செய்திகள்
இரவு நேர இலவச அழைப்புகளை அமுல்படுத்தியதையொட்டி
ஜூன் 15 முதல் நாடு தழுவிய இலவச ஊர்சுற்றும்
ROAMING வசதியை BSNL அறிவித்துள்ளது.
---------------------------------------------------------------------------------
2014-15ம் நிதியாண்டில் BSNLன் வருமானம் 2.1 சதம் உயர்ந்துள்ளதாக இலாக்கா மந்திரி கூறியுள்ளார். பின்னோக்கிச்செல்லும் நிலையிலிருந்து BSNL முன்னோக்கி அடியெடுத்து வைப்பதாக
அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------
2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி
25 நகரங்களை தரம் உயர்த்தி மத்திய அரசு உத்திரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஈரோடு,கோவை ஆகிய நகரங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்காக இருந்தாலும் 01/04/2015ல் இருந்துதான்
பணப்பலன் ஊழியர்களுக்கு கிடைக்கும்.
---------------------------------------------------------------------------------
வருமான வரித்தாக்கல் செய்வதற்காக ஏற்கனவே உள்ள
விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய விண்ணப்பங்கள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. வருமான வரித்தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 ஆகும்.
---------------------------------------------------------------------------------
விலைவாசிப் புள்ளிகளின் உயர்வையொட்டி ஜூலை 2015 முதல் 1.6 முதல் 2 சதம் வரை
IDA உயர வாய்ப்புள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
---------------------------------------------------------------------------------
4G சேவை வசதியை அடுத்த ஆண்டு துவக்குவதற்கு
BSNL திட்டமிட்டுள்ளது. இதற்காக 39000 கோடி அடுத்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்யப்படும். AIRTEL நிறுவனம் ஏற்கனவே 23 நகரங்களில்
இந்த சேவையை துவங்கி விட்டது. RELIANCE நிறுவனம்
BSNL திட்டமிட்டுள்ளது. இதற்காக 39000 கோடி அடுத்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்யப்படும். AIRTEL நிறுவனம் ஏற்கனவே 23 நகரங்களில்
இந்த சேவையை துவங்கி விட்டது. RELIANCE நிறுவனம்
அடுத்த மாதம் துவக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
பதவிப்பெயர் மாற்றக்குழு DESIGNATION COMMITTEE மற்றும் போனஸ்குழுக்கூட்டங்களை உடனடியாக கூட்டக்கோரி
நமது மத்திய சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
---------------------------------------------------------------------------------
ஆந்திர மாநில அரசு 01/07/2013 முதல் தனது ஓய்வூதியர்களுக்கு
43 சத ஓய்வூதிய உயர்வை அறிவித்துள்ளது.
02/06/2014 முதல் நிலுவை வழங்கப்படும்.
---------------------------------------------------------------------------------
BSNLலில் ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குவதற்கான குறிப்பு DOT நிதிப்பிரிவால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமான சம்பிரதாயங்களுக்குப்பின்
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment