JTO தேர்வு
சென்னை நீதிமன்றத்தீர்ப்பு
தமிழகத்தில் தற்காலிகப்பதவி உயர்வில் JTOவாகப்பணி புரியும்
TTA தோழர்கள் தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தீர்ப்பாயம் CAT -MADRAS BENCH
தனது 33 பக்கத்தீர்ப்பினை 02/05/2014 அன்று வழங்கியுள்ளது.
BSNL நிர்வாகத்தின் காலியிடங்கள் கணக்கீட்டில் குளறுபடி உள்ளதாகவும், 2000-2001 வருடத்திற்கான JTO பதவிகள் நிரப்பப்படாமல் இருந்தால் அந்த பதவிகளில் TTA தோழர்களை சேவை அடிப்படையில் நிரந்தரம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது .
இதனை 8 வாரங்களுக்குள் செய்து முடிக்க உத்திரவிட்டுள்ளது.
JTO ஆளெடுப்பு விதி 2001க்குப்பின் உருவான காலியிடங்களில்
மேற்கண்ட TTA தோழர்களுக்கு எந்த வித உரிமையும் இல்லை
எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
எனவே 02/06/2013 அன்று நடைபெற்ற JTO இலாக்காப்போட்டித்தேர்வு முடிவுகளை வெளியிடலாம் எனவும் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
விரைவில் JTO தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கின்றோம். JTO ஆளெடுப்பு விதிகள் 2014 வெளியிடப்பட்ட பின் OFFICIATING செய்யும் TTA தோழர்களின் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படும் என நம்புகின்றோம்.
No comments:
Post a Comment