|
நாட்டுக்கு உழைக்கும் நல்லோரை
நாடாளுமன்றம் அனுப்புவோம்..
|
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டத்தில் இராமநாதபுரம்,சிவகங்கை என இரண்டு நாடளுமன்றத்தொகுதிகள். தற்போது இரண்டிலும் இந்தியப்பொதுவுடைமைக்கட்சி CPI போட்டியிடுவது மகிழ்வான செய்தி.
அதனினும் மகிழ்வு இராமநாதபுரத்தில் போட்டியிடும்
தோழியர். உமாமகேஸ்வரி,
காரைக்குடி இளைஞர் மாநாட்டில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த
தோழியர்.ரம்யாதேவி, TTA
அவர்களின் தாயார் என்பதும்,
இராமநாதபுரம் NFTE முன்னாள் கிளைச்செயலர்
அருமைத்தோழர். இராமமூர்த்தி JTO அவர்களின்
அண்ணன் மனைவி என்பதும் கூடுதல் மகிழ்ச்சி தந்த செய்தியாகும்.
தோழியர். உமா மகேஸ்வரி அவர்களின் ஒட்டு மொத்தக்குடும்பமும் பொதுவுடைமை இயக்கத்தின் வம்சம் என்பது
குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.
மக்களிடம் சென்றபோது..
பாமரர்கள் சொன்னார்கள்
எங்கள் வாழ்நாள் வறுமை விலகவில்லை..
ஒரு நாள் வறுமை விலக
நாங்கள் நோட்டுக்கு வாக்களிப்போம்" என்று
படித்தவர்கள் சொன்னார்கள்..
எல்லோரும் ஏமாற்றுக்காரர்கள்..
தேசத்தை விலை பேசியவர்கள்.. எனவே
நாங்கள் நோட்டாவுக்கு வாக்களிப்போம்" என்று..
ஆனால் பாட்டாளிகள் சொன்னார்கள்...
"நாங்கள் நோட்டுக்கும் விலை போக மாட்டோம்..
நோட்டாவுக்கும் இரையாக மாட்டோம்:"
நாட்டுக்கு உழைக்கும் நல்லோரை
நடுத்தெரு மக்களுக்காக
நாள்தோறும் குரல் எழுப்பும் தோழர்களை
நாடாளுமன்றம் அனுப்புவோம்" என்று
நம்பிக்கையுடன் உறுதி சொன்னார்கள்..
நாடு நலம் பெற வேண்டும்..
வறியோர் வளம் பெற வேண்டும்..
பாட்டாளிகள் பலன் பெற வேண்டும்..
பொதுத்துறைகள் பெருகிட வேண்டும்..
ஊழல் ஒழிந்திட வேண்டும்..
உண்மை ஒளிர்ந்திட வேண்டும்..
தோழர்களே.. சிந்திப்போம்..
நல்லதோர் சின்னத்திற்கு.. வாக்களிப்போம்..
நாட்டைக்காப்போம்..