அதிகாரிகள் சங்கங்களுக்கான
புதிய அங்கீகார விதிகள்
அதிகாரிகள் சங்கங்களுக்கான புதிய அங்கீகார விதிகளை உருவாக்க குழு அமைக்கப்பட்டு அந்த குழு தனது பரிந்துரைகளை தந்துள்ளது.
புதிய அங்கீகார விதிகளுக்கான நகல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் மீதான கருத்துக்களை அதிகாரிகள் சங்கங்கள் 31/08/2013க்குள் தெரிவிக்க வேண்டும்.
- 3 ஆண்டுக்கொரு முறை தேர்தல் நடைபெறும்.
- தேர்தல் CHECK OFF முறையில் சந்தா பிடித்தத்தின் மூலம் நடைபெறும்.
- 35 சதம் அல்லது அதற்கு மேல் வாக்கு பெற்ற சங்கம் முதன்மைச்சங்கமாகவும், 15 சதத்திற்கு மேல் வாக்கு பெற்ற சங்கம் இரண்டாவது SUPPORTIVE அமைப்பாகவும் அங்கீகரிக்கப்படும்.
- ஓய்வு பெற்றவர்கள் பதவியில் இருக்க முடியாது.
- ஒருவர் இரண்டு அமைப்புக்களில் /சங்கங்களில் பதவியில் இருக்க முடியாது.
- தலைவர்,உதவித்தலைவர்,செயலர்,உதவிச்செயலர் மற்றும் பொருளர் பதவிகளில் 4 முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது.
- செயலர்,உதவிசெயலர் மற்றும் பொருளர் பதவிகளுக்கு மாற்றல் வசதி உண்டு.
- அகில இந்திய அளவில் 15 நிர்வாகிகளும், மாநிலத்தில் 9 நிர்வாகிகளும்,மாவட்ட மட்டத்தில் 4 நிர்வாகிகளும் இருக்க வேண்டும்.
- தங்கள் சங்கத்தின் பத்திரிகை,இணையதளம் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும்.
No comments:
Post a Comment