Friday, 28 February 2014

சென்னை கூட்டுறவு சங்கத்தேர்தல் 
காரைக்குடி மாவட்ட
 வேட்பாளர் பட்டியல் 

சென்னை கூட்டுறவு சங்கத்தேர்தலுக்கான 
வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

காரைக்குடி மாவட்டத்திற்கான 
இரண்டு RGB இடங்களுக்கு 
NFTE சார்பில் இரண்டு தோழர்களும்,
BSNLEU சார்பில் இரண்டு தோழர்களும்,
FNTO  சார்பில் இரண்டு தோழர்களும் 
களத்தில் உள்ளனர்.

வேட்பாளர் பட்டியல் 

1. R . செழியன்              TTA   காரைக்குடி     BSNLEU 

2. R. கண்ணன்              TTA   காரைக்குடி      FNTO 

3. S. முனியாண்டி       TM     காரைக்குடி     FNTO 

4.  A. இராஜேந்திரன்    TM தேவகோட்டை  BSNLEU 

5.  KR. சேதுபதி          TM  காரைக்குடி NFTE 

6. V. சுப்பிரமணியன்  TM  இராமநாதபுரம்   NFTE  
============================================
தோழர்களே..
ஊழலை எதிர்த்து அஞ்சாமல் நின்றிட 
ஊழியர் நலன் ஆறாய்ப்  பெருகிட 

வாக்களிப்பீர்..
வரிசை எண்கள் 

  




Thursday, 27 February 2014

BSNL அனைத்து அதிகாரிகள் 
ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு 
BSNL -- MTNL இணைப்பு 
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 

ஊழியர் பிரச்சினைகள் , ஓய்வூதியம்,பங்கு விற்பனை 
ஆகியவற்றை முறைப்படுத்தாது 
BSNL MTNL இணைப்பில் முனைப்புக்காட்டும் 
அரசின்  அவசர கோல முடிவை எதிர்த்து 

இன்று 28/02/2014 - வெள்ளிக்கிழமை 
மாநிலம் மற்றும் மாவட்டத்தலைநகரங்களில் 
மதிய உணவு இடைவேளையில் 

அனைத்து அதிகாரிகள் 
ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக 
கண்டன ஆர்ப்பாட்டம்.

காரைக்குடியில் 
பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக 
மதியம் 12.30 மணிக்கு 
ஆர்ப்பாட்டம் நடைபெறும் 

தோழர்களே..
MTNL-BSNL இணைப்பை தடுப்போம்..
ஊழியர் தரப்பை ஊதாசீனப்படுத்தும் போக்கை நிறுத்துவோம்...
வாழ்த்துக்கள் 

இன்று 28/02/2014 
 பணி நிறைவு பெறும் 

NFTE  இயக்கத்தின்  விசுவாசி 

எந்நாளும் அயராத உழைப்பாளி 

அன்புத்தோழர்.
K. சேவுகன் 
TM - இராமநாதபுரம் 

அவர்களின் 
பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க 
வாழ்த்துகின்றோம்.

========================================================================
இன்று ஒருவேளை ஓய்வு வயது உயர்த்தப்பட்டால் 
இன்னும் ஈராண்டிற்கு  பணிஓய்வுக்கு.. பெரும் ஓய்வு..
RED SALUTE 
COM. UMRAOMAL PUROHIT 


மத்திய அரசு ஊழியர்களின் ஒப்பற்ற தலைவரும் 
தேசிய கூட்டாலோசனைக்குழு செயலரும் 
AIRF இரயில்வே தொழிற்சங்கப்பிதாமகரும்  
தொழிலாளர் மேம்பாட்டிற்காக 
தோழர்.குப்தாவுடன் தொடர்ந்து 
தோள் கொடுத்தவருமான 

தோழர்.உம்ரமால் புரோஹித் 

இன்று 27/02/2014 அதிகாலை 
மும்பையில் இயற்கை எய்தினார்.
அவரது மறைவு 
மத்திய அரசு ஊழியருக்கு பேரிழப்பு.
வாழ்நாளெல்லாம் 
தொழிலாளருக்காக 
வாழ்ந்து மறைந்த 
தலைவரை 
வணங்குவோம்..

Wednesday, 26 February 2014

JCM தேசியக்குழு 
NFTE எழுப்பியுள்ள பிரச்சினைகள் 

சென்ற JCM கூட்டத்தில் NFTE  சார்பாக 
17 பிரச்சினைகள் கொடுக்கப்பட்டன. 
ஆனால் 10 பிரச்சினைகள் மட்டுமே நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டது.  JCM  கூட்டத்தில் நாம் எழுப்பிய எதிர்ப்பின் காரணமாக 
மிச்சம் உள்ள 7 பிரச்சினைகளும் எதிர்வரும் 
JCM கூட்டத்தில் விவாதிக்கப்படும் என ஒப்புக்கொள்ளப்படடுள்ளது. 
அத்துடன் 3 புதிய பிரச்சினைகளையும் சேர்க்க கோரி ஊழியர் தரப்புச்செயலருக்கு நமது பொதுச்செயலர் கடிதம் அளித்துள்ளார்.

நாம் எழுப்பியுள்ள பிரச்சினைகள் 
  • JTO பதவியில் OFFICIATING செய்யும் தோழர்களின் பதவி  நிரந்தரம்.
  • SC/ST  காலியிடங்களை நிரப்புதல் 
  • JAO/JTO தேர்வு முறைகளை எளிமைப்படுத்துதல்.
  • MANAGEMENT TRAINEE தேர்வுக்கு ஊழியர்களை அனுமதித்தல்.
  •  TSM ஆகப்பணிபுரிபவர்களை நிரந்தரப்படுத்துதல். 
  • JAO/JTO ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல்.
  • பயிற்சிக்கால உதவித்தொகையை STIPEND உயர்த்துதல்.
  • மகளிருக்கு கூடுதலாக 12  சிறுவிடுப்பு வழங்குதல்..
  • ஒழுங்கு நடவடிக்கைகளை DISC.CASES விரைந்து முடித்தல்.
  • 01/10/2000ல் நிரந்தரம் ஆன TSM தோழர்களுக்கு BSNL ஏற்பு உத்திரவு வழங்குதல்.

Tuesday, 25 February 2014

பரமக்குடியில் CGM
3G  சேவை துவக்கம்...

இன்று 25/02/2014 பரமக்குடியில் 
தமிழக CGM 3G சேவையைத்துவக்கி வைத்தார். 

நாம் 3G சேவையை காரைக்குடி பகுதியில் துவங்கும் நேரத்தில் பல இடங்களில் RELIANCE நிறுவனம் 4G சேவையை துவங்குவதற்காக 
குழி தோண்ட ஆரம்பித்துள்ளது. 

இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் 4G சேவை தரப்படும் என RELIANCE நிறுவனம் கூறியுள்ளது. தற்போது 3G சேவை அதிகபட்சம் 4mbps வேகத்தில் செயல்படுகின்றது. ஆனால் 4G சேவை அதிகபட்சம் 49mpbs வேகத்தில் செயல்படும் என கூறப்படுகின்றது. 

3G சேவையை விட 12 மடங்கு வேகத்தில் 4G  செயல்படும். 
600 megabyte அளவுள்ள திரைப்படத்தை 
இரண்டே நிமிடத்தில் தரவிறக்கம் செய்யலாம். 

மேலும் 4G மூலம் 150 வழிகள் channels கொண்ட தொலைக்காட்சி சேவையையும் துவக்க RELIANCE நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

புதிய தொழில்நுட்பங்களை மக்களுக்கு உடனுக்குடன் 
வழங்குவதில் நாமும் முழு வேகம் காட்ட வேண்டும்.

இல்லையேல்.. வருங்காலம் நமக்குப்பெரும் 
சவால் என்பதில் ஐயமில்லை. 

Monday, 24 February 2014

பயன்மிகு பயிற்சிப் பட்டறை 

தோழர்களே..
வேலூரில் 22/02/2014 அன்று JCM  உறுப்பினர்களுக்கான 
பயிற்சிப்பட்டறை உற்சாகமுடன் நடைபெற்றது. 
தோழர். லட்சம் தலைமையேற்று நடத்தினார்.
தோழர்கள்.ஆர்.கே., முத்தியாலு, தமிழ்மணி, ஆகியோர் தங்களது கடந்த கால JCM அனுபவங்களையும் வருங்காலத்தில் நாம் செல்ல வேண்டிய வழிகள் பற்றியும் சிறப்புடன் எடுத்துரைத்தனர். 
மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்.சேது, 
அகில இந்திய அமைப்புச்செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் கருத்துரை வழங்கினர். 
வேலூர் பொதுமேலாளர் நிர்வாகத்திற்கே உரிய வியாபார மொழியில் தனது வாழ்த்துரையை வழங்கினார். 
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி JCMன் வரலாறு பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் இன்றுள்ள சூழலில் ஒற்றுமையுடன் ஊழியர் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
நினைவில் நின்ற வேலூர் தோழர்களின் காரசார  உணவு..
அதனினும் விட 
ஜார்க்கண்ட் மாநிலச்செயலர். தோழர்.மகாவீர்சிங் அவர்களின் காரசாரமான உரை பட்டறையின் சிறப்பம்சங்களாக அமைந்தது. 
காரைக்குடியில் இருந்து 8 தோழர்களும் , மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான  தோழர்களும் கலந்து கொண்டனர். 
பயிற்சிப்பட்டறை தந்த தோழர்.பட்டாபி அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

Sunday, 23 February 2014

இரங்கல் 

தேவகோட்டை 
தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த 
தோழர்.S.அழகு, TM 

உடல் நலக்குறைவால் 
23/02/2014 ஞாயி்று மாலை இயற்கை எய்தினார்.

இளமைக்காலம் தொட்டே 
இளைப்பு வியாதியால் 
அனுதினமும் அவதிப்பட்ட தோழன். 
மணவாழ்வு வாழாதவன்,
 மருந்துகளோடு வாழ்ந்தவன்.
உடல் இளைத்தாலும் சங்கத்தில் 
உருக்கு போன்று உறுதியாய் இருந்தவன்.

அவனது மரணம் இயக்கத்திற்கு இழப்பு. 
நமது இதயம் கசிந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.

Thursday, 20 February 2014

JC
கூட்டாலோசனைக்குழு 
பயிற்சிப்பட்டறை 

22/02/2014 - சனிக்கிழமை - காலை 10 மணி 
ஆதிலட்சுமி  தெய்வசிகாமணி திருமண மண்டபம்.
காட்பாடி தொலைபேசி நிலையம் அருகில் 
வேலூர்.

தலைவர்கள்
அதிகாரிகள் மற்றும் 
தலமட்டக்குழு உறுப்பினர்கள் 
பங்கேற்பு..

தோழர்களே.. வாரீர்.. வாரீர்..
அஞ்சலி 
தோழியர்.பார்வதி கிருஷ்ணன் 


மூத்த தொழிற்சங்கவாதியும் 
முதிர்ந்த பொதுவுடைமைவாதியும் 
சிறந்த பாராளுமன்றவாதியுமான

தோழியர்.பார்வதி கிருஷ்ணன் 

அவர்களின்  மறைவிற்கு 
நமது அஞ்சலி..
மானுடம்.. வென்றதம்மா 


மரணத்தை விட மரணத்தின் நாளுக்காக 

காத்திருப்பது கொடுமையானது..

தவறு செய்யாத எங்களுக்காக 

தமிழர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுத்தது 

காலக்கல்வெட்டில்  

உயர்ந்த உணர்வாக அழியாது நிற்கும்.

-பேரறிவாளன் -


Tuesday, 18 February 2014

சென்னைக்கூட்டுறவு 
சங்கத்தேர்தல் 

நடைபெறவுள்ள 
சென்னைக்கூட்டுறவு சங்கத்தேர்தலில் 
காரைக்குடி மாவட்டத்திற்கான 
2 RGB இடங்களுக்கு NFTE  சார்பாக 

தோழர். வே.சுப்பிரமணியன்,
 TM, இராமநாதபுரம் 

தோழர்.கரு.சேதுபதி, 
TM, காரைக்குடி 

ஆகியோர் போட்டியிடுவார்கள்.

இன்று 19/02/2014 திருச்சியில் 
தற்போதைய RGB அருமைத்தோழர்.சுந்தர்ராஜன் 
அவர்கள் தலைமையில் 
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும்.

நாணயத்தைக்காப்போம்..
கூட்டுறவு நாணய சங்கத்தின் 
நாணயத்தைக்காப்போம்..

Monday, 17 February 2014

வரவு செலவு  அறிக்கை 2014
BUDGET - 2014

2014-15க்கான இடைக்கால  வரவு செலவு அறிக்கை 
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • செல்தொலைபேசி,கார்,இருசக்கரவாகனம் ஆகியவற்றிற்கான  உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது.
  • 2009க்கு முந்தைய கல்விக்கடன் வட்டி தள்ளுபடி 
  • அரிசி மீதான சேவை வரி நீக்கம் 
  • இரத்த வங்கிகளின் மீதான சேவை வரி நீக்கம் 
  • முன்னாள் இராணுவத்தினருக்கு "ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்" திட்டம் அமுல் 
  • பெண்கள் முன்னேற்றத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு 
  • 6,60,000 கோடி மதிப்பிலான 296 வளர்ச்சித்திட்டங்களுக்கு அனுமதி
  • மானியங்களுக்கு 2,46,397 கோடி ஒதுக்கீடு 
  • விவசாயக்கடன் வழங்க 8,00,000 கோடி ஒதுக்கீடு
போன்ற சில சாதக அம்சங்கள் 
வரவு செலவில்  தென்படுகின்றன.

வருமான வரி விலக்கில் வழக்கம் போல் மாற்றம் இல்லை.
கூலித்தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச 
ஊதிய, ஓய்வூதிய உயர்வு இல்லை.
பொதுத்துறைக்கான  முதலீட்டுச்செலவு அதிகரிக்கப்படவில்லை.
பொதுத்துறைகளின் மீதான மூலதன விலக்கு 
DISINVESTMENT  விலக்கப்படவில்லை.
பொதுத்துறைகளை பாதுகாப்பதற்கான சிறப்பு திட்டங்கள் ஏதும் இல்லை.

பட்ஜெட்... வழக்கம் போல் 
பசி போக்கும் பட்ஜெட்டாக இல்லை.. 
பசி அறியா ப.சி.யின் பட்ஜெட்டாகவே உள்ளது.

Sunday, 16 February 2014

இராமேஸ்வரம் - இராமநாதபுரம் 
விழிப்புணர்வுக்கூட்டம் 

15/02/2014 அன்று திரு.சுப்பிரமணியன்,  இராமநாதபுரம் DE  தலைமையில் ஊழியர்கள் விழிப்புணர்வுக்கூட்டம் இராமேஸ்வரம் மற்றும் இராமநாதபுரம் ஆகிய இடங்களில்  சிறப்புடன் நடைபெற்றது.

துணைப்பொது மேலாளர் நிர்வாகம் திரு.ஜெயச்சந்திரன்,
துணைப்பொது மேலாளர் நிதி திரு.சந்திரசேகரன்,
BSNLEU  மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன், 
FNTO மாவட்டச்செயலர் தோழர்.முத்துக்குமரன், 
NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி 
ஆகியோர் கலந்து கொண்டு தங்களது 
கருத்துக்களை ஊழியர்களிடம்  முன்வைத்தனர்.


  • சாத்தியப்படாத இணைப்புக்களை சாத்தியப்படுத்துதல்                 (NON FEASIBILITY INTO FEASIBILITY )
  • அகன்ற அலைவரிசை இணைப்புக்களை பெருக்குதல்.
  • செல் இணைப்புக்களை கூடுதலாக்குதல்.
  • செல் கோபுரங்களை தடையின்றி பராமரித்தல். 
  • உடனுக்குடன் தொலைபேசி பழுதுகளை நீக்குதல்.
  • வருவாய் குறைவான தொலைபேசி நிலையங்களை மூடுதல். 
  • DATA CIRCUIT இணைப்புக்கள் அளிப்பதில் கவனம் செலுத்துதல்.
  • தொலைபேசி பில்களை நாமே பட்டுவாடா செய்தல் 
  • தொலைபேசி பாக்கிகளை வசூல் செய்தல் 
  • வாய்ப்புள்ள தொலைபேசி நிலையங்களில் மாதம் ஒரு முறை நேரில் சென்று தொலைபேசி கட்டணம் வசூல் செய்தல் 
  • நமது அலுவலக வளாகங்களில் வங்கி ATM அமைக்க முயற்சி மேற்கொள்ளுதல்.
  • காலியாக உள்ள நமது அலுவலகங்கள் மற்றும் ஊழியர் குடியிருப்புக்களை வாடகைக்கு விடுதல்.
  • நம்மை வளப்படுத்திய  BSNL நிறுவனத்தை நாம் வலுப்படுத்துதல்.
மேற்கண்ட கருத்துக்கள் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டன. 
தோழர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது பங்களிப்பைச் செலுத்தினர்.
BSNL வளம் பெற.. வலுப்பெற.. தோழர்கள் வேற்றுமை மறந்து ஒற்றுமையுடன்  கூடுதல் உழைப்பை செலுத்த வேண்டிய நேரமிது.
குருதி சிந்தி வளர்த்த இந்த நிறுவனத்தை
உறுதியுடன் நமது தோழர்கள் காப்பார்கள் என்பது நிச்சயம்.

சிறப்புக்கூட்டம் 

18/02/2014 - செவ்வாய்க்கிழமை 
மாலை 5 மணி 
NFTE  சங்க அலுவலகம் - காரைக்குடி 

தலைமை: தோழர்.சுந்தர்ராஜன் 

விவாதப்பொருள் 

  • சென்னை கூட்டுறவு சங்கப்பிரதிநிதிகள் தேர்தல் 
  • தலமட்டப்பிரச்சினைகள் 
  • இன்ன பிற..

தோழர்களே.. வருக..

Thursday, 13 February 2014

இயக்குநர்கள் நியமனம் 

BSNL நிறுவனத்திற்கு இயக்குநர்களை உடனடியாக 
நியமனம் செய்ய வேண்டும் என இலாக்கா அமைச்சருக்கு 
தோழர்.குருதாஸ் தாஸ் குப்தா எழுதிய கடிதத்தின் விளைவாக 
திரு.AN.ராய் (DIRECTOR HR) - மனிதவள இயக்குநராகவும் 
திரு.அனுபம் ஸ்ரீவத்சவா - (DIRECTOR FINANCE) - நிதி இயக்குநராகவும் 
கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளனர்.
தோழர்.குருதாஸ் MP அவர்களின் தலையீடு பாராட்டிற்குரியது.

======================================================================================
JCM மாநில, தலமட்டக்குழு உருவாக்கம் 

சில இடங்களில் NFTE  மற்றும் BSNLEU சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் தலமட்டக்குழு அமைப்பதில் தாமதம் உருவானது. ஏதேனும் ஒரு சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் இருந்தால் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தலமட்டக்குழுவை அமைத்துக்கொள்ளலாம் என BSNL நிர்வாகம் 13/02/2014 அன்று உத்திரவிட்டுள்ளது. 
======================================================================================

கருணை அடிப்படை வேலை 

கருணை அடிப்படை வேலைக்கான பரிசீலனையில் 2007க்கு முன் கணக்கீடு செய்யப்பட்ட குடும்ப ஓய்வூதியத்தை (PREREVISED PENSION  BEFORE  2ND PRC) கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என 22/10/2013 அன்று BSNL நிர்வாகம் வெளியிட்ட உத்திரவை வலியுறுத்தி கேரள மாநில நிர்வாகத்திற்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
கருணை அடிப்படைக்கான விதிமுறைகள் இன்னும் வெகுவாக தளர்த்தப்பட வேண்டும்.
======================================================================================

ஒப்பந்த ஊழியர் நலத்திட்டங்கள் 

ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை. 
அதுவும் குறித்த தேதியில் தரப்படுவதில்லை. 
அவர்களது வைப்பு நிதிக்கணக்கு EPF துவக்கப்படுவதில்லை.
மருத்துவ சிகிச்சைக்கான ESI அட்டை வழங்கப்படுவதில்லை.
விடுப்பு, சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை.
இதனை உடனடியாக தலமட்டங்களில் அமுல்படுத்தக்கோரி..
BSNL நிர்வாகம் மாநில நிர்வாகங்களுக்கு 
வழக்கம் போல் அறிவுறுத்தியுள்ளது.
======================================================================================
பாலு கேந்திரா 

பசுமையைப் படம் பிடித்தவன் 
இருளில் இலக்கணம் படைத்தவன் 

கதை சொன்ன காமிராக்களை 
கவிதை சொல்ல வைத்தவன் 

ஆந்திரத்து அழுக்குத்துணியை 
தமிழகத்து சில்க் ஆக்கியவன் 

மூன்றாம்  பிறையில் 
முத்திரை பதித்தவன் 

நித்திரை கெடுத்த 
வீடு தந்தவன் 

தரமிக்க படைப்புக்கள் தந்தவன் 
தலைமுறைகளைப்  படைத்தவன் 

கலைஞர்கள் மரிப்பதில்லை..
தினம் தினம் திரையில் பிறப்பவர்கள்..

அழியாத கலைஞனுக்கு அஞ்சலி எதற்கு?

Tuesday, 11 February 2014

இயக்குநர்கள் காலியிடம் 
தோழர்.குருதாஸ்தாஸ் குப்தா கடிதம் 

BSNL  நிறுவனத்தில் ஏறத்தாழ  40 சத இயக்குநர் 
DIRECTORS பதவிகள்  காலியாக உள்ளதாகவும்,  
பொறுப்பு மிக்க இந்த பதவிகளில் அதிகாரிகள் இல்லாததால் 
BSNL வளர்ச்சி தடைப்படுவதாகவும், 
 அதனால் உடனடியாக அந்தப்பதவிகளை நிரப்பக்கோரி
தோழர்.குருதாஸ்தாஸ் குப்தா 
நமது  இலாக்கா அமைச்சர் திரு.கபில்சிபல் 
அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

தற்போது இயக்குநர் மனிதவளம், நிதி உள்ளிட்ட 
மிக முக்கிய பதவிகள் காலியாக உள்ளதையும் 
தோழர்.குருதாஸ்தாஸ் குப்தா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Monday, 10 February 2014

பிப்ரவரி 11
சிந்தனைச்சிற்பி 
தோழர். சிங்காரவேலர் 
நினைவு நாள் 

பாட்டாளிகளுக்கு மேதினம் தந்தார்..
பகுத்தறிவை மேதினிக்குத்  தந்தார்..

மூடத்தை முடமாக்கினார்..
ஞாலத்தை சிவப்பாக்கினார்..

மாணவருக்கு மதிய உணவு தந்தார்..
தோழர்களுக்கு  மார்க்சீய உணர்வு தந்தார்..

பொதுவுடமை அரிச்சுவடி 
தொழிற்சங்க அகராதி
தோழர்.சிங்காரவேலர் 
நினைவைப்போற்றுவோம்..

Saturday, 8 February 2014

காரைக்குடி 
புத்தகத்திருவிழா 


14/02/2014 - வெள்ளிக்கிழமை 
மாலை 5 மணி 
கம்பன் மணி மண்டபம் - காரைக்குடி.

சிறப்புரை :- ஈரோடு 
மக்கள் சிந்தனைப்பேரவைத்தலைவர்  
தோழர்.ஸ்டாலின்குணசேகரன் 

தோழர்களே..  வருக..

வாசிப்பை... நேசிப்போம் ...
வாழ்வை... பிரகாசிப்போம்..

Thursday, 6 February 2014

ஓய்வூதியப்பங்களிப்பு 
PENSION CONTRIBUTION 

26/12/2013 அன்று கூடிய அமைச்சரவைக்கூட்டத்தில் 
MTNL  ஊழியர்களுக்கு BSNL ஊழியர்கள் போலவே 
ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது. 

01/01/2006ல் இருந்து MTNL ஊழியர்கள் பெறும் சம்பளத்தின் 
ACTUAL PAYன்  அடிப்படையில் ஓய்வூதியப்பங்களிப்பு 
இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

ஆனால் PENSION CONTRIBUTION என்பது BSNLலில் ஊழியர்கள் சம்பளத்தின் அதிகபட்சத்தில் MAXIMUM PAYல்  பிடித்தம் செய்யப்பட்டு அரசுக்கு செலுத்தப்பட்டது. இது சரியான முறை அல்ல என்றும் MTNL ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டதைப்போலவே BSNL ஊழியர்களுக்கும் ஓய்வூதியப்பங்களிப்பு 01/01/2006ல் இருந்து அவர்கள் பெற்ற சம்பளத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என உத்திரவிடக்கோரி 
இலாக்கா அமைச்சருக்கு நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது. 

இது அமுல்படுத்தப்பட்டால் நமது செலவினம் சற்றே குறையும்.

Tuesday, 4 February 2014

BSNL - MTNL இணைப்பு

நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த BSNL - MTNL இணைப்பு விவகாரம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 

04/02/2014 அன்று BSNL  நிர்வாகம் அனைத்து தொழிற்சங்கத்தலைவர்களிடமும்  இது குறித்த கருத்தை 
மூன்று தினங்களுக்குள் தெரிவிக்க கோரி கடிதம் அளித்துள்ளது. 

BSNL - MTNL இணைப்பு பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க  
DOT முன்னதாகவே ஒரு குழுவை நியமித்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி 
MTNLலில் ஏறத்தாழ 37000 ஊழியர்களும் 
BSNLலில் ஏறத்தாழ 193000 ஊழியர்களும் 
48000 அதிகாரிகளுமாக மொத்தம் 241000 பேர் பணி புரிகின்றனர். 
இணைப்பு ஏற்பட்டால் அதிகாரிகள் மட்டுமே அகில இந்திய அளவில் மாற்றலில் செல்ல வேண்டும். ஊழியர்களுக்கு பிரச்சினை இல்லை.
மத்திய அரசு ஊழியர்களின் 
ஏழாவது ஊதியக்குழு 

 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கான  7வது ஊதியக்குழு 
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி 

திரு.அசோக்குமார் மாத்தூர் 
தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக 
நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திரு.விவேக்ரே, திரு.ரத்தின் ராய் மற்றும் மீனா அகர்வால் 
ஆகியோர் குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

ஊதியக்குழு இரண்டாண்டு காலத்திற்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.
ஊதியக்குழு முடிவுகள் 01/01/2016 முதல் அமுல்படுத்தப்படும்.

உரிய காலத்தில் அமைக்கப்பட்ட 
ஊதியக்குழுவை வரவேற்போம்..

உடன் முடிவெடுக்கப்பணித்திட்ட 
தேர்தலுக்கு நன்றி சொல்வோம்..

Monday, 3 February 2014

செய்திகள் 

31/01/2014 அன்று கூடிய BSNL மறுசீரமைப்பிற்கான அமைச்சர்கள் குழு 
BSNL  மற்றும் MTNL  நிறுவனங்களுக்கு ஏறத்தாழ 8500 கோடி ரூபாய் கடனுதவி வழங்க முடிவு செய்துள்ளது. 
குறைந்த வட்டியில் பத்தாண்டு கால திருப்புத்தவணையில் இந்த கடன் வழங்கப்படும்.  ஊழியர்களின் சம்பள நிதிச்சுமையை எதிர்கொள்ள 
இந்த கடன்தொகை பயன்படுத்தப்படும். 

JTO  ஆளெடுப்பு விதிகளில் கீழ்க்கண்ட மாற்றங்களை 
நமது சங்கம் கோரியுள்ளது.

7 ஆண்டு சேவைத்தகுதி என்பது 3 ஆண்டுகளாக குறைக்கப்படவேண்டும்.
TM/SR.TOA  பதவிகளிலும் செய்த சேவையை 
கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
TM/SR.TOA  கேடர்களுக்கு தனியாக 10 சத பங்கீடு வழங்க வேண்டும்.
JTO தகுதித்தேர்வில் (SCREENING TEST ) தேர்ச்சியுற்ற அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும்.
அறிவியல் பட்டம் பெற்ற இலாக்கா ஊழியர்கள் 
தேர்வெழுத வகை செய்ய வேண்டும்.
இலாக்கா ஊழியர்கள் நேரடிப்போட்டியில் பங்கேற்கும்போது  
வயது வரம்பு 10 ஆண்டுகள் வரை தளர்த்தப்பட வேண்டும்.

01/02/2014 அன்று காரைக்குடியில் AIBSNLPWA  
ஒய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பாக தோழர்கள்.அருணாச்சலம், நாகேஸ்வரன்,அண்ணாமலை,முருகன்,பாண்டித்துரை ஆகியோர் அடங்கிய குழு நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களை சந்தித்து 
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குவது சம்பந்தமாக கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

ஊழியர்களின் பதவி பெயர்மாற்றக்குழுவில் (DESIGNATION  COMMITTEE)
NFTE  சார்பாக தோழர்கள் சந்தேஷ்வர்சிங்  மற்றும் மகாவீர்சிங் ஆகியோர் பிரதிநிதிகளாக செயல்படுவார்கள்.
பணி சிறக்க வாழ்த்துக்கள் 

காரைக்குடி மாவட்டத்தின் 
துணைப்பொதுமேலாளர் நிதியாக 
DGM(FINANCE )

அருமைத்தோழர். 
N. சந்திரசேகரன் 
அவர்கள் பணியேற்றுள்ளார்.

நிறைந்த நேர்மையும் 
மிகுந்த கடமை உணர்வும் கொண்ட தோழர்.

ஊழியர்கள் பிரச்சினை தீர்வில் 
BSNL  வளர்ச்சிப்பணிகளில் 
அவரது பணி சிறந்திட 
வாழ்த்துகின்றோம்.