Tuesday 3 January 2017

மருத்துவப்பரிசோதனை

நேற்று  03/01/2017  CORPORATE அலுவலக INTRANETல்  போடப்பட்டிருந்த 
ஒரு உத்திரவைப்  பார்த்தபோது நமக்கு  மயக்கம் வந்து விட்டது. 

அந்த உத்திரவில் GM பதவிக்கு கீழே உள்ள ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளலாம் எனவும் ரூ.3500/- வரை பரிசோதனைச் செலவு ஈடுகட்டப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. 3000 ரூபாய் போனசிற்கே இழுத்தடித்த நிர்வாகம்... யாருமே  கோரிக்கை வைக்காமல்   அனைத்து ஊழியர்களுக்கும் மருத்துவ பரிசோதனைத் திட்டத்தை இவ்வளவு எளிதாக ஆண்டு தோறும் தந்து விடுமா என்ற சந்தேகம் யாருக்கே எழுவது இயல்புதான்...


தற்போது BSNLலில் ஊழியர்களுக்கு சேமநலத்திட்டத்தில் 
ஆயுளில் ஒரேயொரு முறை மட்டுமே  
மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளலாம். 

உயர் அதிகாரிகளுக்கு இரண்டு  வகையான மருத்துவப் பரிசோதனைத்திட்டம் அமுலில் உள்ளது.  
ஒன்று SAG பதவிகளும் அதற்கு மேலுள்ளவர்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை அவர்களது துணையோடு SPOUSE ரூ.3500/- வரை உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம். 

இரண்டாவதாக  
PGM,CGM, CMD மற்றும் வாரிய உறுப்பினர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பரிசோதனை ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் துணையோடு ரூ.10000/= வரை பரிசோதனை செய்து கொள்ளலாம். மேற்கண்ட திட்டங்கள் 31/03/2017 வரை மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது.  மேற்கண்ட திட்டம் 
50 முதல் 55 வயது வரை ஆண்டுக்கு ஒரு முறையும்,
55 வயதைக் கடந்தவர்களுக்கு  ஆண்டுக்கு இரு முறையும் பொருந்தும். 

தற்போது இரண்டு உத்திரவுகளை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதிகாரிகளுக்கான மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தில் 
வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.  இதில் நமக்கு சந்தேகம் இல்லை.

மற்ற  உத்திரவில்தான் சந்தேகங்கள் எழுகின்றன...
  • உத்திரவு 03/01/2017 அன்று INTRANETல் வெளியிடப்பட்டிருந்தாலும் உத்திரவு தேதி 03/01/2016 என்று உள்ளது. இதை எழுத்தர் பிழை என்றே எடுத்துக்கொள்ளலாம்.
  • GM பதவிகளுக்கு கீழே உள்ள ஊழியர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது EMPLOYEES என்று உள்ளது. EXECUTIVES என்பதற்குப் பதில்  EMPLOYEES என்று தவறுதலாக போட்டார்களா? இதையும்  எழுத்தர் பிழை என்றே எடுத்துக்கொள்ளலாமா?
  • இந்த திட்டம் ஒருமுறைத் திட்டமா? எது வரை செல்லும்? 
மீண்டும் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டாலொழிய மேற்கண்ட உத்திரவைப் படிக்கும் எவருக்கும் சந்தேகம் எழுவது இயல்பே.மருத்துவ வசதிகள் அதிகாரிகள் ஊழியர்கள் பாகுபாடு பார்த்து அளிக்கப்படுவது அநீதியாகும்.
ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்படுவதுதான் முறையாகும்.

தற்போது...
பரிசோதனை அவசியம்...
ஊழியர்களுக்கும்... உத்திரவிற்கும்...

No comments:

Post a Comment