வரவு செலவு அறிக்கை 2014
BUDGET - 2014
2014-15க்கான இடைக்கால வரவு செலவு அறிக்கை
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- செல்தொலைபேசி,கார்,இருசக்கரவாகனம் ஆகியவற்றிற்கான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது.
- 2009க்கு முந்தைய கல்விக்கடன் வட்டி தள்ளுபடி
- அரிசி மீதான சேவை வரி நீக்கம்
- இரத்த வங்கிகளின் மீதான சேவை வரி நீக்கம்
- முன்னாள் இராணுவத்தினருக்கு "ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்" திட்டம் அமுல்
- பெண்கள் முன்னேற்றத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு
- 6,60,000 கோடி மதிப்பிலான 296 வளர்ச்சித்திட்டங்களுக்கு அனுமதி
- மானியங்களுக்கு 2,46,397 கோடி ஒதுக்கீடு
- விவசாயக்கடன் வழங்க 8,00,000 கோடி ஒதுக்கீடு
போன்ற சில சாதக அம்சங்கள்
வரவு செலவில் தென்படுகின்றன.
வருமான வரி விலக்கில் வழக்கம் போல் மாற்றம் இல்லை.
கூலித்தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச
ஊதிய, ஓய்வூதிய உயர்வு இல்லை.
பொதுத்துறைக்கான முதலீட்டுச்செலவு அதிகரிக்கப்படவில்லை.
பொதுத்துறைகளின் மீதான மூலதன விலக்கு
DISINVESTMENT விலக்கப்படவில்லை.
பொதுத்துறைகளை பாதுகாப்பதற்கான சிறப்பு திட்டங்கள் ஏதும் இல்லை.
பட்ஜெட்... வழக்கம் போல்
பசி போக்கும் பட்ஜெட்டாக இல்லை..
பசி அறியா ப.சி.யின் பட்ஜெட்டாகவே உள்ளது.
No comments:
Post a Comment