Tuesday, 23 June 2015

ஜூன் - 24
கண்ணதாசன்  
பிறந்த தினம் 
காவியத்தாயின் மூத்த  மகன் 
கண்ணதாசன் 

இவன்...
காரைக்குடி கண்டெடுத்த முத்தையா..
கவி உலகின் மதிப்பில்லா சொத்தையா...

இவன்... 
எட்டிலே நிறுத்தினான் கல்வியை..
ஏட்டிலே நிறுத்தினான் கவிதையை...

இவன்...
உள்ளம் சொன்னதை உதட்டில் சொன்னான் 
உதட்டில் சொன்னதை உண்மையாய் சொன்னான்...

இதோ... 
இன்றைய தலைவர்களைப் பற்றிய 
அவன் வரி படியுங்கள்.. 
அவன் மேல் பற்றுங்கள்...

மாடு தின்னாமலும் 
மனிதர் தொடாமலும் 
வைக்கோலில் படுத்த நாய் போல்.. 

வையம் பெறாமலும் 
மண்ணில் விழாமலும் 
மாகடல் கொண்ட மழை போல்..

ஏடு கொள்ளாமலும் 
இசையில் நில்லாமலும் 
எழுதாது போன கவி போல்..

இலையில் இடாமலும் 
இருந்தே உண்ணாமலும் 
இடம் மாறி விழுந்த கறி போல்..

நாடு கொள்ளாத.. 
ஜனநாயகத்தலைவர்கள்.. 
நாட்டையே மாற்றினரே...

-கண்ணதாசன்-

No comments:

Post a Comment