செய்திகள்
01/04/2014 முதல் 2.1 சத IDA குறைப்பிற்கான DPE உத்திரவு
03/04/2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
IDA 90.5 சதத்திலிருந்து 88.4 ஆக குறைந்துள்ளது.
BSNLன் செல் கோபுரங்களைப் பராமரிக்க புதிய நிறுவனம் துவங்குவது தொடர்பாக 21/04/2014 அன்று அனைத்து சங்கங்களும் கலந்து கொள்ளும் கூட்டம் டெல்லியில் நடைபெறும்.
இதில் நிர்வாகத்தின் கருத்துக்கள் முன்வைக்கப்படும்.
BSNL - MTNL இணைப்பு சம்பந்தமாக சங்கங்களுடன் கலந்து பேசி இறுதி முடிவெடுக்கப்படும் என்று BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.
இரயில்வே துறையில் புதிய போனஸ் வரையறையை உருவாக்க அதிகாரிகள் குழுவை இரயில்வே நிர்வாகம் நியமித்துள்ளது.
இதற்கு இரயில்வே சங்கங்கள் உடன்படவில்லை.
ONGC நிர்வாகம் தனது ஊழியர்களுக்கான சீருடை,சலவைப்படி,தையற்கூலி மற்றும் சிற்றுண்டிப்படி ஆகியவற்றிற்காக ஆண்டிற்கு மொத்தமாக பணப்பட்டுவாடா செய்து வருகின்றது. இந்த ஆண்டிற்கான தொகை ரூ.84,332/- ஆகும்.
இது 4 தவணைகளாக பட்டுவாடா செய்யப்படும்.
No comments:
Post a Comment