Sunday 29 January 2017

உணர்வு மங்காத  உப்பு...

1930...
ஆங்கிலேய ஆட்சியில்...
உணர்வற்று இருந்த மக்களை
உப்பு என்ற  ஒற்றைச்சொல் உசுப்பேற்றியது...

உப்புக்கு வரி என்னும் கொடுமை எதிர்த்து...
அண்ணல் காந்தி தண்டி யாத்திரையைத் தொடங்கினார்...
23 நாட்கள்... 240 மைல் தூரம்...
லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம்...
80000 மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்...
உலகின் மாபெரும் போராட்டமாக...
உப்புச் சத்தியாக்கிரகம் பேசப்பட்டது...

87 ஆண்டுகள் கழிந்த பின்னும்...
இந்திய தேசத்தில்... 
தமிழகத்தின் இளையவர்கள் 
அண்ணலின் அறவழி நின்று 
அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளனர்...
அண்ணல் காந்தி மறைந்தாலும்...
அவரது அறவழி என்றும் மறையாது...
உலகிற்கு அதுவே ஒளி விளக்கு...

இன்று ... 30/01/2017
அண்ணல் காந்தி நினைவு தினம்...
தேசத்தந்தையைப் பெருமையுடன் 
நினைவு கூர்வோம்...

அண்ணல் காந்தி அமரத்துவ தினம் 
தியாகிகள் தின சிறப்புக் கூட்டம் 
30/01/2017 - சிவகங்கை 
பங்கேற்பு 
தோழர்.குணசேகரன் 
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 
மற்றும் பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள்...
தோழர்களே... வாரீர்...

No comments:

Post a Comment