Tuesday 30 June 2015

செய்திகள் 

ஜூலை 2015 முதல் IDA  2.1 சதம்  உயரும் 
என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 
இத்துடன் மொத்தப்புள்ளிகள் 102.6 சதம் ஆகும். 
பண்பலை வானொலிகளின் அடையாள எண்கள் போல் 
நமது IDA  உயர்ந்து வருகின்றது. 
ஆனாலும் இணைப்புக்கான வழிதான் 
கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படவில்லை.
==================================================================
தேசம் தழுவிய MNP மாற்று சேவைக்கு மாறும் வசதி ஜூலை 3 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
==================================================================
DIGITAL INDIA என்ற கொள்கையின்  கீழ் பல்வேறு திட்டங்கள் இன்று பிரதம மந்திரியால் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
==================================================================
ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு பிரச்சினைகள் இரண்டு மாத காலத்திற்குள் தீர்க்கப்பட வேண்டும் என மாநில நிர்வாகம் 
மாவட்ட நிர்வாகங்களை வலியுறுத்தியுள்ளது.
==================================================================
குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு  CHILD CARE LEAVE 15 நாட்களுக்கு குறைவாகவும் எடுத்துக்கொள்ளலாம் என்ற DOPT  வழிகாட்டலை  அமுல்படுத்த BSNL  நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
==================================================================
உடல் ஊனமுற்ற தோழர்கள் அரசுப்பணியில் அமர்வதற்கான வயது வரம்பு மேலும் தளர்த்தப்பட்டுள்ளது.   பொதுப்பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், OBC பிரிவிற்கு 13 ஆண்டுகளும், SC/ST பிரிவிற்கு 15 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.
==================================================================

No comments:

Post a Comment