ESI அடையாள அட்டை
தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகம்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ESIC மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் மூலம் மருத்துவ சேவை அளித்து வருகின்றது.
இதற்காக தொழிலாளியின் மாத ஊதியத்தில் 1.75 சதமும், நிர்வாகத்தின் சார்பில் 4.75 சதமும் சந்தாத்தொகையாக பிடித்தம் செய்யப்படுகிறது.
ESIC நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள்
தங்களின் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களின் குடும்ப புகைப்படம் மற்றும் தேவைப்பட்ட விவரங்களை ESIC இணையதளத்தில் உட்புகுத்தி TEMPORARY IDENTITY CARD எனப்படும் TIC அடையாள அட்டையை ஊழியர்களுக்கு உடனே வழங்க வேண்டும்.
இந்த அட்டை 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
ஊழியர்கள் இந்த 3 மாத காலத்திற்குள் தங்களது குடும்ப உறுப்பினர்களில் நீக்கல் சேர்த்தல் மற்றும் தங்களது சம்பந்தப்பட்ட புள்ளி விவரங்களை திருத்தம் செய்து ESIC நிர்வாகம் மூலம் PERMANENT IDENTITY CARD எனப்படும் PIC அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த நடைமுறை BSNL நிறுவனத்தில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆனால் தொடர்ந்து தொழிலாளியிடம் சந்தா பிடித்தம் மட்டும் செய்யப்படுகிறது.
இன்று 11/06/2015 காரைக்குடியில்
ஒப்பந்த ஊழியர்களுக்கு ESI அடையாள அட்டை வழங்குவதற்கான புகைப்பட முகாம் நடைபெறுகிறது. ஒப்பந்தக்காரர்களின் ஏற்பாட்டின் பேரில் ESI நிர்வாகத்தினர் இந்த முகாமை நடத்துகின்றனர். தோழர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து வர இயலாதவர்கள், இருக்கின்றவர்களை வைத்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். அடையாள அட்டை
பெற்றுக்கொண்ட பின் சேர்த்தல் நீக்கல் செய்ய இயலும்.
ஒப்பந்த ஊழியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
No comments:
Post a Comment