Wednesday 14 September 2016

வரலாற்றின் பொன்னெழுத்துக்கள் 

செப்டம்பர் 19,1968   
மத்திய அரசு ஊழியர்களின் மகத்தான வேலை நிறுத்தம்.
வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. 
இந்தப் போராட்டத்துக்கு றைகூவல் விட்டுத்தலைமை தாங்கிய 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் ஞானையா 
தனது 97வது வயதிலும் ஆரோக்கியத்துடன்..
கோவையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு
அகவிலைப்படி இணைப்புகுறைந்த பட்ச ஊதியம் 
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 
வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடப்பட்டது.

அறைகூவல் விடுத்த தோழர் ஞானையா 
செப்…18 அன்றே கைது செய்யப்பட்டு 
டெல்லி திகார் சிறையில் அடைக்கப் பட்டார்.
 ஒன்பது நாட்கள் சிறையில் இருந்த ஞானையாவை 
பாதுகாப்பு அமைச்சராக இருந்த வி.கேகிருஷ்ணமேனன் 
சிறைச்சாலைக்கே வந்து சந்தித்து ஜாமீனுக்கு ஏற்பாடு செய்தார்.

பழிவாங்குதல் நடவடிக்கையில் அரசு இறங்கியதால் 
சிறைக்குள்ளிருந்தே உள்ளிருப்பு வேலைநிறுத்தத்திற்கு
கையொப்பமிட்டு தனது போர்க்குணத்தை வெளிப் படுத்தினார்.

டெல்லியில் மட்டும் 20,000 தொழிலாளர்களும்,
நாடு முழுதும் லட்சக் கணக்கானவர்களும் 
வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

நாடு முழுதும் சுமார் 70000 தொழிலாளர்கள் 
தற்காலிக பணி நீக்கமும், 6000 பேர்கள் நிரந்தரப்பணிநீக்கமும்
60000 ஊழியர்களைக் கைது செய்தும் அரசு பழி வாங்கியது. 
பழியைச் சரி செய்திட தொடர்ந்து போராடியும்
ஓராண்டிற்குப் பிறகே தீர்க்கப்பட்டது.

இருப்பினும் தொழிற்சங்க அங்கீகாரம் 
தபால் தந்திக்கு மட்டும் ரத்து செய்யப்பட்டது. 
இதைக் கண்டித்தும்மீண்டும் அங்கீகாரம் வழங்கக் கோரியும்
தோழர்கள் ஞானையாகுப்தா ஆகியோர்
காலவரையற்ற உண்ணா விரதம் துவக்கினர்.
அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களான 
எஸ்..டாங்கே,அச்சுதமேனன்,வாஜ்பேயி 
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அரசுக்கு நெருக்கடி அதிகமானதால் 
உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவானின் சார்பில் 
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோகன்தாரியாஅருணாஆசப்அலி 
ஆகியோர் உண்ணாவிரதப் பந்தலுக்கே வந்து 
மீண்டும் அங்கீகார உத்தரவினை எழுத்துப் பூர்வமாகக்கொடுத்து,
பழச்சாறும்  கொடுத்து  உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.

இந்த போராட்டத்தில் புதுச்சேரிக்கென்று ஒரு பெருமை உண்டு.
நாடு முழுதும் வேலைநிறுத்தம் 19ந்தேதி துவங்கியது. 
ஆனால் புதுவையில் மட்டும் 18ந் தேதியே துவங்கி விட்டது.
ஏனெனில் வேலைநிறுத்தம் பற்றிய சுவரொட்டியை 
ஜமால் என்கிற டெலிகிராப்மேன் 18ந் தேதி ஒட்டும்போது 
அங்கே வந்த காவல்துறை அவரை கைது செய்ததால் 
கொதிப்படைந்த தொழிலாளர்கள் அன்றே 
வேலைநிறுத்தத்தில் இறங்கி விட்டனர்.

இன்னொரு புதுமை என்னவெனில்
இந்த போராட்டத்திற்கு உதவி செய்து கொண்டிருந்த
AITUCயைச் சேர்ந்த தோழர்.குப்புசாமி என்பவரையும்
ஊழியர் என நினைத்து காவல்துறை கைது செய்து விட்டது.

இன்னும் ஒரு சில ஆண்டுகளில்
50 ஆண்டு பொன்விழா கொண்டாடும் நிலையில் 
வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்படிப்பட்ட போராட்டத்தை 
இன்றைய முக்கியத் தலைவர்களே மறந்து விட்ட நிலையில்...

காரைக்குடி,மதுரை மாவட்ட சங்கங்கள் இணைந்து 
1968 போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து போற்றுவதை 
நான் பாராட்டுகிறேன்.

தமிழ் மாநில சங்கம் சார்பில் 
மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர்.அசோகராஜன் 
முன்னாள் மாநிலப்பொருளர் 

அவருக்கு நமது  நன்றிகள் பல...

2 comments:

  1. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. இது போன்ற வரலாற்று நிகழ்வுகள் நிச்சயம் இத் தலைமுறைக்கு தேவை. வரலாறு தொடருட்டும்

    ReplyDelete