செய்திகள்
ONGC நிறுவனம் 15 ஆண்டு சேவை முடித்த 40 வயதைக்கடந்த ஊழியர்களுக்கு விருப்ப ஒய்வுத்திட்டத்தை அறிவித்துள்ளது. முழு உடல்திறனோடு பணிபுரிய இயலாதவர்கள் மருத்துவ அடிப்படையில் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதுவரை பணிபுரிந்த ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 60 நாள் சம்பளம் அல்லது மிச்சமிருக்கும் சேவைக்காலத்திற்கான சம்பளம் இதில் எது குறைவோ அது விருப்ப ஒய்வு பலனாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வருமான வரி திருப்புத்தொகை (INCOME TAX REFUND ) மூலம் BSNL நிறுவனம் இந்த ஆண்டு எறத்தாழ ரூ. 8100 கோடி அளவிற்கு தனது நட்டத்தைக்குறைக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஜூலை 2015க்குள் இராணுவத்திற்கான வலைப்பின்னலை BSNL நிறுவனம் செய்து முடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
உலகளாவிய தொலைதொடர்பு சேவைக்காக BSNL நிறுவனம் பங்களாதேஷிடம் 100 gigabytes of international bandwidth குத்தகைக்கு எடுக்க முடிவு செய்துள்ளது. இதனால் பிற உலக நாடுகளின் தொடர்புக்காக TATA நிறுவனத்தை முழுவதும் நம்பியுள்ள நிலை மாறும்.
01/10/2000 அன்று TTA தோழர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்ட முறை அதிக ஏற்றத்தாழ்வுகளை உண்டு பண்ணியதால் புதிய முறையில் மறு நிர்ணயம் செய்ய மத்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய சங்க செயற்குழு செப்டம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் நடைபெறும்
நாலு கட்டப்பதவி உயர்வில் மத்திய சங்கம்
கீழ்க்கண்ட மாற்றங்களைக் கோரியுள்ளது.
அதிகாரிகளுக்கு இணையான பதவி உயர்வு
SC/ST தோழர்களுக்கு உரிய சலுகை
தேக்க நிலை அடையும் RM/GRD தோழர்களுக்கு மாற்று வழி.
CR குறிப்பில் AVERAGE பதிவுகளை புறந்தள்ளி பதவி உயர்வு அளித்தல்.
01/10/2000ல் 7100 சம்பளத்திற்கு மேல்நிலைப்படுத்தபட்ட TTA தோழர்களுக்கு அதனை முதல்கட்ட பதவி உயர்வாக எடுக்க கூடாது.
No comments:
Post a Comment