TTA பயிற்சிக்கால உதவித்தொகை
TTA பயிற்சி செல்லும் தோழர்களின் பயிற்சிக்கால உதவித்தொகை STIPEND புதிய சம்பள விகிதத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும் என நமது மத்திய சங்கம் கோரிக்கை எழுப்பி வந்தது. தற்போது மாற்றியமைக்கப்பட்ட சம்பள விகிதத்திற்கேற்ப STIPEND தொகை வழங்கப்பட வேண்டும் என BSNL நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இதன்படி புதிய சம்பள விகிதத்தில் 70 சதமும் அதற்கான IDA வும் பயிற்சிக்கால உதவித்தொகையாக வழங்கப்படும்.
===============================================================
குழந்தை பராமரிப்பு விடுப்பு
CHILD CARE LEAVE - மத்திய அரசில் பணி புரியும் பெண்கள் 730 நாள் குழந்தை பராமரிப்பு விடுப்பையும் ஒட்டு மொத்தமாக எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. விடுப்பு விதிகளின்படி
2 வருட விடுப்பை ஒட்டு மொத்தமாக எடுக்க இயலாது என்ற கல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பு இதன் மூலம் திருத்தப்பட்டுள்ளது.
===============================================================
அனைவருக்கும் இலவச SIM
அனைத்து ஊழியர்களுக்கும் இலவச SIM வழங்க வேண்டும் என்பது JCM தேசியக்குழு கூட்டக்கோரிக்கை. இதனை அமுல்படுத்தும் முகத்தான் தற்போது வழங்கப்பட்டுள்ள இலவச SIM விவரங்களை மாநில நிர்வாகங்களிடம் BSNL நிர்வாகம் கேட்டுள்ளது.
இலவச SIMல் மாதந்தோறும் ரூ.200/=க்குப்பேசலாம்.
No comments:
Post a Comment