Sunday 10 January 2016

மெய்ப்பொருள் காண்பது அறிவு 

மூன்றடியில் வாமனன் உலகளந்தான். 
இரண்டடியில் வள்ளுவன் உலகளந்தான்...

133  அதிகாரங்களில்.. 
1330 குறட்பாக்களை..
இயற்றிய வள்ளுவன்... 
மெய்யுணர்தல் என்ற அதிகாரத்திலும்.. 
அறிவுடைமை என்ற அதிகாரத்திலும்.. 
இரண்டு குறட்பாக்களில் 
ஒரே ஈற்றடியை அமைத்துள்ளான்..

அந்த இணையில்லா ஈற்றடிதான் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு 
என்பதாகும்...

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு" 
என்று மெய்யுணர்தல் அதிகாரத்திலும் 

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு" 
என அறிவுடைமை அதிகாரத்திலும் 

 ஒரே  ஈற்றடியை இருமுறை தந்தான் வள்ளுவன்...

உலகப்பொதுமறை தந்த வள்ளுவன் 
ஒரு ஈற்றடியை இரண்டு குறட்பாக்களில் 
இரண்டு முறை தந்த காரணம் 
நாம் சிந்திக்கத்தக்கது..

அறிவு என்பது வெறும் கல்வி கற்றல் மட்டுமன்று...
அறிவு என்பது ஒரு தேடல்..
உண்மையுணரும்  தேடல் 
மெய்யுணரும் தேடல்..
ஐந்தறிவுகளின் துணை கொண்டு 
எதையும் பகுத்துணரும் 
நுண்ணறிவே பகுத்தறிவாகும்...

எனவேதான் எதிலும்.. எங்கும்.. எப்போதும்..
மெய்ப்பொருள் காண்பதே அறிவு ..
என அறிவின் இலக்கணத்தை 
 இரு முறை இரு குறட்பாக்களில் 
வலியுறுத்தியுள்ளார் வள்ளுவர்..
==================================================================
07/01/2016 அன்று 
காரைக்குடி அழகப்பா பல்கலையில்.. 
அயலக அறிஞர்கள் பங்கேற்ற 
  திருக்குறள் பன்னாட்டுக்கருத்தரங்கில்..  
தவத்திரு குன்றக்குடி அடிகளார் பேசக்கேட்டது....
TRUE KNOWLEDGE FINDS TRUTH...

No comments:

Post a Comment