BSNL/MTNL சீரமைப்புக்குழு
நிதியமைச்சர் திரு.ப. சிதம்பரம் தலைமையிலான BSNL/MTNL சீரமைப்புக்குழு 12/09/2013 அன்று கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை
BSNLலில் ஒருலட்சம் பேருக்கும்
MTNLலில் 20ஆயிரம் பேருக்கும் விருப்ப ஒய்வு அளிப்பது
MTNL ஓய்வூதிய சுமைக்காக 5925 கோடி நிதியுதவி பெறுவது
2010ல் 4G சேவைக்காக தண்டமாக கட்டிய
ஏறத்தாழ 23000 கோடி BWA பணத்தை திரும்ப பெறுவது..
8900 கோடி நட்டத்தை சந்தித்துள்ள BSNL,
5000 கோடி நட்டத்தை சந்தித்துள்ள MTNL
ஆகிய அரசு நிறுவனங்களை நட்டத்தில் இருந்து மீட்பது...
போன்ற மிக முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒவ்வொரு முறையும் பல எதிர்பார்ப்புக்கள் நிலவுகின்றது.
ஆயினும் உருப்படியான காரியங்கள் எதுவும் நடந்தபாடில்லை.
மந்திரிகள் கூட்டம் நடக்கின்றது என்ற செய்தியை கேட்டு கேட்டு
கவிஞர். மீராவின்
கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
கவிதை வரிகளே நினைவுக்கு வருகின்றன.
ஆனாலும் காத்திருப்போம்..
பெட்ரோல் டீசல் வெங்காயம் விலை இறங்கும்..
BSNL/MTNL நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன்..
No comments:
Post a Comment