Sunday, 31 January 2016

அஞ்சலி 

SNEA சங்கத்தின் முதுபெரும் தலைவரும் 
JTO தோழர்களின் உயர்வுக்குப் பாடுபட்டவரும் 
காட்சிக்கு எளியவரும்.. 
காலத்தால் மறையாதவருமான... 

தோழர்.சேஷகிரிராவ் 
அவர்கள் 
உடல் நலக்குறைவால் 
இயற்கை எய்தினார்.

நமது அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.
===============================================

இரங்கல் கூட்டம் 
இன்று 01/02/2016  மதியம் 
காரைக்குடி GM  அலுவலகத்தில் 
இரங்கல் கூட்டம் நடைபெற்றது. 
அனைத்து சங்கத்தலைவர்களும் 
கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
ஒரு வரிச்செய்திகள் 

  • DOT  செயலராக திரு.JS.தீபக் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மாநில முதன்மைப் பொதுமேலாளர்கள் கூட்டம் டெல்லியில் பிப்ரவரி 10,11 தேதிகளில் நடைபெறுகின்றது.
  • 01/02/2016 அன்று CMDயுடன்  FORUM அனைத்து சங்கத்தலைவர்கள் சந்திப்பு நடைபெறுகிறது.
  • 78.2 சத IDA  இணைப்பின் அடிப்படையில் வீட்டு வாடகை வழங்கினால் ஏற்படும் செலவுகள் பற்றி BSNL நிர்வாகம் கணக்கிட்டு வருகிறது.
  • JAO இலாக்காத் தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
  • JTO - ELECTRICAL  மற்றும் CIVIL  இலாக்காத் தேர்விற்கும் 5 ஆண்டுகள் சேவைத்தகுதி என உத்திரவிட நமது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
  • பதவி பெயர் மாற்ற பரிந்துரை  இம்மாதம் கூடவிருக்கும் BSNL வாரியக்கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்படும்.
  • TTA  மற்றும் JTO  பதவிகளுக்கான நேரடி நியமன ஆளெடுப்பு பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
  • ஓய்வு பெற்ற ஊழியர்களின் 78.2 சத IDA  இணைப்பு பிரச்சினை விரைவில் மத்திய அமைச்சரவை செயலருக்கு அனுப்பப்படும்.
  • NFTE  தமிழ் மாநில செயற்குழு 06/02/2016 அன்று வேலூரில் நடைபெறுகிறது.

Friday, 29 January 2016

ஓய்வெதற்கு...உனக்கு?.. 
31/01/2016 அன்று பணி நிறைவு பெறும்
NFTE  மாநில துணைத்தலைவர்  தூத்துக்குடி
தோழர்.  பாலசுப்ரமணியன் தனது துணைவியாருடன்..

தோழர்.ஆர்.கே., அவர்களுடன் தோழர்.பாலு மற்றும்
அவரது அன்புத்துணைவியார் ஆனந்தவல்லி 

நிறை பணி...நிறைவு வாழ்த்து 

கறந்த பாலின் தூய்மை எங்கள் பாலு 
பிறந்த சேயின்  மென்மை  எங்கள் பாலு 

கண்ணியமிக்க வாய்மை எங்கள் பாலு 
கடமை மிக்க நேர்மை எங்கள் பாலு 

சங்கம்  காத்த   தங்கம்  எங்கள் பாலு 
சமாதானம்  வளர்த்த வெண்முத்து எங்கள் பாலு 

சுட்டால்  வெளுக்கும் சங்கு எங்கள் பாலு 
எதிரி தொட்டால்  சிலிர்க்கும் சிங்கம் எங்கள் பாலு 

தூத்துக்குடி என்றால் 
கடலில் முத்து.. கரையில் உப்பு 
அது மக்களுக்கு.. 

 தூத்துக்குடி என்றால் 
NFTEக்கு  பாலு... இயக்கத்திற்கு  பாலு 
இது எங்களுக்கு.. 

மூச்சடக்கி முத்துக்குளிக்கும் முத்து நகரிலே..
பேச்சடக்கி இயக்கம்  வளர்த்த தலைவனே..

கத்தும் கடலுக்கும்... சுத்தும் பூமிக்கும்..
என்றும் ஓய்வில்லை... ஓய்வில்லை...

உனக்கும் இனி ஓய்வில்லை...
சங்கப்பணியோடு.. சமுதாயப்பணியும் சேரட்டும்..
உன் சுமை கூடட்டும்... உன் பணி சிறக்கட்டும்...

வாழ்க நீ நூறாண்டு.. வளர்க நீ... பல்லாண்டு... 

அன்புடன் வாழ்த்தும் 
NFTE  தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
காரைக்குடி மாவட்டம் 
ஜனவரி - 30 
மகாத்மா மறைவு தினம் 
நாசத்தால் உயிர் நீத்த தேசத்தந்தை 

வீழ்ந்தது... நீயல்ல...
1948 ஜனவரி 30
இந்திய மண்ணில்...
வீழ்ந்தது நீயல்ல..
அகிம்சையும்.. அன்பும்..
கருணையும்.. கனிவும்...

அன்று உன் தேகம்...
அரை நிர்வாணம்... 

இன்று.. உன்  தேசம்..
முழு நிர்வாணம்...

அன்று.. நீ..
அரைநிர்வாணப் பக்கிரி...

இன்றோ... அனைவரும் 
அரை நிர்வாணப் போக்கிரி...

கொடியவர் கரத்தில் கொற்றம்...
கொடிகட்டிப் பறக்குது குற்றம்...

இந்நிலை.. இழிநிலை.. மாற்றுவோம்...  
உன் வலி துடைப்போம்... உன் வழி நடப்போம்...
----------------------------------------------------------------------------------

தியாகிகள் தின விழா 

30/01/2016 - சனிக்கிழமை  - மாலை  04.00 மணி 
தியாகி KMS நூலகம் - தேவகோட்டை 

- : பங்கேற்பு :-
முனைவர்.பழனி இராகுலதாசன் 
நல்லாசிரியர்.  க.குகானந்தம் 
பொற்கிழிக்கவிஞர். அரு.சோமசுந்தரம் 
காப்பியக்கவிஞர். குன்றக்குடி ஆதீனப்புலவர் மரு.பரமகுரு 
மற்றும் வாழும் தியாகிகளும்..  வளரும் தோழர்களும்...

தோழர்களே... வருக.. 
JTO இலாக்காத்தேர்வு 

 நமது தோழர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்திருந்த JTO
  50 சத இலாக்காத்தேர்வு நடத்திட  BSNL நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

தேர்வு  புதிய JTO ஆளெடுப்பு விதி 2014ன்படி நடத்தப்படும். 

2013-14, 2014-15, மற்றும் 2015-16ம் ஆண்டுகளுக்கான
 JTO காலியிடங்களை கணக்கீடு செய்யவும், தேர்வுக்கான அறிவிப்பு செய்யவும்  மாநில நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. 

    BSNL நிர்வாகம் 28/01/2016 அன்று வெளியிட்டுள்ள கடிதத்தின்படி 

  • மாநிலங்கள் தேர்வு அறிவிப்பு செய்யும் நாள்               - 15/02/2016
  • இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நாள்              - 22/02/2016
  • இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி  நாள்  - 22/03/2016
  • தேர்வு நடைபெறும் நாள்                                                    - 08/05/2016
  • தேர்வு இணையதளத்தின் வாயிலாக நடைபெறும்                                   (ON LINE EXAMINATION)
  • தேர்வு EXAMINATION AGENCY  மூலமாக  நடத்தப்படும்.
  • தற்போது பயிற்சியில் இருக்கும் OFFICIATING JTO தோழர்களை நிரந்தரம் செய்தது போக மீதமுள்ள  காலியிடங்கள் கணக்கிடப்பட வேண்டும்.

இலாக்காத்தேர்வுகள்  இணையதளத்தின் வழியாக
 Agency  மூலமாக நடத்தப்படும் என்பது நெருடலாக உள்ளது. 

   தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி JTO இலாக்காத்தேர்வு அறிவிப்பு செய்ய வைத்த நமது மத்திய சங்கத்திற்கு நமது நன்றிகள் உரித்தாகுக.

Thursday, 28 January 2016

31/01/2016 அன்று பணி நிறைவு பெறும் 

NFTE இயக்கத்தின் மூத்த தலைவர்
 தோழர்.நாகேஸ்வரன் அவர்களின் சகோதரர்... 
காசாளர் பதவியை காலமெல்லாம்...
கண்ணியமாய் கைக்கொண்ட  நேர்மையாளர் ..
அன்புத்தோழர்... சாமி 
N.பாரதிதாசன் 
SRTOA /இராமநாதபுரம் 

கம்பியும் இழுப்பார்.. 
கணிப்பொறியும் இயக்குவார்..
கடமையிலே கண்ணாய் இருந்திடுவார்... 
எழுத்தறிந்தவர்.. எடுத்தெறியாதவர்..
அருமைத்தோழர். 
M.பாலன்  
TM/இராமேஸ்வரம் 

சாதி மத சங்கிலியை அறுத்தவர்...
நன்மார்க்க நபி வழி நடந்தவர்...
அன்புத்தோழர்...
K.ஆறுமுகம்  
STS/இராமநாதபுரம் 

ஆகியோரின் பணி நிறைவுக்காலத்தில்...
துன்பம்  பனியாய் மறைந்திடட்டும்...
மகிழ்ச்சி மழையாய்ப் பொழிந்திடட்டும்...

Wednesday, 27 January 2016

களம் வென்ற கார்த்திகா 
தங்கமான  கார்த்திகா...
தங்கம்  வென்ற காட்சி 

வெள்ளைச்சிரிப்பு கார்த்திகா 
வெள்ளி வென்ற காட்சி..


மைசூரில் 2016 ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெற்ற
15வது அகில இந்திய  BSNL  தடகளப்போட்டியில்...

நமது NFTE மாநில இளைஞரணித்தோழியர்..

இல.கார்த்திகா   

TTA  அவர்கள்

 ஒரு தங்கம், இரு வெண்கலம், மூன்று வெள்ளி,
என ஆறு பதக்கங்களை வென்று 
அரும் சாதனை புரிந்துள்ளார்.

குழந்தைக்குத் தாயான போதும்..
தன் தந்தைக்கு உடல் நலம் குன்றியுள்ள சூழ்நிலையிலும்..
மனம் தளராமல் தடகளப் போட்டியில் பங்கேற்று 
ஆறு கார்த்திகைப்பெண்களைப் போல் 
ஆறு பதக்கங்களை வென்று..
காரைக்குடிக்குப் பெருமை சேர்த்த...
அன்புத்தோழியர். கார்த்திகா அவர்கள்
நலமும்... வளமும்... பெற வாழ்த்துகின்றோம்.
---------------------------------------------------------------------------------------
வாழ்த்துச்சொல்ல : 9489944684

Tuesday, 26 January 2016

NFTE 
விரிவடைந்த 
மத்திய செயற்குழு 


மாவட்டச்செயலர்கள் பங்கேற்கும் 
விரிவடைந்த மத்திய செயற்குழு 

01/03/2016 & 02/03/2016 - பாட்னா 

- : ஆய்படு பொருள் :- 
  • அமைப்பு நிலை 
  • ஊழியர் பிரச்சினைகள் 
  • உறுப்பினர் சரிபார்ப்பு 
  • போனஸ் 
  • SWAS - 100  நாள் திட்டம் 
  • தனியார் மயமாகும்   BSNL சேவைகள் 
  • DELOITTEE  பரிந்துரைகள் 
  • புதிய செல் கோபுர நிறுவனம் 
  • BSNL மற்றும் MTNL இணைப்பு 
  • இதர பிரச்சினைகள் 

Monday, 25 January 2016



குடியரசு தின வாழ்த்துக்கள் 


அன்று அடிமை இந்தியாவை 
வெள்ளையர்களிடம் இருந்து மீட்டோம் 
இன்று வெள்ளை வேட்டியிடம் 
அடிமைகளாகவே இந்தியாவில் வாழ்கிறோம்... 

கல்லூரியில் நடக்கும் பெண்  கொடுமை,
நம் நாட்டில் ஐ ஐ டி நடக்கும்  சாதிக் கொடுமை, 
தமிழனையும் தமிழனின் கலாச்சாரத்தை  அழிக்கும் கொடுமை, 
மனிதனை மழுங்க செய்யும் மதுக்கொடுமை,  
மனிதனை ஒற்றுமையாக வாழவிடாமல் மதக்கொடுமை,  
ஏன் என்று கேட்டால் சிறையில் அடை 
எதிர்த்து கேட்டால் கல்லறையில் அடை  


இனியொரு விதிசெய் வோம் 
அதை எந்த நாளும் காப்போம் 
பாரத சமுதாயம்  வாழ்கவே - வாழ்க வாழ்க
பாரத சமுதாயம்  வாழ்கவே

அனைவருக்கும்
 67 வது குடியரசு தின 
நல் வாழ்த்துக்கள் 

Friday, 22 January 2016


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

120 வது  பிறந்த தினம் 





நேதாஜியின்   இறுதி உரை: 

"நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!"

Saturday, 16 January 2016


செய்திகள் 

NFTE - BSNLEU - AIBSNLEA -AIBSNLOA - SNEA 
தலைவர்கள் பங்கேற்பு 

தமிழக முதன்மைப்பொதுமேலாளர் 
மற்றும் பொதுமேலாளர்கள்  கருத்துரை..

தோழர்களே.. 
புதுச்சேரி நோக்கி... 
புத்துணர்வுடன் அணி திரள்வீர்...
பங்கு பெறுவோருக்கு சிறப்பு சிறு விடுப்பு... 

---------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளநிவாரண முன்பணம்  ரூ.25000/- 
சென்னை மற்றும் தமிழகத்தில் 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு  
  வெள்ள நிவாரண
முன் பணம் கிடைக்க
முழு முயற்சி எடுத்திட்ட

மத்திய,மாநில சங்கங்களுக்கு,
 மாவட்ட சங்கத்தின் நன்றிகள்.

வெள்ள நிவாரண தொகை  ரூ.25000/-  
மாத   தவணை ரூ.1000/-
மொத்தம் 25 மாதங்கள் 
 ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் உண்டு.




Thursday, 14 January 2016


மாடு தின்னவும் வழியில்லை..
மாடு பிடிக்கவும் வகையில்லை..
மாடாய் உழைப்பவன் வாழ்விலே..
மறுமலர்ச்சிக்கு வழியில்லை...

உழைப்பவன் உரிமை  பொங்கட்டும்...
உழவன் வாழ்வு பொங்கட்டும்..

அனைவருக்கும் 
தமிழர் திருநாள் 
தைப்பொங்கல் 
நல்வாழ்த்துக்கள்...

--------------------------------------------------

மாவட்டச்செயலர்  தோழர்.மாரி  தனது தங்கையின் 
திருமணத்திற்காக அந்தமான் செல்வதால் 
மூத்த மாவட்ட உதவிச்செயலர் 
தோழர்.லால் பகதூர் அவர்கள் 
பொறுப்பு மாவட்டச்செயலராக செயல்படுவார்.
தொடர்புக்கு : 9443497050
சொல்லில் பெரிது செயல்...

SWAS  100 நாள் திட்டம் காரைக்குடி மாவட்டத்தில் 
முழு முனைப்புடன் அமுல்படுத்தப்படுகிறது.

அதிகாரி - தொழிலாளி -  
என் சங்கம் - உன் சங்கம் 
என் கேடர் - உன் கேடர் 
என் பணி  - உன் பணி 
பணிநேரம்  - ஓய்வு நேரம் 
பகல் நேரம்  - இரவு நேரம் 
என்ற எந்த வித்தியாசமும் இன்றி 
ஒரே திசை வழியில்,,.
BSNLஐ மேம்படுத்தும் பணியில் 
ஒன்று பட்டு உழைக்கும் 

தோழர்கள் அனைவருக்கும் 
இனிய பொங்கல்
 நல் வாழ்த்துக்கள்..

Tuesday, 12 January 2016

தேக்க நிலை ஊதியம் 

RM/GR'D  ஊழியர்களின்  ஆண்டு உயர்வுத்தொகை தேக்கநிலை குறித்து 11/01/2016 அன்று நிர்வாகத்துடன் ஊழியர் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. NFTE  சார்பாக தோழர்.ராஜ்மௌலி கலந்து கொண்டார்.
அடிமட்ட ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையைத் தீர்த்து வைத்திட BSNL  நிர்வாகம் வெகுவாக வலியுறுத்தப்பட்டது. 
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

  • தற்போது இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேக்கநிலை ஆண்டு உயர்வுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதை ஆண்டு தோறும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. DOTயின் ஒப்புதல் பெற்று இதை அமுல்படுத்த நிர்வாகம் முயற்சிக்கும் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
  • RM/GR'D  ஊழியர்களுக்கு நாலுகட்டப்பதவி உயர்வு வழங்கிடும் போது தேக்கநிலை ஆண்டு உயர்வுத்தொகை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இது தவறு என்று ஊழியர் தரப்பில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  நிர்வாகம்  பரிசீலனை செய்ய   ஒத்துக்கொண்டுள்ளது.

பல ஆயிரம் RM/GR' D ஊழியர்கள் பல ஆண்டுகளாக தேக்க நிலையால் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இவர்கள்  தவிர SR.TOA பதவியில் உள்ள பல தோழர்களுக்கும்  NEPP  பதவி உயர்வால் 
இந்த ஆண்டு முதல் தேக்கநிலை தொடங்கி விட்டது. 
பல தோழர்களுக்கு பதவி உயர்வே பகையாகி விட்டது. 
அவர்களின் பிரச்சினையும் ஊழியர் தரப்பால் நிர்வாகத்தின் 
கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்க்கப்பட வேண்டும். 
இன்முகத்துடன் 
இனிய சேவை 
சிறப்புக் கருத்தரங்கம் 

BSNL அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு 
தமிழ் மாநிலம் 

இன்முகத்துடன்... இனிய சேவை 
மாநிலம் தழுவிய கருத்தரங்கம் 

19/01/2016 - செவ்வாய் - காலை 09.30 மணி 
கம்பன் கலையரங்கம் - புதுச்சேரி 
-------------------------------------------------------------
NFTE - BSNLEU  - AIBSNLEA - AIBSNLOA  - SNEA 
தலைவர்கள் பங்கேற்பு

தமிழக முதன்மைப்பொதுமேலாளர் 
மற்றும் பொதுமேலாளர்கள்  கருத்துரை..

தோழர்களே.. 
புதுச்சேரி நோக்கி... 
புத்துணர்வுடன் அணி திரள்வீர்...
---------------------------------------------------------------------------------
பங்கு பெறுவோருக்கு சிறப்பு சிறு விடுப்பு...

Monday, 11 January 2016

ஜனவரி - 12
தேசிய இளைஞர் தினம் 
இந்திய தேசம் தந்த 
இணையற்ற இளைஞர் 
 சுவாமி விவேகாநந்தர்...

பலமே... வாழ்வு 
பலவீனம் .. தாழ்வு..

தேசமே.. கோவில்...
எளியோரே.. கடவுள்..

எழுமின்... விழிமின்...
நில்லாது...  செல்மின்..

அவர்  மொழி சொல்வோம்..
அவர் வழி செல்வோம்..
7வது உறுப்பினர் சரிபார்ப்பு 
தற்காலிக கால அட்டவணை 




கலந்து கொள்ளும் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தல்           14/01/2016

தேர்தல் தேதி அறிவிப்பு                                                                    18/02/2016

விண்ணப்பங்களை விலக்கிக்கொள்ள கடைசி தேதி                 22/02/2016

தேர்தல் நடைபெறும் நாள்                                                                26/04/2016

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்                                        28/04/2016

முடிவு அறிவிக்கும் நாள்                                                                   28/04/2016

அங்கீகார காலம் 3 ஆண்டுகள்                                            29/04/2016 - 28/04/2019


Sunday, 10 January 2016

MRS  மருத்துவத்திட்ட 
மறு ஆய்வுக்கூட்ட முடிவுகள் 

BSNL MRS - மருத்துவத் திட்டத்தை மறு ஆய்வு செய்யும் குழுவின் கூட்டம்  08/01/2016 அன்று டெல்லியில் நடைபெற்றது. NFTE மற்றும் BSNLEU சார்பாக அதன் பொதுச்செயலர்கள் கலந்து கொண்டனர். 
கீழ்க்கண்டவை விவாதிக்கப்பட்டன.

தற்போது மருத்துவ பில்கள் CGHS நிர்யணம் செய்துள்ள குறைந்த விலையின் அடிப்படையிலேதான் பட்டுவாடா செய்யப்படுகிறது. எனவே குறைந்த தொகையில் நமக்கு சிகிச்சை அளிக்கத் தரமான மருத்துவமனைகள் தயங்குகின்றன. 
சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளும் BSNL நிர்வாகம் தரும் 
தொகை போக மிச்சத்தை ஊழியர்களிடமிருந்து கறந்து  விடுகின்றது.

தற்போதுள்ள நிதி நெருக்கடியாலும் 
ERP போன்றவற்றின் அமுலாக்கத்தாலும் 
பில்கள் குறித்த நேரத்தில் பட்டுவாடா ஆவதில்லை. 
பணம் உரிய தேதியில் கிட்டாத மருத்துவமனைகள் சலித்துப்போய் 
BSNL ஊழியர்களுக்கான தங்களது சேவையை நிறுத்திக்கொள்கின்றன.

டெல்லியில் மற்ற பகுதி ஊழியர்களுக்கு கிடைக்கும் சிகிச்சை 
அங்கேயே பணிபுரியும் NTR பகுதி ஊழியர்களுக்கு கிடைப்பதில்லை.

மேலும் இது போன்ற பல பிரச்சினைகள் 
ஊழியர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டன.

முடிவில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

  • BHEL, பாரத ஸ்டேட் வங்கி, COAL INDIA போன்ற பொதுத்துறைகளில் மருத்துவத்திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. எனவே அங்குள்ள நடைமுறைகளைக் கேட்டறிவது.
  • தற்போது தேங்கிக்கிடக்கும் அனைத்து மருத்துவ பில்களையும் மாநிலங்கள் உடனடியாக  பட்டுவாடா செய்வது.
  • பல இடங்களில் அமுலில் உள்ள MEDI CLAIM என்னும் மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்திற்கு மாறுவது பற்றி ஆலோசிப்பது.
  • அடுத்த  பிப்ரவரி மாத  இறுதியில் மீண்டும் கூடி இது பற்றி மேலும் விவாதிப்பது.
மெய்ப்பொருள் காண்பது அறிவு 

மூன்றடியில் வாமனன் உலகளந்தான். 
இரண்டடியில் வள்ளுவன் உலகளந்தான்...

133  அதிகாரங்களில்.. 
1330 குறட்பாக்களை..
இயற்றிய வள்ளுவன்... 
மெய்யுணர்தல் என்ற அதிகாரத்திலும்.. 
அறிவுடைமை என்ற அதிகாரத்திலும்.. 
இரண்டு குறட்பாக்களில் 
ஒரே ஈற்றடியை அமைத்துள்ளான்..

அந்த இணையில்லா ஈற்றடிதான் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு 
என்பதாகும்...

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு" 
என்று மெய்யுணர்தல் அதிகாரத்திலும் 

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு" 
என அறிவுடைமை அதிகாரத்திலும் 

 ஒரே  ஈற்றடியை இருமுறை தந்தான் வள்ளுவன்...

உலகப்பொதுமறை தந்த வள்ளுவன் 
ஒரு ஈற்றடியை இரண்டு குறட்பாக்களில் 
இரண்டு முறை தந்த காரணம் 
நாம் சிந்திக்கத்தக்கது..

அறிவு என்பது வெறும் கல்வி கற்றல் மட்டுமன்று...
அறிவு என்பது ஒரு தேடல்..
உண்மையுணரும்  தேடல் 
மெய்யுணரும் தேடல்..
ஐந்தறிவுகளின் துணை கொண்டு 
எதையும் பகுத்துணரும் 
நுண்ணறிவே பகுத்தறிவாகும்...

எனவேதான் எதிலும்.. எங்கும்.. எப்போதும்..
மெய்ப்பொருள் காண்பதே அறிவு ..
என அறிவின் இலக்கணத்தை 
 இரு முறை இரு குறட்பாக்களில் 
வலியுறுத்தியுள்ளார் வள்ளுவர்..
==================================================================
07/01/2016 அன்று 
காரைக்குடி அழகப்பா பல்கலையில்.. 
அயலக அறிஞர்கள் பங்கேற்ற 
  திருக்குறள் பன்னாட்டுக்கருத்தரங்கில்..  
தவத்திரு குன்றக்குடி அடிகளார் பேசக்கேட்டது....
TRUE KNOWLEDGE FINDS TRUTH...

Thursday, 7 January 2016

யித்தில்... ஒருவன்... 

கருத்து வழி அறியாதவர்களின் கைகாட்டி 
இருட்டு வழி செல்வோரின் கைவிளக்கு 
குருட்டு விழி கொண்டோரின் ஞான ஒளி 
அஞ்ஞானம் கொண்ட பிள்ளைகளின் ஞானத்தந்தை 

சோதனை ஆயிரம் கடந்த தலைவன்.. 
அகவை நூறுஅடையப்போகும் தோழன்... 

அன்புத்தோழர். 
D.ஞானையா 
அவர்களை  அவரது 
அகவை 96ல் அகமகிழ்ந்து..
வணங்குகிறோம்... வாழ்த்துகிறோம்...
--------------------------------------------------------------------------------------------------------------------
நம் மீது...
விமர்சனங்கள் ஆயிரம் உண்டு..
கரிசனங்களும் ஆயிரம் உண்டு...

உண்மையின் தரிசனம் தேடும் 
காரைக்குடி NFTE  இணைய தளத்தின்.. 
ஆயிரமாவது பதிவாக..

அன்புத்தலைவன்... 
ஆயிரத்தில் ஒருவன். 
தோழர்.ஞானையா அவர்களின் 
புகழ் பாடும் பதிவாக வெளியிடுவதில் 
மட்டற்ற மகிழ்வடைகிறோம்...