Saturday, 3 August 2013

காலத்தே நடைபெற்ற கருத்தரங்கம்

ஆகஸ்ட் 3 அன்று டெல்லியில் அனைத்து சங்கங்கள் சார்பாக BSNL சீரமைப்புக்கருத்தரங்கம் தோழர்.C.சிங் தலைமையில் சிறப்புடன்  
நடைபெற்றது. தோழர். குருதாஸ் தாஸ் குப்தா உள்ளிட்ட மத்திய சங்கத்தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

  மிகுந்த வருமானமும்,லாபமும், வங்கி இருப்பும் கொண்டு  பொதுத்துறையில் பொன்முட்டையிடும் வாத்தாக விளங்கிய BSNL நிறுவனத்தை திட்டமிட்டு கழுத்தறுத்த அரசின் தவறான முடிவுகளும் கொள்கைகளும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. 

  • BSNL உருவாக்கத்தின் போது நிதி ஆதார மேம்பாட்டிற்காக  அரசு அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டது..
  • விலை போகாத SPECTRUM விலையாக 18500 கோடியை BSNL நிறுவனத்திடம் இருந்து அபகரித்து BSNL இருப்பைக் காலி  செய்தது..
  • உபகரணங்கள் மற்றும் கருவிகள் வாங்கும் நடைமுறையை இழுத்தடித்து BSNLன் வளர்ச்சியைத்தடுத்தது 
  • திறமையும் நேர்மையும் ஆற்றலும் அற்ற ITS அதிகாரிகளை BSNLக்கு தலைமை தாங்க வைத்து BSNL நிறுவனத்தை நொடிக்க வைத்தது..

போன்ற மிக முக்கிய பிரச்சினைகள்
விவாதிக்கப்பட்டன.  தொலைத்தொடர்பில் 100 சதம் அந்நிய முதலீடு என்று அரசு அறிவித்திருக்கும் நிலையில் இந்த அரசின் பொதுத்துறை விரோத போக்கை BSNL நிறுவனத்தை திட்டமிட்டே வீழ்த்திடும் கயமையை கருத்தரங்கங்கள் மூலமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்ட மட்டங்களில் ஊழியர்களிடமும் மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என கருத்தரங்கம் வழிகாட்டியுள்ளது.

கருத்தரங்க வழி காட்டுதலை 
கருத்துடன் கேட்டிடுவோம்..
காலத்தே செயல்படுத்துவோம்.. தோழர்களே..

No comments:

Post a Comment