இராமேஸ்வரம்
தொலைந்து வரும்... தொலைத்தொடர்பு
நமது சீரழிந்த சேவையை நினைவூட்டும்... தனுஷ்கோடியின் சிதிலமடைந்த தேவாலயம்.. |
இராமேஸ்வரம்..
இந்திய தேசத்தின்
ஆன்மீக அடையாளங்களின்
ஆன்ம அடையாளங்களின் நகரம்..
நமது முன்னாள் குடியரசுத்தலைவர்
அப்துல் கலாம் பிறந்த பெருமையுடைத்த ஊர்..
இந்தியாவின்
ஒட்டுமொத்த இனங்களையும்
ஓரிடத்திலே நாம் காண இயலும்...
ஒட்டு மொத்த மொழிகளையும்..
ஓரிடத்திலே கேட்க இயலும்...
இங்கு..
வருகை தராத... வந்தால் குளிக்காத...
பேரதிகாரிகளே கிடையாது...
இத்தகைய சிறப்பு மிக்க நகரிலே
நமது BSNL சேவை
நாளும் சீரழிந்து வருகிறது...
போதிய செல் கோபுரங்கள் இல்லாததால்
தடையற்ற சேவை தர இயலவில்லை...
OFC துண்டிப்பு..
வாரம் ஒரு முறை வந்து போகும்.
ஒரு முறை துண்டிக்கப்பட்டால்...
ஒரு வாரத்திற்கு மேலாகும் துண்டிப்பை சரி செய்ய...
கழுதையாக கத்தினாலும் காரியம் ஆகாது..
தரைவழி சேவை..
தரமற்ற சேவையாக மாறிவிட்டது..
அகன்ற அலைவரிசை சேவை..
குறுகிய சேவையாக மாறிவிட்டது
வங்கி இணைப்புக்கள்.. அடிக்கடி துண்டிக்கப்படும்...
ATMகள் இதனால் பூட்டிப்போடப்படும்..
இங்கே பொதுமக்களும்..
புனித சுற்றுலாவாசிகளும்...
வணிகப்பெருமக்களும்.. வாடிக்கையாளர்களும்...
அடையும் இன்னலுக்கு அளவே இல்லை...
கேட்க நாதியற்று கிடக்கிறது நமது சேவை...
இது பற்றி ஏற்கனவே..
நமது மாநில JCM கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது..
ஆனாலும் வழக்கம் போல எந்த முன்னேற்றமும் இல்லை...
BSNL தலை நிமிர வேண்டும் என்பதே
இன்றைய எல்லோரது குறிக்கோளாகும்...
ஆனால் இராமேஸ்வரத்தில் நமது சேவை
தலை குனிந்து நிற்கின்றது..
மாவட்ட.. மாநில நிர்வாகங்கள் உடனடியாக
தலையிட்டு சேவை மேம்பட வழி செய்ய வேண்டும்..
இல்லையேல்...
வாடிக்கையாளர்கள்..வணிகர்கள்..பொதுமக்கள் இணைந்து
BSNLக்கு எதிராக போராட்டம் தொடுக்கும் நாள்
வெகு தொலைவில் இல்லை...
இலங்கைப்பிரச்சினை போல் அல்லாது
இராமேஸ்வரம் பிரச்சினை...
நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும்..
BSNL நிமிர்ந்து நிற்க வேண்டும்..
இதுவே நமது விழைவு..
No comments:
Post a Comment