வாலி...
நின் புகழ்... வாழி...
அன்னைத்தமிழை
அழகு வார்த்தைகளால்.. ஒப்பனை செய்து
கன்னித்தமிழாக வாழ வைத்தவன்..
வில்லால் வாலியை மறைந்து கொன்றான்
அன்றைய இராமச்சந்திரன்..
நான் ஆணையிட்டால்.. அது நடந்து விட்டால்.. என
சொல்லால் இராமச்சந்திரனை வெல்ல வைத்தான்
இன்றைய வாலி..
"தரை மேல் பிறக்க வைத்தான்" என..
பாட்டால் மக்கள் பாட்டை உணர வைத்தான்..
பாட்டால் பலரை பாராள உயர வைத்தான்..
எதுகை மோனை உள்ளளவும்..
எளியோர் துயர் தீரும் மட்டும்..
இவன் புகழ் நிலைத்திருக்கும்..
அகன்ற அலைவரிசை எங்கள் பகுதி தொலைபேசியகத்தில் கோளாறு ... வாலி மறைவு செய்தி என்னால் இடமுடியவில்லை ...
ReplyDeleteஎம் ஜி ஆரும்... சிவாஜியும்... இராண்டாம் முறை இறந்தார்கள் டிஎம்எஸ் இறந்தபொழுது...இப்பொழுது
மூன்றாம் முறை இறந்துள்ளார்கள்
விஜய் குடந்தை