Friday, 30 May 2014

இல்லறம்... நல்லறமாகுக...
வாழ்க.. மணமக்கள்..

இராமநாதபுரம் பகுதியில் சங்கம் வளர்த்த 
அருமைத்தோழர். வேலுச்சாமி அவர்களின் வாரிசும் 
NFTE சங்கத்தின் முன்னணித்தோழர் 
சென்னைக்கூட்டுறவு சங்கப்பிரதிநிதி - RGB 

தோழர். V.சுப்பிரமணியன் - S.உதயபானு 
ஆகியோரின் அருமைப்புதல்வி 

S.வினோ  - M.E.,
Dr. C.அருண்ராஜ்  - MBBS .,

ஆகியோரின் மணவிழா 01/06/2014 அன்று இராமநாதபுரத்தில்
 அருமைத்தோழர்கள். 
சேது  - ஆர்.கே., 
முன்னிலையில் சிறப்புடன் நடைபெறவுள்ளது.

பொறியியலும் மருத்துவமும் 
போற்றலுக்குரிய வாழ்வு கண்டிட... 
வாழ்வில்.. வளங்கள் பொங்கிட 
வாழ்த்துகின்றோம்... 
வாழ்க... வளமுடன்...
பணி நிறைவு வாழ்த்துக்கள் 
இன்று 31/05/2014 காரைக்குடி மாவட்டத்தில் 
பணி நிறைவு பெறும் தோழர்கள் 

தந்தி மரித்தாலும்
 தன் பணி நிலைத்த 
பண்பிலும் பணியிலும் சிறந்த 
S. பனிமய அந்தோணிராஜ் 
Sr.TOA (TG) - இராமநாதபுரம் 

அடிமட்ட மனிதன் 
அரசு ஊழியனாகிய 
அற்புதத்தின் சாட்சி 
K. மனோகரன் 
WATERMAN - இராமநாதபுரம்

பொறியியல் படிக்காமலே 
பொறியாளர்கள் உருவான 
பொதுவுடைமையின் அடையாளம் 
K.காளிமுத்து 
DE - தேவகோட்டை 

ஆகியோரின் பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் அமைதியுடன் அமைந்திட 
நமது நல்வாழ்த்துக்கள்.

Thursday, 29 May 2014

பணிக்கேற்ற ஊதியம்..
WAGE FOR SKILLED LABORERS 

ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்கள் செய்யும் பணிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்பது எழுதப்பட்ட சட்டம். காரைக்குடி மாநில மாநாட்டு தீர்மானங்களில் ஒன்று. ஆனால் BSNLலில் எங்கும் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எந்தப்பணி செய்தாலும் அவர்களுக்கு UNSKILLED சம்பளமே வழங்கப்படுகின்றது.

இப்பிரச்சினையை மதுரை NFTE மற்றும் TMTCLU மாவட்டச்சங்கங்கள் மதுரைப்பகுதி தொழிலாளர் ஆணையரின் தலையீட்டிற்கு கொண்டு சென்றன. இரண்டு மூன்று விசாரணைகள் நடைபெற்றன. ஒப்பந்த ஊழியர்கள் நலச்சட்டங்களின்படி அவரவர் செய்யும் பணிக்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் இதை உடனடியாக BSNLலில் அமுல்படுத்த வேண்டும் எனவும் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் தொழிலாளர் ஆணையர் வலியுறுத்தியுள்ளார். BSNL நிர்வாகத்திற்கு கால அவகாசம் அளித்துள்ள   தொழிலாளர் ஆணையர், BSNL  தவறும் பட்சத்தில் ஒருதலைப்பட்சமான உத்திரவு பிறப்பிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
===========================================================
தற்போதைய கூலி விவரம் - நாளொன்றுக்கு 

                      A பிரிவு நகரம்   Bபிரிவு நகரம்   Cபிரிவு நகரம் 
UNSKILLED             329                        273                      220

SKILLED/CLERICAL 400                      363                       309
============================================================
மதுரை மாவட்டச்சங்கங்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

காரைக்குடி மாவட்டத்திலிருந்தும் இது பற்றி புகார் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதி மாவட்டச்சங்கங்களும் இப்பிரச்சினையை அந்தந்த பகுதி 
தொழிலாளர் ஆணையரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

Wednesday, 28 May 2014

T M T C L U 
தமிழக ஒப்பந்த ஊழியர் சங்க 
மாநிலச்செயலர் 
தோழர். R.செல்வம் 
பணிநிறைவு பாராட்டு விழா 
=====================================================
29/05/2014 - கடலூர் - மாலை 5 மணி 

பங்கேற்பு 
தோழர். ஆர்.கே 
TMTCLU  - மாநிலத்தலைவர் 

தோழர். பட்டாபிராமன் 
NFTE  மாநிலச்செயலர் 

மற்றும் 
முன்னணித்தோழர்களும்.. 
அதிகாரிகளும்...

ஒடுக்கப்பட்ட 
ஒப்பந்த ஊழியரின் 
வாட்டம் நீங்கிட..
வாழ்வு சிறந்திட... 

ஓய்வுக்குப்பின் 
ஓய்வின்றி உழைத்திட 
தோழர்.செல்வத்திற்கு 
வாழ்த்துக்கள்....

NFTE  - TMTCLU மாவட்டச்சங்கங்கள் 
காரைக்குடி மாவட்டம். 

Tuesday, 27 May 2014

அஞ்சலி 
காரைக்குடி மாவட்டத்தின் 
NFTE  இயக்கத்தின் தலைவரும்  
காசாளரும் ,இராமநாதபுரத்தில் நீண்ட நாள்
தலைமை எழுத்தராகப்பணியாற்றியவரும் 
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்தாலும் 
அறிவால் ஆற்றலால் அனைவரையும் மிஞ்சியவரும் 
அடிமட்ட ஊழியர்களுக்கு அயராமல் பணி செய்தவரும் 
அற்புதமான  ஆங்கில அறிவு படைத்தவரும் 
AIBSNLPWA ஓய்வு பெற்றோர் சங்கத்தின் 
தமிழ்மாநில அமைப்புச்செயலரும் 
ஓய்வு பெற்றோரின் நலன் பேண 
ஓய்வின்றி உழைத்தவருமான 
அன்புமிக்க அருமைத்தோழர்
பன்முகத்தன்மை கொண்ட 

K.சண்முகநாதன் 
அவர்கள் இன்று 28/05/2014 
இராமநாதபுரத்தில்  உடல்நலக்குறைவால் 
இயற்கை எய்தினார்.
நமது மனங்கசிந்த அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.
நல்லடக்கம் இன்று மாலை இராமநாதபுரத்தில் நடைபெறும்.
நாடாளுமன்ற செயலகத்திடம் எழுப்பப்பட்ட 
SC/ST தோழர்களின் பிரச்சினைகள் 


நாடாளுமன்ற செயலகம் LOK SABHA SECRETARIAT 
SC/ST ஊழியர்களின் தீர்க்கப்படாத 32 பிரச்சினைகள் பற்றி DOTயிடம் கேள்வி எழுப்பியிருந்தது. நமது தமிழ்மாநிலச்சங்கம் BSNLலில் இன்னும் அமுல்படுத்தப்படாத இரண்டு முக்கிய  பிரச்சினைகளைப்பற்றி பாராளுமன்ற செயலகத்திடம் முறையிடுமாறு 
மத்திய சங்கத்தை கேட்டுகொண்டது. 

மத்திய சங்கமும் உடனடியாக இப்பிரச்சினையை 
பாராளுமன்ற செயலகத்திடம் முறையிட்டிருந்தது. 

தற்போது 20/05/2014 அன்று நமது சங்கம் எழுப்பியிருந்த இரண்டு கோரிக்கையின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி 
நாடாளுமன்ற செயலகம் DOTயைக்கேட்டுக்கொண்டுள்ளது.

நமது சங்கம் எழுப்பிய பிரச்சினைகள்

1. நாலுகட்டப்பதவி உயர்வில் SC/ST  தோழர்களுக்கு  ஓராண்டு சலுகை.

2. கருணை அடிப்படை பணியில் மதிப்பெண்களில் தளர்வு.

உரிய நேரத்தில் SC/ST தோழர்களின் பிரச்சினைகளை 
உரிய இடத்தில் முறையிட்ட 
நமது மத்திய மாநில சங்கங்களுக்கு நன்றிகள்...

Monday, 26 May 2014

மே - 27
நேரு நினைவு தினம் 
பொதுத்துறையின் தந்தை
ஜவகர்லால் நேரு 
பொதுத்துறைகள்... 
தேசத்தின் ஆலயங்கள் என்றார் நேரு...
மசூதியை இடித்தவர்கள்...
ஆலயங்களைக் காப்பார்களா?

இந்த தேசத்தின் பெரும்பான்மை மக்கள் 
கல்வியிலும்,பொருளாதாரத்திலும் 
மிகவும் பின்தங்கியவர்கள்...
அவர்களுக்காக உழைப்பதே 
ஆள்வோரின் கடமை என்றார்.. நேரு..

நேரு வழியா?...  நேர் வழியா?...
தேசம் செல்லும் திசை வழி பார்த்திருப்போம்..
நேர்மை வழி சென்ற நேருவின் நினைவைப்போற்றுவோம்..
தொலைத்தொடர்பு அமைச்சர் 
சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் 
திரு.இரவிசங்கர் பிரசாத் 

நமது தொலைத்தொடர்பு இலாக்கா அமைச்சராக
 பீகாரைச்சேர்ந்த பிரபல வழக்கறிஞர் 
திரு.இரவிசங்கர் பிரசாத் 

நியமிக்கப்பட்டுள்ளார். 
வழக்கறிஞர்கள் தொலைத்தொடர்பு அமைச்சராவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. 

தொலைத்தொடர்பின் எதிர்காலம் 
என்னவென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Sunday, 25 May 2014

அறிவார்ந்த அதிகாரிகள்...
அவதிப்படும் தோழர்கள்...

ஒரு வேதனைக்குரல்... 
---------------------------------------------
JTO ஆளெடுப்பு விதி 26/09/2001ல் இருந்து நடைமுறைக்கு வந்தாலும் ஒரேயொரு இலாக்காப் போட்டித்தேர்வு 02/06/2013 அன்று மட்டுமே நிர்வாகத்தால் ஒப்புக்கு  நடத்தப்பட்டது.

நமது அதிகாரிகள் அறிவார்ந்த தீர்க்கதரிசிகள் என்பதை அந்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியான அன்றே நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனெனில் காலியிடங்கள் 2000,2001,2002 மற்றும் 2012 ஆகிய வருடங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது. மற்ற ஆண்டுகளுக்கான காலியிடம் எங்கே சென்றது என்பது நமது அதிகாரிகளுக்கே வெளிச்சம்.  

JTO நேரடி நியமனம் மார்ச் 2001ல் 3199 பதவிகளுக்கு நடத்தப்பட்டது. இந்த நியமனம் 2001 JTO ஆளெடுப்பு விதிகளின் அடிப்படையில் நடத்தப்பட்டதாக BSNL தலைமையக உத்திரவு எண்: 5-9/2001/PER IV  தேதி 10/10/2001 கூறுகின்றது. இதன்பின் 2002, 2005,2007 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் JTO நேரடி நியமனம் நடந்துள்ளது. 

2007 மற்றும் 2008ல் மட்டும் ஏறத்தாழ 250 முதல் 300 JTO காலியிடங்கள் தமிழ்நாடு வட்டத்தில் மட்டும் நிரப்பப்பட்டுள்ளன. ஆனால் 2001,2005,2007 மற்றும் 2008 ஆண்டுகளுக்கான இலாக்கா நியமனத்திற்கான காலியிடங்கள் அறிவிப்பு இன்று வரை BSNL நிர்வாகத்தால் வெளியிடப்படவில்லை. இந்த விவகாரத்தில் நெடுங்கதைகள் சொல்வதும் பழங்கதைகள் சொல்வதும் மட்டுமே நமது அதிகாரிகளின் வாடிக்கையாக உள்ளது. நியாயமான முடிவுகள் ஏதும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதால் சேவையில் மூத்த TTAக்களையும் இளைய TTAக்களையும் மோதவிட்டு அவர்களை நீதிமன்ற வாயிலில் காத்துக்கிடக்க வைத்ததுதான் நமது அதிகாரிகளின் திறமையாகும்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்த மூத்த TTA  தோழர்களும் 
13 ஆண்டுகளாக சேவை செய்த கல்வித்தகுதியும் திறமையும் கொண்ட இளைய TTA  தோழர்களும் ஒரு பதவி உயர்வு  கூட இல்லாமல் இருப்பது BSNLல் வேதனைமிக்க சாதனையாக உள்ளது. 

இந்த விவகாரத்தில் BSNL உத்திரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 
மூத்த மற்றும்  இளைய தோழர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 

ஆண்டுகள் பல ஆயினும் பிரச்சினை இன்னும் 
கிணற்றில் போட்ட கல்லாகவே.. இருக்கின்றது. 
நாங்களும்  விமோச்சனத்திற்காக காத்திருக்கின்றோம்.. 
கல்லாக.. சபிக்கப்பட்ட... கல்லாக..

வேதனையுடன்...
13 ஆண்டுகளாக TTAவாகவேப் பணிசெய்யும் 
P.செல்லப்பா, 
SNATTA மாவட்டச்செயலர் 
காரைக்குடி.
9489943483.

Saturday, 24 May 2014

N F T E 
அகில இந்திய மாநாடு 
ஜபல்பூர் அகில இந்திய மாநாடு - அக்டோபர் 10-13

NFTE அகில இந்திய மாநாடு 
மத்தியப்பிரதேச மாநிலம் 
ஜபல்பூர் நகரில் 
அக்டோபர் 10,11,12,13 
ஆகிய தேதிகளில் நடைபெறும் 
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தோழர்களே.. தயாராவீர்...

Thursday, 22 May 2014

செய்திகள் 

JTO மற்றும் TTA பதவிகளுக்கான புதிய ஆளெடுப்பு விதிகள் 
BSNL  வாரிய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்தி மொழிபெயர்ப்பாளர்களாக தற்காலிகப்பதவி உயர்வில் 
பணி புரியும் தோழர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பது பற்றி 
BSNL வாரிய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 
BSNL BOARD  வாரிய கூட்டம் ஜுன் 6ந்தேதி நடைபெறும்.

போன் மெக்கானிக் இலாக்கா தேர்வை உடனடியாக நடத்தக்கோரி நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியதன் அடிப்படையில் விரைவில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டு BSNLன் வருமானம் 2.5 சதம் உயர்ந்துள்ளதாகவும், 
செல் வருமானம் 5 சதம் உயர்ந்துள்ளதாகவும்  
புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 

மாதம் ரூ.2000/=க்கு மேல் தொலைபேசிக்கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி பில்களை நேரடியாக 
அவர்களது இருப்பிடத்திற்கு கொண்டுபோய் கொடுக்கவும், 
காசோலையை நேரடியாக பெற்றுக்கொள்ளவும் வசதிகள் செய்யுமாறு 
மாநில CGMகளை CMD கேட்டுக்கொண்டுள்ளார். 
இந்தப்பணிக்கு தொலைபேசி வருவாய்ப்பிரிவில் பணி புரியும் SR.TOA தோழர்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 சத IDA இணைப்பை அமுல்படுத்துவதில் உள்ள தாமதத்தைக்களையக்கோரி AIBSNLPWA  ஓய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பாக தோழர்.முத்தியாலு தலைமையில் DOT செயலரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். 
ஆவண செய்வதாக DOT  செயலர் உறுதியளித்துள்ளார்.

Tuesday, 20 May 2014

அஞ்சலி 
தோழர். உமாநாத் 
சுதந்திரப்போராட்ட வீரரும் 
சிறந்த பொதுவுடைமைவாதியும் 
நீண்ட கால தொழிற்சங்கவாதியும் 
முன்னாள் சட்டமன்ற 
நாடாளுமன்ற உறுப்பினரும் 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 
மூத்த தலைவருமான 
தோழர். உமாநாத் 
அவர்கள் 
மறைவிற்கு நமது அஞ்சலி.
எழுத்தரிலிருந்து...முதல்வர்..
பீகார்... புதிய முதல்வர்..
தோழர்.ஜித்தன் ராம் மஞ்சி 

பீகாரின் புதிய முதல்வராக 
தோழர்.ஜித்தன் ராம் மஞ்சி 
பதவியேற்றுள்ளார். 

அவரைத் தோழர் என்று அழைப்பது சாலப்பொருத்தமாகும். 
தோழர்.ஜித்தன் ராம் மஞ்சி மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். கல்வி கற்கவே அவர் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.  எனவே ஏற்றத்தாழ்வுகளை அகற்றும்  பொதுவுடைமைக்கொள்கையால் கவரப்பட்டு பீகாரில்  இந்தியப்பொதுவுடமைக்கட்சியில் தீவிரப்பணியாற்றினார். 

தனது பட்டப்படிப்பிற்குப்பின் தபால் தந்தித்துறையில் 
பீகார் கயாவில் உள்ள கோட்டப்பொறியாளர் தந்திப்பொறியியல் அலுவலகத்தில் எழுத்தராகப்பணியில் சேர்ந்தார். 

நமது NFPTE சங்கத்தின் மூன்றாம் பிரிவின் 
மாவட்டச்செயலராக தொழிற்சங்கப்பணி செய்தார்.

பின் தீவிர அரசியல் ஈடுபாட்டால் 1980ல்  
தனது பதவியை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட்டார். 
தாழ்த்தப்பட்ட மக்கள் நல  இலாக்காவின் அமைச்சராகப்பணியாற்றி 
தற்போது அரசியல் சூழலால் முதல்வராக உயர்ந்துள்ளார்.
அவரது பணி சிறக்க வாழ்த்துவோம்.
சென்னைக்கூட்டுறவு சங்க 
இயக்குநர்கள் தேர்தல் 

20/05/2014 அன்று  நடைபெற்ற சென்னைக்கூட்டுறவு சங்க 
இயக்குநர்கள் தேர்தலில் 21 இடங்களையும் 
சென்னை NFTE கூட்டணி தலைமையிலான 
அணி வெற்றி பெற்றுள்ளது.

கூட்டுறவு சங்கத்தில்...
கட்டாய கைமாறுகள் ஒருபுறம் இருக்கட்டும்..
புதிய கூட்டுறவு அணி...
வாங்கிய ஓட்டுக்கு  
கட்டாயம் கைமாறு செய்ய வேண்டும்..
வாழ்நாளெல்லாம் வட்டி கட்டி வாழும் 
சாதாரண கடன்காரனின் 
வட்டி சதவீதம் குறைக்கப்பட வேண்டும்..
என்பதே ஆம் ஆத்மியாகிய 
சாமான்ய மனிதனின் ஆசை..

மற்றபடி...
கூட்டுறவு சங்கத்தில்...
ஊழல் மறையும்... தூய்மை வளரும்..
நிலப்பிரச்சினை நேர்மையாக கையாளப்படும்..
என்ற பேராசையெல்லாம் நமக்கு இல்லை...

வாழ்க... வளர்க....
வழக்கம்போல்... கூட்டுறவு...

Monday, 19 May 2014

மே - 2014
தோழர். KTK.தங்கமணி
அவர்களின் நூற்றாண்டு

ஓயாது உழைத்த உத்தமர்

கல்வி இருந்தும் பணிவு கொண்டார் ... 
செல்வம் இருந்தும் எளிமை கொண்டார் 
வீரம் இருந்தும் விவேகம்  கொண்டார்...
குணத்தில் தங்கமானார்...
கொள்கையில் நிறைகுடமானார்..
கதராடை மட்டுமே அணிவார்...
காலுக்கு செருப்பின்றி நடப்பார்..
கருப்பட்டிக்காப்பி குடிப்பார்..
செல்வ செழிப்பில் பிறந்திருந்தாலும்..
செல்லம் சோப்பில் துணி துவைப்பார்..
உழைப்பாளி மக்களுக்காக 
ஓயாது உழைத்த உத்தமர் 
KTK புகழ் பாடுவோம்...

Sunday, 18 May 2014

ஒப்பந்த ஊழியர் கோரிக்கைகள் 
CGM உடன் சந்திப்பு 

மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி, TMTCLU மாநிலத்தலைவர் தோழர்.ஆர்.கே., TMTCLU மாநிலச்செயலர்  தோழர்.செல்வம்,  தோழர்கள்.தமிழ்மணி, முரளி,காமராஜ் ஆகியோர், 
 மே 17 தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒப்பந்த ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தையொட்டி தமிழக முதன்மைப் பொதுமேலாளரை  
சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். 

 "ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினைகள் தொழிற்சங்க வரையறைக்குள் வராது" என்ற வழக்கமான பல்லவி பாடப்பட்டாலும், 
CGM பொறுமையுடன் நமது கோரிக்கைகளை செவிமடுத்துள்ளார். 
ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினையில் ஒப்பந்தக்காரர்கள் என்ற இடைத்தரகர்கள் இருந்தாலும், முதன்மை முதலாளி 
PRINCIPAL EMPLOYER என்ற முறையில் BSNLலில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டபூர்வ சலுகைகளை உரிமைகளை அளிக்க வேண்டியது 
BSNL நிர்வாகத்தின் கடமையாகும். 
BSNL நிர்வாகம் தனது கடமையைச்செய்யும் என நம்புவோம். 
நாமும் ஒப்பந்த ஊழியருக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.

Friday, 16 May 2014

இந்தியா... வெல்லுமா?

இந்தியா வென்றது....
வெற்றி கிட்டியவுடன்... 
மோடி உதிர்த்த வார்த்தைகள் 
வரும் 60 மாதங்களில்....
சிறுபான்மையினர் சிரித்து வாழ்ந்தால்...
பெரும்பான்மையினர் பொறுத்து வாழ்ந்தால்...
தலித்துகள் தலை நிமிர்ந்து வாழ்ந்தால்....
பழங்குடியினர் பயமின்றி வாழ்ந்தால்...
விவசாயிகள் இயற்கையாக மரித்தால்..
தொழிலாளர்கள் துன்பமின்றி வாழ்ந்தால்...
அரசு ஊழியர் அச்சமின்றி  வாழ்ந்தால்..
கங்கையும் காவிரியும் இணைந்தால்..
பொதுத்துறைகள் வளர்ச்சி பெற்றால்...
இலஞ்சம்..ஊழல்...ஒழிந்தால்..
இரவில் இளம்பெண் தனியாக நடக்க முடிந்தால்..
நிர்வாகத்தில் குறுக்குசால்  குறைந்தால்...
வறுமை ஒழிந்தால்... வளம் கொழித்தால்..
கேட்டவுடன் வேலை இளைஞனுக்கு கிடைத்தால்..
அம்பானி பிடியில் அமெரிக்க மடியில் சாயாதிருந்தால்...
அரசியலில் நேர்மையாளர்கள் நிமிர்ந்திருந்தால்...
ஐந்தாண்டுகள்  கழித்து நாமும் சொல்வோம்...
இந்தியா வென்றதென்று.....

அதுவரை பொறுத்திருப்போம்....
கொடுமை நேரின் எதிர்த்திருப்போம்....
மே - 17
தோழர்.ஜெகன் பிறந்த நாள் 
NFTE  இளைஞர் தினம் 
அன்பால் 
பண்பால் 
இளைஞர்களை 
தன்பால் ஈர்த்த 
இளைஞர்களின் 
வழிகாட்டி
மாசிலா மனித நேயம்...
தோழர்.ஜெகன் 
புகழ் பாடுவோம்..
அனைவருக்கும் 
NFTE 
இளைஞர் தின வாழ்த்துக்கள்... 

Thursday, 15 May 2014

T M T C L U
தமிழகம் தழுவிய
உரிமைக்குரல் 
==============================================
17/05/2014 - சனிக்கிழமை - மாலை  5 மணி 
==============================================
பொதுமேலாளர் அலுவலகம் 
காரைக்குடி.
பங்கேற்பு: தோழர்கள் 
வெ. மாரி 
மாவட்டச்செயலர் - NFTE 

இர.மாரிமுத்து 
மாநில அமைப்புச்செயலர் - TMTCLU 

க.சுபேதார் அலிகான் 
இளைஞர் அணி  - NFTE 

 பழ. இராமச்சந்திரன் 
தலைவர்  - AITUC 
========================================================================

தொலைபேசி நிலையம்  - பரமக்குடி 
பங்கேற்பு: தோழர்கள் 
பெ. இராமசாமி 
மாவட்டச்செயலர் - TMTCLU 

சி.முருகன் 
மாவட்டத்தலைவர்  - NFTE 

கா.தமிழ்மாறன் 
இளைஞர் அணி  - NFTE 

ந.சேகரன் 
தலைவர் - AITUC 
====================================
தொலைபேசி நிலையம் - இராமநாதபுரம் 
பங்கேற்பு: தோழர்கள் 
P. காந்தி 
கிளைச்செயலர் - NFTE 

R.இராஜசேகரன் 
தலைவர் - TMTCLU 

N.காளிமுத்து 
இளைஞர் அணி  - NFTE 

A.S.இராஜன் 
மாநில நிர்வாகக்குழு - AITUC 
---------------------------------------------------------------------------------

தொலைபேசி நிலையம் - சிவகங்கை  
பங்கேற்பு: தோழர்கள் 
B.முருகன் 
கிளைச்செயலர் - NFTE 

S .தர்மராஜன் 
கிளைச்செயலர் - TMTCLU 

S.ஆனந்த் 
இளைஞர் அணி  - NFTE 

K.சகாயம் 
நகரச்செயலர்  - AITUC 
---------------------------------------------------------------------------------

உறிஞ்சப்படும் ஒப்பந்த ஊழியர்களின் 
உரிமைகளை வென்றெடுக்க 
உரிமைக்குரல் எழுப்புவோம்...

ஒடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு 
வாழ்நாள் முழுக்க உரிமைக்குரல் எழுப்பிய 

தோழர்.ஜெகன் பிறந்தநாளை 
NFTE இளைஞர் தினத்தைப் போற்றுவோம்..

உணர்வுடன்..
வாரீர்... தோழர்களே...

Wednesday, 14 May 2014

JTO பதவி உயர்வு வழக்கு 

  JTOவாக OFFICIATING செய்யும் TTA  தோழர்கள்
 சென்னை உயர்நீதிமன்றத்தீர்ப்பாயத்தில் தொடுத்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு BSNL தலைமை நிர்வாகத்தின் 
மேலாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.

BSNL நிர்வாகம் இந்த வழக்கில்  மேல் முறையீடு செய்யலாம் 
என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இப்பிரச்சினை 
மேலும் சிக்கலாகும் நிலை உருவாகியுள்ளது. 

JTO ஆளெடுப்பு விதி 2014 BSNL நிர்வாகத்தால் 
ஒப்புதல் அளிக்கப்பட்டு வெளியிடப்பட்டாலும் கூட, மேற்கண்ட வழக்கில் நிர்வாகம் மேல்முறையீடு செய்ய இருப்பதாலும், பிரச்சினை நீதிமன்ற வரம்புக்குள் இருப்பதாலும்  இப்பிரச்சினையில் சிக்கல் தொடரும். 

இதனால் JTOவாக  OFFICIATING செய்யும் TTA  தோழர்களும், போட்டித்தேர்வு எழுதி முடிவுக்கு காத்திருக்கும் தோழர்களும் 
மேலும் சில காலம் அகலிகையாக காத்திருக்கும் நிலை தொடர்கின்றது . 

எனவே இப்பிரச்சினையை விரைவில் தீர்க்கக்கோரி 
மாநிலச்சங்கம் மத்திய சங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

நம்புவோம்... நல்லதே.... நடக்கும்... என...
மாநிலச்சங்க செய்தியிலிருந்து...

Tuesday, 13 May 2014

தமிழகத்திற்குப் புதிய முதன்மைப் பொதுமேலாளர் 

தென்மண்டலப்பராமரிப்பு STR  
பகுதியின்  CGM ஆகப்பணிபுரிந்த 
திரு. G.V.ரெட்டி
அவர்கள் தமிழகத்தின் புதிய CGM முதன்மைப்பொதுமேலாளராகப் பதவியேற்கின்றார். 

இதுவரை பணிபுரிந்த 
திரு.முகமது அஷ்ரப் கான்
CGM  அவர்கள்  EXECUTIVE DIRECTOR (NEW BUSINESS) 
 நிர்வாக இயக்குனர்(புது வணிகம்) பதவிக்கு தேர்வானதையொட்டி  
இன்று 13/05/2014 தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரது பணிக்காலத்தில் மாற்றங்களை 
அவரால் செய்ய முடிந்ததோ இல்லையோ.. 
நிறையயயயயய மாற்றல்களை செய்துள்ளார். 

"இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன் "
என்ற நாகூர் ஹனிபா அவர்களின் பாடலுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். 

செல்லுமிடம் அவருக்கு சிறக்க வாழ்த்துகின்றோம்.
SENIOR .TOA தேர்வு முடிவுகள்

30/03/2014 அன்று நடைபெற்ற 
SR.TOA  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுக்க 42 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
தூத்துக்குடி தோழர் ஒருவருக்கு  தேர்வு முடிவு தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
காரைக்குடி, பாண்டிச்சேரி மற்றும் நாகர்கோவில்
 மாவட்டங்களில் இருந்து யாரும் தேர்வெழுதவில்லை.

தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்

கோவை
P.இரவிச்சந்திரன்
N.முத்துநகை
R.துரை
K.சரோஜினி

குன்னூர்
R.இரமேஷ் குமார்
A.பிரான்சிஸ் சுரேஷ்

கடலூர்
D.சரவணக்குமார்
B.சரோஜா
M.செல்வக்குமார்

தருமபுரி
SK.அலோசியஸ் அமுல்ராஜ்
ஜைபுன்னிசா
S.இராஜா

ஈரோடு
K.விஜயகுமார்
S.உமா
K.பரமேஸ்வரி
S.பாலு
A.கவிதா
R.கலா

குடந்தை - V.ஜெயராமன்

மதுரை
S.முத்துலட்சுமி
A.முத்துமாரி
G.இராஜ்குமார்
A.தியாகு

சேலம்
G.ஹம்சவேணி
K.சாந்தி
V.மஞ்சுளா
K.பாலசுப்ரமணியன்

தஞ்சாவூர் - S.வத்சலா

திருச்சி
R.மணிமாறன் 
C.மணிமேகலை 
K.மாலதி 
T.விஜயலட்சுமி 
K.சுரேஷ்பாபு 
D.மணி 

நெல்லை - D.பிரபு 

வேலூர் 
A.ஜஸ்டின் 
CK.பன்னீர்செல்வம் 
R.பிரியா 
V.V.சத்யநாராயணன் 
S.சேது நாராயணமூர்த்தி 
K.சிவராஜ் 

விருதுநகர்R.பிரேம்குமார் 

தற்காலிகத்தேர்வு - PROVISIONAL SELECTION 
P.சரவணக்குமார் - தூத்துக்குடி.

தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்...

Saturday, 10 May 2014


17/05/2014 - சனிக்கிழமை
மாநிலந்தழுவிய  
கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
==================================

 அடிமட்ட ஊழியர்களின் அன்புத்தலைவன்...
தோழர். ஜெகன் பிறந்த நாளில்..
உலகை.. உள்ளங்கையில் அடக்கிய..
உலகத்தொலைத்தொடர்பு தினத்தில்..

NFTE இளைஞர் தினத்தில்....
அன்றாடக்கூலிகளாய்..
உழைத்து ஓயும் ஒப்பந்த ஊழியர்களின்
பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரி..
அனைத்து மாவட்டத்தலைநகரங்களிலும்
 

ஆ ர் ப் பா ட் ட ம்


கோரிக்கைகள்


BSNL.. நிர்வாகமே...
  • குறைந்த பட்ச ஊதியம் ரூ.10,000/= வழங்கு..
  • ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை கொடு..
  • மாதந்தோறும் 5ம்தேதிக்குள் சம்பளம் வழங்கு..
  • வங்கிக்கணக்கில் சம்பளப்பட்டுவாடா செய்..
  • ஊதியப்பட்டியல் PAY SLIP வழங்கு..
  • EPF கணக்கை அனைவருக்கும் துவக்கு..
  • ESI மருத்துவ அட்டை வழங்கு...
  • EPF SLIP சேமநலநிதி பிடித்தப்பட்டியல் வழங்கு..
  • அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கு..
  • அனைவருக்கும் ஆயுள் காப்பீடு வசதி செய்..
  • குறைந்த பட்சம் 4 மணி நேர வேலை வழங்கு..
  • தொழில்நுட்ப பணி புரிபவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கு..
  • ஒப்பந்த ஊழியர் நலன் பேண சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்..
தோழனே...
சிதையா.. நெஞ்சு கொள்..
கொடுமையை.. எதிர்த்து நில்..

முனையிலே...முகத்து நில்..
நினைப்பது... முடியும்..

பாரதியின்.. வரி சொல்..
பாரதியின்.. வழி செல்..

Thursday, 8 May 2014

JTO ஆளெடுப்பு விதி 

புதிய JTO ஆளெடுப்பு விதி 2014 BSNL நிர்வாகக்குழுவின் 
MANAGEMENT COMMITTEE ஒப்புதல் பெற்று 
BSNL  BOARD வாரிய ஒப்புதலுக்கு  அனுப்பப்பட்டுள்ளது.
=========================================================
கட்டணத்தள்ளுபடி 

வடகிழக்கு மாநிலங்களுக்கான நுண்ணலை மற்றும் அலைவரிசைக் 
கட்டணமாக DOT  மற்றும் ISROவிற்கு BSNL செலுத்த வேண்டிய 102 கோடி ரூபாய்க்கட்டணம் இந்த ஆண்டு தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. BSNLன் நிதிச்சுமையைக்குறைக்க அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும் அடக்கம்.
=======================================================
தீயணைப்பு நடவடிக்கைகள் 

தமிழகத்தில் தஞ்சாவூர் SSAவிலும், குஜராத் அகமதாபாத் நகரிலும் ஏற்பட்ட தீ விபத்தையொட்டி தீயணைப்பு தடுப்பு முறைகளை  தவறாமல் கையாள வேண்டும் என வலியுறுத்தி 
BSNL நிறுவனம் 13 வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. 
தீ பிடித்தால் தீயாய் இருக்கணும்... தோழர்களே...
======================================================
கூட்டுறவு சங்க இயக்குநர்கள் தேர்தல்  

சென்னைக்கூட்டுறவு சங்க இயக்குநர்கள் DIRECTORS தேர்தல் 
20/05/2014 அன்று சென்னையில் நடைபெறும்.
=======================================================
கால்டுவெல் ஐயர் 
இராபர்ட் கால்டுவெல்
திராவிட மொழியியலின் தந்தை
1814 - 2014
மதத்தை மனிதமாக்கியவர்..
மனிதத்தைப் புனிதமாக்கியவர்..
ஒப்பிலக்கணத்தை தந்தவர்..
ஓடப்பர்களின் தந்தையவர்..

அயர்லாந்தில் பிறந்தார்..
இங்கிலாந்தில் வளர்ந்தார்..
தமிழ்நாட்டில் மரித்தார்..
தமிழ் உள்ளளவும் புகழ் நிலைத்தார்..
அறத்தால்.. குணத்தால்.. 
ஐயர் பட்டம் பெற்ற 
கால்டுவெல் புகழ் போற்றுவோம்..

Wednesday, 7 May 2014

JAO 10 சத SC/ST காலியிடங்கள் 
மறு ஆய்வு 

ஆகஸ்ட் 2013ல் நடந்த JAO 10 சத காலியிடங்களுக்கான போட்டித்தேர்வில் SC/ST  காலியிடங்களுக்குப் போதிய தோழர்கள் தேர்ச்சி பெறவில்லை.  எனவே தேர்வு முடிவுகளை மறு ஆய்வு செய்ய 
BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.

இந்த உத்திரவின்படி..

  • அனைத்துப்பாடங்களிலும்  தேர்ச்சி பெற்று கூட்டு மதிப்பெண்கள் AGGREGATE MARKS பெறாதவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
  • ஏதேனும் ஒரு பாடத்தில் தோல்வியுற்றவர்களுக்கு 5 கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். அதுவும் கீழ்க்கண்ட பாட வரிசையில் மறு ஆய்வு செய்ய வேண்டும்.
    • WORKS ACCOUNTS
    • SERVICE RULES AND BUDGET 
    • TELECOM REVENUE 
    • ACCOUNTING AND COSTING
மேற்கண்ட உத்திரவின் அடிப்படையில் யாரும் தேறுவதற்கான வாய்ப்பில்லை. தமிழகத்தில் 10 சத காலியிடங்களில் 
தேர்வு எழுதிய SC/ST தோழர்கள் மிகவும் குறைவு.