Sunday 10 January 2016

MRS  மருத்துவத்திட்ட 
மறு ஆய்வுக்கூட்ட முடிவுகள் 

BSNL MRS - மருத்துவத் திட்டத்தை மறு ஆய்வு செய்யும் குழுவின் கூட்டம்  08/01/2016 அன்று டெல்லியில் நடைபெற்றது. NFTE மற்றும் BSNLEU சார்பாக அதன் பொதுச்செயலர்கள் கலந்து கொண்டனர். 
கீழ்க்கண்டவை விவாதிக்கப்பட்டன.

தற்போது மருத்துவ பில்கள் CGHS நிர்யணம் செய்துள்ள குறைந்த விலையின் அடிப்படையிலேதான் பட்டுவாடா செய்யப்படுகிறது. எனவே குறைந்த தொகையில் நமக்கு சிகிச்சை அளிக்கத் தரமான மருத்துவமனைகள் தயங்குகின்றன. 
சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளும் BSNL நிர்வாகம் தரும் 
தொகை போக மிச்சத்தை ஊழியர்களிடமிருந்து கறந்து  விடுகின்றது.

தற்போதுள்ள நிதி நெருக்கடியாலும் 
ERP போன்றவற்றின் அமுலாக்கத்தாலும் 
பில்கள் குறித்த நேரத்தில் பட்டுவாடா ஆவதில்லை. 
பணம் உரிய தேதியில் கிட்டாத மருத்துவமனைகள் சலித்துப்போய் 
BSNL ஊழியர்களுக்கான தங்களது சேவையை நிறுத்திக்கொள்கின்றன.

டெல்லியில் மற்ற பகுதி ஊழியர்களுக்கு கிடைக்கும் சிகிச்சை 
அங்கேயே பணிபுரியும் NTR பகுதி ஊழியர்களுக்கு கிடைப்பதில்லை.

மேலும் இது போன்ற பல பிரச்சினைகள் 
ஊழியர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டன.

முடிவில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

  • BHEL, பாரத ஸ்டேட் வங்கி, COAL INDIA போன்ற பொதுத்துறைகளில் மருத்துவத்திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. எனவே அங்குள்ள நடைமுறைகளைக் கேட்டறிவது.
  • தற்போது தேங்கிக்கிடக்கும் அனைத்து மருத்துவ பில்களையும் மாநிலங்கள் உடனடியாக  பட்டுவாடா செய்வது.
  • பல இடங்களில் அமுலில் உள்ள MEDI CLAIM என்னும் மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்திற்கு மாறுவது பற்றி ஆலோசிப்பது.
  • அடுத்த  பிப்ரவரி மாத  இறுதியில் மீண்டும் கூடி இது பற்றி மேலும் விவாதிப்பது.

No comments:

Post a Comment