தேக்க நிலை ஊதியம்
RM/GR'D ஊழியர்களின் ஆண்டு உயர்வுத்தொகை தேக்கநிலை குறித்து 11/01/2016 அன்று நிர்வாகத்துடன் ஊழியர் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. NFTE சார்பாக தோழர்.ராஜ்மௌலி கலந்து கொண்டார்.
அடிமட்ட ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையைத் தீர்த்து வைத்திட BSNL நிர்வாகம் வெகுவாக வலியுறுத்தப்பட்டது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
- தற்போது இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேக்கநிலை ஆண்டு உயர்வுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதை ஆண்டு தோறும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. DOTயின் ஒப்புதல் பெற்று இதை அமுல்படுத்த நிர்வாகம் முயற்சிக்கும் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
- RM/GR'D ஊழியர்களுக்கு நாலுகட்டப்பதவி உயர்வு வழங்கிடும் போது தேக்கநிலை ஆண்டு உயர்வுத்தொகை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இது தவறு என்று ஊழியர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிர்வாகம் பரிசீலனை செய்ய ஒத்துக்கொண்டுள்ளது.
பல ஆயிரம் RM/GR' D ஊழியர்கள் பல ஆண்டுகளாக தேக்க நிலையால் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இவர்கள் தவிர SR.TOA பதவியில் உள்ள பல தோழர்களுக்கும் NEPP பதவி உயர்வால்
இந்த ஆண்டு முதல் தேக்கநிலை தொடங்கி விட்டது.
பல தோழர்களுக்கு பதவி உயர்வே பகையாகி விட்டது.
அவர்களின் பிரச்சினையும் ஊழியர் தரப்பால் நிர்வாகத்தின்
கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment