Tuesday, 16 July 2013

BSNL நேரடி நியமன ஊழியரின் ஓய்வூதிய பலன் 

01/10/2000க்குப்பின் BSNLலில் பணியில் சேர்ந்த நேரடி நியமன ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் 
என்பது நமது நீண்ட நாள் கோரிக்கையாகும். 
ஜூன் 2012 உடன்பாட்டின்படி இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. 
அந்த குழுவின் பரிந்துரையின்படி BSNLலில் பணி நியமனம் செய்யப்பட்ட தோழர்களுக்கு  மாதம் அவர்களது அடிப்படைச்சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 2 சதம் BSNL தனது பங்களிப்பாக செலுத்தும். 
உதாரணமாக தற்போது அடிப்படைச்சம்பளம் ரூ. 10000/= பெறுவோருக்கு மாதம் ரூ.358/= பங்களிப்பாக செலுத்தப்படும். 
ஊழியர்களும் தங்களது பங்காக குறைந்த பட்சம் 2 சதம் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக அடிப்படைச்சம்பளம் மற்றும் அகவிலைப்படியை அப்படியே செலுத்தலாம். 
இது பற்றி  அனைத்து சங்கங்களிடமும் 22/07/2013க்குள்  
கருத்து தெரிவிக்குமாறு BSNL நிர்வாகம் கேட்டுகொண்டுள்ளது. 
DOT யின் அனுமதி பெற்ற பின்னர் இத்திட்டம் அமுல்படுத்தப்படும்.

No comments:

Post a Comment