இராமேஸ்வரம் - இராமநாதபுரம்
விழிப்புணர்வுக்கூட்டம்
15/02/2014 அன்று திரு.சுப்பிரமணியன், இராமநாதபுரம் DE தலைமையில் ஊழியர்கள் விழிப்புணர்வுக்கூட்டம் இராமேஸ்வரம் மற்றும் இராமநாதபுரம் ஆகிய இடங்களில் சிறப்புடன் நடைபெற்றது.
துணைப்பொது மேலாளர் நிதி திரு.சந்திரசேகரன்,
BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன்,
FNTO மாவட்டச்செயலர் தோழர்.முத்துக்குமரன்,
NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி
ஆகியோர் கலந்து கொண்டு தங்களது
கருத்துக்களை ஊழியர்களிடம் முன்வைத்தனர்.
- சாத்தியப்படாத இணைப்புக்களை சாத்தியப்படுத்துதல் (NON FEASIBILITY INTO FEASIBILITY )
- அகன்ற அலைவரிசை இணைப்புக்களை பெருக்குதல்.
- செல் இணைப்புக்களை கூடுதலாக்குதல்.
- செல் கோபுரங்களை தடையின்றி பராமரித்தல்.
- உடனுக்குடன் தொலைபேசி பழுதுகளை நீக்குதல்.
- வருவாய் குறைவான தொலைபேசி நிலையங்களை மூடுதல்.
- DATA CIRCUIT இணைப்புக்கள் அளிப்பதில் கவனம் செலுத்துதல்.
- தொலைபேசி பில்களை நாமே பட்டுவாடா செய்தல்
- தொலைபேசி பாக்கிகளை வசூல் செய்தல்
- வாய்ப்புள்ள தொலைபேசி நிலையங்களில் மாதம் ஒரு முறை நேரில் சென்று தொலைபேசி கட்டணம் வசூல் செய்தல்
- நமது அலுவலக வளாகங்களில் வங்கி ATM அமைக்க முயற்சி மேற்கொள்ளுதல்.
- காலியாக உள்ள நமது அலுவலகங்கள் மற்றும் ஊழியர் குடியிருப்புக்களை வாடகைக்கு விடுதல்.
- நம்மை வளப்படுத்திய BSNL நிறுவனத்தை நாம் வலுப்படுத்துதல்.
மேற்கண்ட கருத்துக்கள் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டன.
தோழர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது பங்களிப்பைச் செலுத்தினர்.
BSNL வளம் பெற.. வலுப்பெற.. தோழர்கள் வேற்றுமை மறந்து ஒற்றுமையுடன் கூடுதல் உழைப்பை செலுத்த வேண்டிய நேரமிது.
குருதி சிந்தி வளர்த்த இந்த நிறுவனத்தை
உறுதியுடன் நமது தோழர்கள் காப்பார்கள் என்பது நிச்சயம்.
No comments:
Post a Comment