Wednesday, 10 June 2015

செய்திகள்
================================= 

ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குதற்கான  குறிப்பு  நமது இலாக்கா அமைச்சரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பின் இந்த குறிப்பு பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து இறுதியில் மத்திய மந்திரி சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். 

78.2 FILE பாரதம் முடிவுக்கு வந்து 
2015ம் ஆண்டு ஓய்வு பெற்ற தோழர்களுக்கு
 நல்வருடமாக அமைய  நமது வாழ்த்துக்கள்.
==================================================================

மத்திய அரசின் 7வது ஊதியக்குழு தனது ஊதியக்குழு அறிக்கையை 
2015 ஆகஸ்ட் இறுதிக்குள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
01/01/2016 முதல் ஊதியக்குழு அமுலாக்கம் இருக்கும். 
இம்முறை குறித்த காலத்திற்கு முன்னதாகவே ஊதியக்குழு
 தனது பணியை முடிப்பது குறிப்பிடத்தக்கது.

2016ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு
 நல்வருடமாக அமைய நமது வாழ்த்துக்கள்.
==================================================================

இந்திய தேசத்தில் தொலைபேசி எண்ணிக்கை 
100 கோடியைத்தொட்டு நிற்கின்றது. விரைவில் மக்கள் தொகையை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்லக் குழந்தைகள் இனி கையில் செல்போன் பற்றியே பிறக்கும். இத்தகைய அசுர வளர்ச்சியில் நமது BSNL பங்கு பத்து சதத்திற்கும் கீழே 
9.4 சதமாகப் போனதுதான் வருத்தமான வருத்தமாகும்.
==================================================================

தாஜ்மகால் பகுதியில் இலவச  WIFI இணைய சேவையை நமது BSNL நிறுவனம் அளிக்க உள்ளது. தமிழக அரசை அடுத்து இலவசங்கள் அளிப்பதில் BSNL  முன்னணியில் உள்ளது.  

டெல்லிப்பகுதி முழுவதும் இலவச WIFI வசதி அளிக்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது தேர்தல் கால வாக்குறுதியாக அளித்திருந்தார். நமது MTNLன் பங்கு 
அதில் என்ன என்பது தெரியவில்லை.
==================================================================

ஊழியர்களின் பெயர் மாற்றக்குழு DESIGNATION COMMITTEE விரைவில் தனது பரிந்துரையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
புதிய பெயரோடு பழைய தெம்போடு உலாவர ஊழியர்கள் தயாராகவும்.
==================================================================

நமது நிறுவனத்தின் இரவு நேர இலவச அழைப்பு வசதி பற்றியும், 
இலவச தேசம் சுற்றும்  ஊர்சுற்றி ROAMING வசதி பற்றியும் 
மக்களுக்கு எடுத்துச்சொல்ல அனைத்து ஊழியர் சங்க கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.
==================================================================

No comments:

Post a Comment