ஊழியர் வருங்கால வைப்பு நிதி
EMPLOYEES PROVIDENT FUND - EPF
BSNLலில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு அவர்களது அடிப்படைச்சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதம் EPF
சந்தா தொகையாக பிடித்தம் செய்யப்படுகின்றது.
அதே அளவு 12 சதம் நிர்வாகத்தாலும்
அவர்களது வைப்பு நிதிக்கு நிர்வாகப்பங்களிப்பாக
வழங்கப்படுகின்றது.
நிர்வாகம் வழங்கும் 12 சத பங்களிப்புத்தொகையில்
8.33 சதம் ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கும்(EPS)
3.67 சதம் EPFக்கும் பிரித்தளிக்கப்படுகின்றது.
EPF விதிகளின்படி ரூ.6500/= சம்பளம் வரை 8.33 சத அடிப்படையில் ஓய்வூதியத்திற்கு பங்களிப்பு வழங்கலாம் .
இதில் இரண்டு வித திட்டங்கள் உள்ளன.
8.33 சதம் என்பது அதிகபட்சமாக ரூ. 6500/= சம்பளம் வரை கணக்கிடப்பட்டு ஓய்வூதியத்திற்கு வழங்கப்படும்.
8.33 சதம் என்பது ஊழியர் வாங்கும் மொத்த சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு ஓய்வூதியத்திற்கு வழங்கப்படும்.
உதாரணமாக அடிப்படைச்சம்பளம் மற்றும் அகவிலைப்படி ரூ.10,000/= பெறும் ஊழியர்களுக்கு ரூ.1200/= நிர்வாகப்பங்களிப்பாக வழங்கப்படும்.
இதில் 6500க்கு 8.33 சதம் என்ற அடிப்படையில் ஓய்வூதியத்திற்கு ரூ.780/=ம் மீதமுள்ள
ரூ.420/=EPFக்கும் பிரித்தளிக்கப்படும். அடுத்து
10000க்கு 8.33 சதம் என்ற அடிப்படையில் ரூ. 833/= ஓய்வூதியத்திற்கும் மீதமுள்ள ரூ.367/= EPF க்கும் பிரித்தளிக்கப்படும்.
இதற்கு ஊழியர்கள் விருப்பம் தெரிவிக்க வேண்டும்.
இதில் பல மாநிலங்களில் பலவிதமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் 6500க்கு மட்டுமே ஓய்வூதிய கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. கூடுதலாக ஓய்வூதிய பலனை அடைய விரும்பிய ஊழியர்கள் மொத்த சம்பளத்தில் ஓய்வூதியக்கணக்கீடு செய்ய கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் BSNL நிர்வாகம் EPF நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டது. EPF நிர்வாகம் ஏற்கனவே உள்ள திட்டங்களில் மாற்றம் செய்ய இயலாது என கூறியுள்ளது. புதிதாக பணியில் சேரும் ஊழியர்கள் மட்டுமே இதற்கான விருப்பத்தை தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே பணியில் உள்ள தோழர்கள் தங்களுக்கு எந்த முறையில் ஓய்வூதிய பங்களிப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை தெரிந்து கொள்வது நல்லது.
(மேலும் விளக்கம் வேண்டுமெனில் 9486102027)