பலனை அனுபவிக்கலாம்.

தற்போது 7.89 கோடி ஊழியர்கள் ESI திட்டத்தில் உறுப்பினராக உள்ளனர். சம்பள வரம்பு உயர்த்தப்பட்டதையொட்டி கூடுதலாக 
35 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.

ESI திட்டத்தில் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 1.75 சதமும் ஒப்பந்தக்காரர்கள்  அல்லது முதலாளிகள் 4.75 சதமும் பங்களிப்பு செய்ய வேண்டும்.

நமது  பகுதியில் ESI திட்டம் ஒப்பந்த ஊழியர்களுக்கு அமுல்படுத்தப்படுகிறதா? என்பதைக் கருத்தரங்கம் போட்டுத்தான் அறிய வேண்டும்... தெளிய வேண்டும்...

No comments:

Post a Comment