Thursday 15 August 2019

யானைப்பசிக்கு சோளப்பொரி…

முன்பெல்லாம் ஒப்பந்த ஊழியர்களைக் கண்டால் நலம் விசாரிப்பதுண்டு.
ஆனால் இப்போது அவர்களைக் கண்டாலே 
நாம் தலையைக் குனிந்து செல்ல வேண்டிய நிலை உருவாகி விட்ட்து.
காரணம் சொல்ல வேண்டியதில்லை. 
ஆறேழு மாதங்களாக சம்பளம் இல்லை. 
2019ம் ஆண்டு அவர்களுக்கு சோதனை மிகுந்த ஆண்டாகி விட்டது.

காவல் பணியில் இருந்து கம்ப்யூட்டர் பணிவரை 
அவர்களின் பங்களிப்பு இல்லாத இடமே இல்லை. 
ஒரு அலுவல்கத்திற்குள் நுழையும்போதே அங்கு காவல் ப்ணியில் இருக்கும் 
ஒரு ஒப்பந்த ஊழியரைக் கண்ணுற்ற பின்புதான் நாம் அலுவலகத்திற்குள் செல்கிறோம். 

மிகமிக சொற்ப சம்பளத்தில் பணி செய்து கொண்டிருந்தார்கள். 
அந்த சொற்ப சம்பளமும் தற்போது கிடைக்கவில்லை என்பதுதான் 
வேதனையிலும் வேதனையான விஷயம்.
இந்தியா முழுவதும் ஏறத்தாழ 100 கோடிக்கும் மேல்
சம்பளம் நிலுவையில் உள்ளது என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் சுமார் 20 கோடி அளவிற்கு சம்பளப்பாக்கி இருக்கலாம். 
ஒவ்வொரு ஒப்பந்த ஊழியருக்கும் 
50 ஆயிரம் 60 ஆயிரம் அளவிற்கு சம்பள பாக்கி. 
ஒவ்வொரு குத்தகைக்காரருக்கும் 
ஒருகோடி இரண்டுகோடி என பில்கள் பாக்கி உள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழகத்திற்கு 
கோடி அளவில் நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது. 
இது ஒரு மாத சம்பளப்பட்டுவாடாவிற்கே போதாது. 
மூன்று நான்கு மாதங்களாக கையில் இருந்து சம்பளம் பட்டுவாடா செய்தோம். 
எனவே இப்போது எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சொற்ப தொகையில் 
எங்களால் சம்பளம் போடமுடியாது என ஒப்பந்தகாரர்கள் கையை விரிக்கின்றார்கள்.

நிர்வாகம் மனிதாபிமான அடிப்படையில் 
ஒப்பந்த ஊழியர்களின் ஒட்டுமொத்த சம்பளப்பாக்கியையும் வழங்க வேண்டும்.
தேவையெனில் நிரந்தர ஊழியர்களின் சம்பளத்தைக் கூட நிறுத்தி வைத்துவிட்டு 
ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கிடலாம்.
ஏனெனில் அவர்கள் நாள்தோறும் மரித்துகொண்டிருக்கின்றார்கள்.

No comments:

Post a Comment