Friday, 31 January 2014

வாழ்க.. பல்லாண்டு ..


02/02/2014 
மணவிழா காணும் 

காரைக்குடி NFTE முன்னணித்தோழர் 
சி .முருகன், STS 
அவர்களின் புதல்வி 


செல்வி. மு. பாரதி நீலப்பிரியா 

செல்வன். அ. பிரகாஷ் 

மணமக்கள் 
ஏற்றமிகு  வளமுடன்.. 
 எல்லா நலமுடன்..
பல்லாண்டு  வாழ 
வாழ்த்துகின்றோம்.

Thursday, 30 January 2014

வாழ்க.. வளமுடன் 

இன்று 31/01/2014 
காரைக்குடி மாவட்டத்தில் 
பணி நிறைவு பெறும் 

மனிதநேய அடையாளம் 
தோழர். S. இராமகிருஷ்ணன் 
துணைப்பொது மேலாளர் நிதி 

கடமை வீரன் 
தோழர்.P.சூரன்
TM - கமுதி 

அன்புத்தோழியர் 
J. கனகமணி 
TM - சிவகங்கை 

சாந்தம் நிறைந்த 
தோழர். N. சந்திரசேகரன் 
JTO - சிவகங்கை 

காரைக்குடியின் கடைசி லைன்மேன் 
தோழர். V. தட்சிணாமூர்த்தி 
LM - தேவகோட்டை 

ஆகியோரின் 
பணி நிறைவுக்காலம் 
சிறக்க 
வாழ்த்துகின்றோம்.
வெண்கொடி  பறக்கும் 
விருதுநகர்..

விருதுநகர் மாவட்டச்சங்க நிர்வாகிகள் தேர்வு 
தேர்தல் இன்றி, மோதல் இன்றி
முத்தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் முழுமை பெற்றுள்ளது.
கீழ்க்கண்ட தோழர்கள் மாவட்டச்சங்க நிர்வாகிகளாக 
தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


மாவட்டத்தலைவர் : தோழர். தளவாய் பாண்டியன், STS/RYM 

உதவித்தலைவர்கள் : தோழர்கள் :        பிள்ளையார்,TM/RYM 
                                                                        ராகவன்,STS/APK 
                                                                        மாரியப்பன்,TMO/RYM 
                                                                        அய்யாவு, TM/APK 

மாவட்டச்செயலர்  தோழர். சக்கணன், TM/VGR 

உதவிச்செயலர்கள்  தோழர்கள் :      ஜாபர்சாதிக்சேட், STS/SVK  
                                                                    ரமேஷ், SRTOA/VGR 
                                                                    இராம்சேகர்,TM/VGR 
                                                                    செல்வராஜ்,TM/VGR 

மாவட்டப்பொருளர் தோழர்.சுந்தரமகாலிங்கம், STS/RYM 

அமைப்புச்செயலர்கள் தோழர்கள் :       பாஸ்கரன் TM/VGR 
                                                                         மன்னன் மார்த்தாண்டன் TM/RYM 
                                                                         வெங்கடேஷ்வரன் TTA/APK 
                                                                         சுந்தர்ராஜன் TM/SVK 

ஏக போக மீன் பிடிக்க ..
இது குத்தகை பெற்ற குட்டை அல்ல..
சேது சமுத்திரம் ..

என நெஞ்சம் நிமிர்த்திய 
விருதுநகர் தோழர்களுக்கு நமது பாராட்டுக்கள்.
புதிய நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துக்கள்.
ஜனவரி 30
மகாத்மா மறைவு தினம் 

இங்கு... 
கொலை செய்ய
கொத்துக்கொத்தாய் 
கோட்சேக்கள் கூட்டம்  உண்டு...

பாவம்...
மரித்துப்போகத்தான் 
ஒரு மகாத்மா கூட இல்லை..

Tuesday, 28 January 2014

உலக ஓய்வு பெற்றோர் மாநாடு 
பிப்ரவரி 5,6 
பார்சிலோனா 

உலகத்தொழிற்சங்க கூட்டமைப்பின் WFTU  சார்பாக 
05/02/2014 மற்றும் 06/02/2014 ஆகிய தேதிகளில் 
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் 
உலக ஓய்வு பெற்றோர் மாநாடு 
நடைபெறுகின்றது. 

இந்தியாவில் இருந்து AIBSNLPWA அமைப்பின் சார்பாக 
அதன்  பொதுச்செயலர் தோழர்.நடராஜன் அவர்களும், 
அகில இந்தியத்துணைத்தலைவர். தோழர். கோபாலகிருஷ்ணன் 
அவர்களும் பங்கு பெறுகின்றார்கள். 
நமது வாழ்த்துக்கள்..

Monday, 27 January 2014

28/01/2014
பாம்பன் பாலம் 
நூற்றாண்டு விழா 

பாம்பன் பாலம் 
உழைப்பின் சின்னம் 
தொழில்நுட்ப அடையாளம்..

நீரை வென்றது..
நூறாண்டு நின்றது..
நிலங்களை இணைத்தது..
மனங்களைப் பிணைத்தது.

மனிதன் மகத்தானவன் 
உழைப்பு உன்னதமானது..
என்ற மாக்சிம் கார்க்கியின் 
வார்த்தையின் பொருள் விளங்க 
வந்து பாருங்கள்...
 பாம்பன் பாலத்திற்கு..
=============================================
பிரிக்கின்ற சுவர்களைத்  தகருங்கள்..
இணைக்கின்ற பாலத்தை கட்டுங்கள்..
-பைபிள்-
SC/ST  தோழர்களின் நலனுக்கான 
 பாராளுமன்றக்குழு 

SC/ST தோழர்களின் நலனுக்கான பாராளுமன்றக்குழு  அவர்களது நீண்ட நாள் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு குறிப்பு அனுப்பியுள்ளது. 32 பிரச்சினைகள் அதில் இடம் பெற்றுள்ளன . அதில் இரண்டு மிக முக்கிய பிரச்சினைகள் பற்றி நமது சங்கக்கருத்தினை பாரளுமன்றக்குழுவிற்கு தெரிவித்திடக்கோரி  நமது மாநிலச்செயலர் மத்திய சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மாநிலச்செயலர் எழுப்பியுள்ள கோரிக்கைகள் 
NEPP பதவி உயர்வில் சலுகை 

SC/ST ஊழியர்களுக்கு நாலு கட்டப்பதவி உயர்வில் சலுகைகள் அளிக்க வேண்டும் என்பது நமது நீண்ட நாள் கோரிக்கை. உச்சநீதி மன்றம் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அளித்த பல்வேறு தீர்ப்புகளை காரணம் காட்டி BSNLலில்  நாலு கட்டப்பதவி உயர்வில் SC/ST தோழர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முடியாது என நிர்வாகம் தொடர்ந்து கூறி வருகின்றது.
இது ஏற்புடையதல்ல. இட ஒதுக்கீடு அளிக்க இயலாவிட்டாலும் நாலுகட்டப்பதவி உயர்வில் அவர்களுக்கு சலுகைகள் அளிக்கலாம். DOTயில் இருந்து BSNLக்கு வந்த ஊழியர்களுக்கு முதல் கட்டப்பதவி உயர்வு 4 ஆண்டுகளிலும்,  இரண்டாம் கட்டப்பதவி உயர்வு 7 ஆண்டுகளிலும் சலுகை முறையில் வழங்கப்படுவது போல் SC/ST  உழியர்களுக்கும் நாலு கட்டப்பதவி உயர்வில் ஓராண்டு சலுகை அளிக்கலாம். வணிகத்துறையில் இது போல் சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கருணை அடிப்படை வேலையில் சலுகை

தற்போது BSNLலில் கருணை அடிப்படை வேலைக்கு மதிப்பெண் முறை பின்பற்றப்படுகின்றது. 55 மதிப்பெண் பெற்ற விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பரிசீலனைக்குப்பின் 55 மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பங்கள் கூட நிராகரிக்கப்படுகின்றன. இது நியாயமான  நடைமுறையன்று. இந்த மதிப்பெண் வழங்கும் முறையில் SC/ST தோழர்களுக்கு சலுகைகள் BSNLலில் வழங்கப்படவில்லை. இது குறித்து JCM தேசியக்குழுக்கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டது.  உடனடியாக BSNLலில் கருணை அடிப்படை பணிக்கான தேர்வு முறைகளில் SC/ST  ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். 

உரிய நேரத்தில் மேற்கண்ட முக்கியப்பிரச்சினைகளை எடுத்துரைத்த மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி அவர்களுக்கு நமது நன்றிகள்.
கனரா வங்கிக்கடன் நீட்டிப்பு 

BSNL  ஊழியர்களுக்கு பல்வேறு கடன்கள்  வழங்குவதற்காக 
கனரா வங்கியுடன் 27/01/2014  அன்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

01/12/2013 முதல் 31/12/2014 வரை உடன்பாடு அமுலில் இருக்கும்.

தனிநபர் கடன் அதிகபட்சம் 10 லட்சம் வழங்கப்படும்.
தற்போதைய தனிநபர்கடன் வட்டி விகிதம் 12.95 சதம் ஆகும்.

வீட்டுக்கடன் 75 லட்சம் வரை வழங்கப்படும்.
வட்டி விகிதம் 10.2 சதம் ஆகும்.

Sunday, 26 January 2014

விறு... விறு... விருதுநகர் மாநாடு

விருதுநகர் மாவட்ட மாநாடு 25/01/14 அன்று இராஜபாளையத்தில் விறுவிறுப்போடு  மிகுந்த சுறுசுறுப்போடு நடைபெற்றது. 
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தோழர்கள் திட்டமிட்டுக்குவிந்ததால் இராஜபாளையம் மினி மதுரையாக காட்சியளித்தது. மாநிலச்செயலர் தோழர். பட்டாபி அவர்கள் சிறப்புரையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினர் தோழர்.லிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  தோழர்.அழகர்சாமி, 
முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் தோழர். இராமசாமி மற்றும் மதுரைப்பொதுமேலாளர் திருமதி.இராஜம்
 ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிர்வாகிகள் தேர்வில் ஒருமித்த கருத்து உருவாக்கப்படாததால்  
தேர்தலை சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. 
30/01/2014 அன்று விருதுநகரில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும். காரைக்குடி தோழர்.மாரி மற்றும் 
பாண்டிச்சேரி தோழர்.அசோக்ராஜ் ஆகியோர் 
தேர்தல் பொறுப்பாளர்களாக செயல்படுவார்கள்.

விறுவிறுப்பான காரம் நிறைந்த விருதுநகரில்.. 
ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து 
அவர்களை மகிழ்வித்திடும் மத்தாப்பாக..
கேளாச்செவியான நிர்வாகத்தின்..
செவிப்பறையைப்பிளந்திடும் 

சிவகாசிப்பட்டாசாக..
புதிய தலைமை.. வந்திட.. வென்றிட..
வாழ்த்துகின்றோம்..

Saturday, 25 January 2014

ஜனவரி 26
குடியரசு தினம் 

நம் குடியரசுக்கு  ஈடில்லை..
ஆயினும் குடியிருக்க வீடில்லை..

சமத்துவம் நமது சட்டம்..
சாதிபேதம் நமது  திட்டம்...

இந்நிலை மாற்றுவோம்..
எல்லோரும் இந்நாட்டு மன்னர் 
என்னும் நிலை போற்றுவோம்..

அடுத்த குடியரசை
 அனைவருக்குமான 
குடியரசாக மாற்றுவோம்...

அனைவருக்கும் 
குடியரசு தின 
நல்வாழ்த்துக்கள்
=============================================
குடியரசு தினக் கொடியேற்றம் 
26/01/2014 - காலை 8 மணி 
 NFTE சங்க அலுவலகம் - காரைக்குடி 
 -: கொடியேற்றல்:-
தோழர். தமிழ்மாறன், TTA 
தோழர்களே.. வருக ..

Thursday, 23 January 2014


விருதுநகர் 
மாவட்ட மாநாடு

25/01/2014 - சனிக்கிழமை 
காலை  10 மணி 
இராஜபாளையம் 

-: சிறப்புரை :-

மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் 
தோழர்.சேது 

மாநிலச்செயலர் 
தோழர். பட்டாபிராமன் 

மாவட்டச்செயலர்.
தோழர். சக்கணன் 

மற்றும் முன்னணித்தோழர்கள்.

சேது வளர்த்த சங்கத்தின் 
சிறப்பைக்காப்போம்..
சீரிய தலைமை படைப்போம்..

தோழர்களே.. வருக..

Tuesday, 21 January 2014

கவலை நீங்கா 
கருணை அடிப்படை வேலை 

"விடாது புகைப்பிடிப்போரை 
விரைந்து கூற்றுவன் கைபிடிப்பான்"...
என்பது காரைக்குடியில் நுண்ணலைப்பிரிவில் பணியாற்றிய தோழர்.இராபின்சன், TM வாழ்க்கையில் நடந்தேறியது.

நூறு சதம் புகை  விட்டான்...
வாழ்வில் அரை சதம் கடப்பதற்கு முன்னே 
அப்போலோ மருத்துவமனையில் உயிர் விட்டான்.

நாற்பது வயதில் மனைவி..
நாலும் புரியா வயதில் குழந்தைகள்..
நாம் அவர்களிடம் துக்கம் கேட்க... 
துக்கம் தொண்டையை அடைக்க.. 
நம்மிடம் அவர்கள் கேட்டது..
"அண்ணே..
என்  பிள்ளைகளுக்கு 
கருணை அடிப்படையில் வேலை கிடைக்குமா ?
இது மில்லியன் சோக கேள்வி..

தொண்டையை அடைத்த துக்கம் 
இப்போது நம் நெஞ்சை அடைத்தது..

இது இங்கு மட்டுமல்ல..
மரண வீடுகள் அனைத்திலும்  மறக்காமல் கேட்கப்படும் கேள்வி இது..

மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் தவிக்கவிட்டு சென்ற 
இராபின்சன் வாரிசுக்கு 
கருணை அடிப்படையில் BSNLலில் வேலை கிடைக்குமா?
நம்மால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை..
"பார்ப்போம்" என்பதுதான் நமது பதிலாக இருந்தது..

பாவிமகன் இராபின்சன் 
ஊரெல்லாம் கடன் வாங்கி 
கழுத்தில் காதில் கிடந்ததை பணமாக்கி 
போன வருடம்  
யாரும் போகாத பக்கம் இடம் வாங்கி வீட்டைக்கட்டினானே..

இராபின்சன் மனைவி உலை வைத்த வீடு ... 
அவன் பிள்ளைகளின் வேலைக்கு உலை வைக்குமே..

வீடு பேற்றை அடைந்து விட்ட
இராபின்சன்  கட்டிய வீடு 
அவன் வீட்டு நிம்மதியைக் கெடுத்து விட்டதே..
என்ற கவலை நம் நெஞ்சைக்கவ்வியது..

கருணை அடிப்படை வேலைக்கான தகுதிகளில் 
புதிய திருத்தங்கள் உருவாக்கப்பட்டு 
BSNL நிர்வாக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக 
தற்போதைய  செய்திகள் கூறுகின்றன..

காரைக்குடி மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 
நாற்பது குடும்பங்களில் 
கருணை அடிப்படை வேலைக்கு  விண்ணப்பித்து 
வற்றாத அழுகையுடன் அகலிகையாக காத்துக்கிடக்கின்றனர்..
இது போல்.. நாடு முழுக்க நாலாயிரம் பேர் காத்துக்கிடக்கலாம்..

இவர்களுக்கு விடிவு என்ன..?
சமுதாயச்சிந்தனை மிக்க 
நம் தொழிற்சங்கங்களின் முடிவு என்ன..?

இதுதான்..
இராபின்சன் மரணத்தையும் மீறி 
நம் நெஞ்சைத்துளைத்த கேள்வி..

"எந்த கேள்விக்கும் பதில் உண்டு" என 
தத்துவமேதை சாக்ரடீஸ் சொன்னான்..
இந்த கேள்விக்கு உண்டா?..

Monday, 20 January 2014

ஜனவரி - 21
தோழர்.லெனின் 
நினைவு நாள் 

மூளையை  முதிர வைத்தான்... 
சுரண்டலை உதிர வைத்தான்... 
தனியுடமை தளர வைத்தான்... 
பொதுவுடமை  வளர வைத்தான்... 
அகிலத்தை அதிர வைத்தான்... 
தோழமை புரிய வைத்தான்...
தோழர். லெனின் புகழ் பாடுவோம்...

Sunday, 19 January 2014

JTO ஆளெடுப்பு விதிகள் 2014
(நகல்வரைவு)

2001ல்  உருவாக்கப்பட்ட JTO  ஆளெடுப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு தற்போது நகல் வரைவு வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட விதிகளின்படி 
  • JTO பதவி மாநில அளவிலான பதவியாக இருக்கும். 
  • CGM  பதவி அமர்த்தும் அதிகாரியாக இருப்பார்.
  • காலியிடங்களில் 50 சதம்  வெளியாட்கள் மூலமாகவும்,  50 சதம் இலாக்கா ஊழியர்கள் மூலமாகவும் நிரப்பப்படும்.
  • 50 சத இலாக்கா காலியிடங்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலமாகவும், 13600-25420 (TTA) சம்பள விகிதத்தில் 7ஆண்டுசேவைமுடித்து BE/DIPLOMA/B.Sc(MATHS/PHYSICS/CS/ELECTRONICS)  கல்வித்தகுதி உள்ளவர்கள் மூலமாகவும் போட்டித்தேர்வின் மூலம் நிரப்படும்.
  • தற்போது SCREENING  தேர்வு எழுதி OFFICIATING செய்யும் தோழர்கள் JTOவாக நிரந்தரம் செய்யப்பட்ட பின்னர் ஒய்வு,இறப்பு போன்றவற்றால் உருவாகும் JTO காலியிடங்கள் இலாக்கா போட்டித்தேர்விற்கு மாற்றப்படும்.
  • இலாக்கா  ஊழியர்கள் 55 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


தோழர்களே..
தற்போதைய புதிய ஆளெடுப்பு விதிகளின் மூலம் 
தகுதித்தேர்வில் வெற்றி பெற்று 
ஏறத்தாழ 8 ஆண்டுகளாக OFFICIATING செய்து வரும் 
TTA தோழர்களின் நீண்ட நாள் பிரச்சினை முடிவுக்கு வருகின்றது. 

இப்பிரச்சினையை தொடர்ந்து வலியுறுத்தி வந்த 
மத்திய மாநில சங்கங்களுக்கு நமது நன்றிகளும்.. 
பயனடையப் போகும் தோழர்களுக்கு வாழ்த்துக்களும் உரித்தாகுக..

Friday, 17 January 2014

ஜனவரி 18
தோழர்.ஜீவா 
நினைவு நாள் 

தோழர்.ஜீவா 
நினைவுதினக்கூட்டம்  

18/01/2014 - சனிக்கிழமை - மாலை 5 மணி 
NFTE  சங்க அலுவலகம் - காரைக்குடி.

ஜீவா புகழ் போற்றும்..

இரா.பூபதி 
பழ.இராமச்சந்திரன் 
பழனி.இராகுலதாசன் 

மற்றும் தோழர்கள் 
தோழர்களே..  வருக..
 அஞ்சலி 
நமது 
அகில இந்தியப்பொருளர்
தோழர். P.L.துவா  

அவர்களின் மறைவிற்கு 
 செங்கொடி தாழ்த்திய 
அஞ்சலியை 
உரித்தாக்குகின்றோம்.

Thursday, 16 January 2014

செய்திகள் 

கருணை அடிப்படை வேலைக்கான COMPASSIONATE APPOINTMENT 
புதிய விதிமுறைகள் முன்மொழியப்பட்டு BSNL நிர்வாகக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

JTO பதவிகளில் பல ஆண்டுகளாக OFFICIATING செய்து வரும் 
TTA தோழர்களின் JTO பணியமர்த்தல்  குறித்து முடிவெடுக்க அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரையை  CMDயின்  ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.  அதன் மீது தொழிற்சங்கங்கள் தங்களது கருத்தை தெரிவித்த பின்னர் இறுதி முடிவெடுக்கப்படும்.

 இரகசியக்குறிப்பேட்டில் AVERAGE -  சுமார் என்று முத்திரை குத்தப்பட்டு  நாலு கட்டப்பதவி உயர்வு கிட்டாத தோழர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நம்மால் எழுப்பப்பட்டு வந்தது. தற்போது  AVERAGE முத்திரைகள் இருந்தாலும் பதவி உயர்வு வழங்கும் வகையில் BSNL நிர்வாகம் நாலு கட்டப்பதவி உயர்வில் திருத்த உத்திரவு வெளியிட்டுள்ளது. 
இந்திய அரசியல் சட்டத்திற்கு அடுத்தபடியாக அதிகமான திருத்தங்களைக்கொண்டது நமது 4 கட்டப்பதவி உயர்வாகும். 

BSNLலில் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வு காலப்பலன்கள் வழங்குவது குறித்து முடிவு செய்ய நடத்தப்பட்ட கூட்டத்தில்  நிர்வாகத்தரப்பில் இருந்து 2 சத பங்களிப்பு தரப்படும் என கூறப்பட்டது. இதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. 
தொடர்ந்து விவாதம் நடைபெறும்.

ஊழியர் சேமநல நிதிக்கான EPF வட்டி விகிதம் 
8.5 சதத்திலிருந்து 8.75 ஆக உயர்த்தப்படவுள்ளது. நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப்பின்னர் இது அமுல்படுத்தப்படும் 

 தமிழகத்தில் TTA பதவிகளுக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்ட 
27 தோழர்களுக்கு 27/01/2014 அன்று பயிற்சி வகுப்பு சென்னை மீனம்பாக்கம் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமாகின்றது. காரைக்குடியில் இருந்து இராமேஸ்வரம் பகுதியைச்சேர்ந்த ஜனார்த்தனன் என்ற தோழர் 
பயிற்சிக்கு செல்கின்றார். நமது வாழ்த்துக்கள்.
IDA 
BSNL உத்திரவு வெளியீடு 

01/01/2014 முதல் 5 சத IDA 
உயர்விற்கான BSNL உத்திரவு 
16/01/2014 அன்று  வெளியிடப்பட்டுள்ளது. 

இத்துடன் மொத்தப்புள்ளிகள் 
90.5 சதம் ஆகும்.

Monday, 13 January 2014

அண்ணல் நபி அவர்களின் 
அவதார தினம் போற்றுவோம்..

உழைப்பவனின் வியர்வை காயுமுன்னே 
அவனது கூலி கொடுக்கப்பட வேண்டும் 
என்றுரைத்த அண்ணல் நபி பெருமகனாரின் 
உதய தின விழாவில் 
அவர் உரைத்த கொள்கைகளை 
உள்ளத்தில் நிறுத்துவோம்..
உலகத்தை சமமாய் நிறுத்துவோம்..

Sunday, 12 January 2014

                     நிலவு ஈன்ற நெருப்புக்குழந்தை 
                                      கவிஞர் - பேராசிரியர் - முனைவர் 
                                                             மு. பழனி இராகுலதாசன் 

கடவுளைப் பார்த்தீர்களா? என்பது கேள்வி..
"பார்த்தேன்" என்பது பதில்..

"எப்படிப்பார்த்தீர்கள்?"  
என்பது அடுத்த கேள்வி..
நீ என்னைப் பார்ப்பது போல்..
என்பது அடுத்த பதில்..
உரையும் முடிந்தது... 
திரையும் விலகியது

இப்படித்தான்..
இந்திய வரலாற்றில்
நிலவொன்று
நெருப்புக்குழந்தையை
ஈன்று தந்தது..
அப்புறம்?..
அப்புறம் என்ன..
ஆட்டம் தொடங்கியது..

என்ன ஆட்டம்?
"நெருப்புச்சக்கரம் சுழலும் ஆட்டம்"
"நான்தான் பெரியவன்"
"நீதான் சிறியவன்"
என்று பலரும் பேசிக்கொண்டிருந்த
சீக்குப்பிடித்த சிகாகோ நகரில்
சீறிப்பாய்ந்தது
சிங்கக்குட்டி..
தவளைக்கதையை
அவையில் சொல்லி
அடக்கி ஆண்டது..

தவளைச்சத்தம்
அடங்கிய பின்னர்
நெருப்புச்சக்கரம் 
தெருவுக்கு வந்தது..
"விதவைப் பெண்ணுக்கு
வாழ்க்கை தராத
மதமெனும்
பேயை கடலில் எறி"!..
என்று முழங்கியது..

கூனல் என்பதும்..
குருடு என்பதும்..
உயர்வு என்பதும்..
தாழ்வு என்பதும்..
மனிதரில் இல்லை..
"நிமிர்ந்து நட"
"நேர்படப்பேசு"
ஆதியில் இல்லாச் சாதியை
எவனோ பாதியில் கொணர்ந்தான்
அனைவரும் அந்தணர்
என்று புதிதாய்
விதியொன்று சமைப்போம்"
என்று முழங்கி
நெருப்புச்சக்கரம்
 நீளச் சுழன்றது..

நாலாம் நிலையெனக் 
கீழே தள்ளிய தோழன் 
அவனைத்தோளில் தாங்கி
"ஆட்சியில் அமர வைப்பேன்:
அது வரை நானும் 
ஓய்ந்திட மாட்டேன்
என்று சுழன்றது

நாடுகள் இருக்கலாம்..
எல்லைக்கோடுகள் எதற்கு?
மொழிகள் இருக்கலாம்..
வேறு பாடுகள் எதற்கு?
மதங்கள் இருக்கலாம் 
வெறுப்புப் பதங்கள் எதற்கு?

நிலவு ஈன்ற நெருப்புக்குழந்தை
இப்படித்தான்
எழுப்பியது கேள்விகள்..

நெருப்புக்குழந்தை
சுழலச்சுழல..
சுழன்றது பாரதம்..

மேலே மேலே

வளர்ந்தது பாரதம்..


(12/01/2014 - காரைக்குடி NFTE   சங்க அலுவலகத்தில்
சுவாமி விவேகானந்தர் பிறந்த தின விழாவில் வாசித்தளித்த கவிதை )

தமிழர் திருநாள் 
நல்வாழ்த்துக்கள் 

காடு திருத்திக்  கழனி வளர்த்த 
தமிழர் திருநாள்...
ஈரடியில் உலகளந்த 
வள்ளுவர் பெருநாள்..
சுறவம் என்னும் தமிழ்ப்பெயர் மங்கிய 
தைத்திருநாள் என்னும் மகிழ்வு பொங்கிய 
பொங்கல் வளநாள்..

பொங்கல் திருநாளில்.. 
எளியோருக்கு ஏற்றம் பொங்கட்டும்..
வறியோருக்கு வளம் பொங்கட்டும் 
BSNLலில் மலர்ச்சி  பொங்கட்டும்..
ஊழியர் வாழ்வில் வளர்ச்சி பொங்கட்டும்..
புவியில் அமைதி பொங்கட்டும்..
வாழ்வோர் அனைவருக்கும்..
வருங்காலம் பொங்கட்டும்..

Saturday, 11 January 2014

ஜனவரி 12
தேசிய இளைஞர் தினம் 
சுவாமி விவேகாநந்தர் பிறந்த தினம் 

சுவாமி விவேகாநந்தர் பிறந்த தின விழா
சிறப்புக்கூட்டம் 
12/01/2014 - ஞாயிறு - காலை - 10 மணி 
NFTE சங்க அலுவலகம் - காரைக்குடி .
-:சிறப்புரை "-
தோழர். மணிபாரதி 
கலை இலக்கியப்பெருமன்ற மாவட்டச்செயலர் 

பேராசிரியர். முனைவர்.
பழனி இராகுலதாசன் 
மற்றும் தோழர்கள்.
தோழர்களே.. வருக
===================================
உண்மைக்காக எதையும் இழக்கலாம் 
எதற்காகவும் உண்மையை இழக்க முடியாது.
சுவாமி விவேகாநந்தர்

Thursday, 9 January 2014

அலைக்கற்றைக்கட்டணம் திருப்புத்தொகை 
BWA UPFRONT CHARGES REFUND 

09/01/2014 அன்று கூடிய மத்திய அமைச்சரவை 
BSNL மற்றும் MTNL நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட 
அலைக்கற்றை கட்டணத்தை (BWA UPFRONT CHARGES) 
திருப்பித்தர ஒப்புதல் அளித்துள்ளது.

BSNL உரிமம் பெற்ற தமிழ்நாடு,கர்நாடகா,கொல்கத்தா,ஆந்திரா,மகராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களிலும், MTNL உரிமம் பெற்ற பகுதிகளிலும் 
BWA அலைக்கற்றை சேவை திருப்பி ஒப்படைக்கப்படும்.

BSNLக்கு 6725 கோடியும் MTNLக்கு 4534  கோடியும் 
திருப்புத்தொகையாக (REFUND) கிடைக்கும்.
BSNL, MTNL வளர்ச்சிக்கு இத்தொகை பயன்படுத்தப்படும்.

நூற்றில் ஒரு லட்சம்...

நமது மாநிலத்தலைவர் அருமைத்தோழர். நூருல்லா அவர்கள் தனது உடல் நலிவு காரணமாகவும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாகவும் ஒலிக்கதிர் பொன்விழாவில் 
கலந்து கொள்ள இயலவில்லை. 

நூரி(றி)ன் இடத்தில் லட்சம் அமர்ந்தது. 
ஆம்.. நமது மாநில உதவித்தலைவர் 
அன்புத்தோழர் இலட்சம் அவர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒலிக்கதிர் பொன்விழாத்தலைமை என்னும் வாய்ப்பேற்றார். 

10 மணி நேரம் அவையைப்பாங்குடன் நடத்தினார்.
 வழிமுனைகளில் நில்லாது செல்முனை நோக்கி சீராய் பயணிக்கும் 
இடைநில்லா பேருந்து போல் 
லட்சிய உந்துதலுடன் தனது பணி முடித்தார்.

வாழ்க... லட்சம்... 
பெருக... லட்சம்...

Wednesday, 8 January 2014

பதவி பெயர் மாற்றக்குழு 
DESIGNATION CHANGING COMMITTEE

BSNL ஊழியர்களின் பதவிகளை பெயர் மாற்றம் செய்வது குறித்து நிர்வாகத்தரப்பில் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. 
இந்த குழுவில் ஊழியர் தரப்பும் இடம் பெற வேண்டும் 
என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. 

அதனை ஏற்று நிர்வாகம் மற்றும் சங்கங்கள் 
அடங்கிய கூட்டுக்குழுவை அமைத்து அதில் 
NFTE சார்பில் இரண்டு பிரதிநிதிகளும்,
 BSNLEU சார்பில் இரண்டு  பிரதிநிதிகளும் 
பரிந்துரைக்க கோரி  BSNL நிர்வாகம் இரண்டு
 அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கும் கடிதம் அளித்துள்ளது. 
BSNL சீரமைப்புக்குழு கூட்டம் 

 BSNL மற்றும் MTNL நிறுவனங்களை சீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட  நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள் தலைமையிலான 
அமைச்சர் குழு  08/01/2014 அன்று கூடியது.
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.

  • ஒரு லட்சம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பது..
  • அகன்ற அலைவரிசை சேவையை மேம்படுத்துவது..
  • கம்பி இல்லா அகன்ற அலைவரிசை இணைப்பு கொடுப்பது..
  • BSNLன் செல் கோபுரங்களை பிரித்து தனியாக புதிய நிறுவனம் ஆரம்பிப்பது 
  • BSNLக்கு வழங்கப்பட்ட தேசியக்கடன் தொகையை தள்ளுபடி செய்வது 
  • BSNL மற்றும் MTNL செலுத்திய 10ஆயிரம் கோடி  அலைக்கற்றை கட்டணத்தை திருப்பித்தருவது 
போன்ற பிரச்சினைகள் DOTயால் முன்வைக்கப்பட்டன. 
ஆயினும் முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அப்போது  VRS வேதாளம் மீண்டும் முருங்கை ஏறலாம்.
ஜனவரி DA
DPE உத்திரவு வெளியீடு

01/01/2014 முதல் 
5 சத IDA  
உயர்விற்கான DPE  உத்திரவு 
07/01/2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
BSNL உத்திரவு
 விரைவில் வெளிவரும்.
ஒப்பற்ற 
லிக்திர் பொன்விழா 

வாள்  முனையினும் வலியது பேனா முனை
ஐம்பது ஆண்டுகள் தொழிலாளி வர்க்கத்தின் 
கூர்முனையாய் செயலாற்றிய 
ஒலிக்கதிரின் பொன்விழா 
களம் பல கண்ட கடலூரில் 
வந்தோர் திகைக்க வராதோர்  தகிக்க 
வந்தும் வராதோர் மனம் புகைக்க 
வரலாற்றுக் கல்வெட்டாய்  
வலிமையான முத்திரை பதித்துள்ளது..

FLEXIBLE செயல்பாடு .. 
FLEX FULL ஏற்பாடு.. 
என கடலூர் மாவட்டம் கலக்கிட..

நமது சிந்தை நிறைந்த தந்தை 
தோழர்.குப்தாவிற்கு முதலாண்டு 
நினைவுப்புகழ் அஞ்சலி செலுத்திட..

சகோதர சங்கத்தலைவர்களும் 
சகல சங்கத்தலைவர்களும் 
முதன்மைப் பொதுமேலாளரும் 
இணைந்த கரங்களாய் வாழ்த்துரை வழங்கிட 

அகில இந்தியத்தலைவரும் 
அகில இந்தியபொதுச்செயலரும் 
பறந்து வந்து சிறப்புரை செய்திட..

தலைவர்களின் தலைவிகளுக்கு 
தக்க மரியாதை அளித்திட..

தஞ்சையும்.. குடந்தையும்..சேலமும்..
நாற்காலி என்னும் உடனடி உண்மை நாடகத்தில் 
அனைவரையும் கொள்ளை கொள்ள 

கவியரங்கத்தில் கவிஞர்கள் 
ஒலிக்கதிரின் மேன்மை சொல்ல..

கருத்தரங்கத்தில் 
ஒலிக்கதிரின் 50 ஆண்டு பணியை 
5 மணித்துளிகளில் தோழர்கள் 
கடுகைத்துளைத்து குறுகத்தரிக்க 

தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர் 
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலர் 
தோழர். தா.பாண்டியன் அவர்கள் நிறைவுரையாற்ற 

இடை இல்லா நிகழ்ச்சிகளோடு..
நீங்கா நினைவுகளோடு.. 
நெஞ்சம் நிறைத்தது.. 
ஒலிக்கதிர் பொன்விழா மாநாடு.. 

ஒலிக்கதிரின் வீச்சும்.. 
பொன்விழா பற்றிய பேச்சும்.. 
நீண்ட நாள் ஓங்கி ஒலித்திடும்..

Tuesday, 7 January 2014

செய்திகள் 

அதிகாரிகள் சங்கத்திற்கான அங்கீகார விதிகள் 
BSNL நிர்வாகத்தால் 06/01/2014 அன்று 
வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 

  • 35 சத வாக்குகள் பெறும் அமைப்பு முதன்மை அமைப்பாக அங்கீகரிக்கப்படும்.
  • 15 சத வாக்குகள் பெறும் அமைப்பு ஆதரவு அமைப்பாக SUPPORT ASSOCIATION அங்கீகரிக்கப்படும்.
  • எந்த அமைப்பும்  35 சத வாக்குகள் பெறாத நிலையில் 15 சத வாக்குகள் பெற்ற எல்லா அமைப்புக்களும் ஆதரவு அமைப்புகளாக அங்கீகரிக்கப்படும்.
  • அங்கீகார காலம் 3 ஆண்டுகள்.
  • தேர்தல் மின்னணு முறையில் நடத்தப்படும்.

BSNLலில் நேரடி நியமனம் செய்யப்பட்ட தோழர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது பற்றி முடிவு செய்ய 15/01/2014 அன்று டெல்லியில் NFTE, BSNLEU, SNEA, AIBSNLEA, AIGETOA ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசணைக்கூட்டம் நடைபெறுகின்றது. நமது சங்கத்தின் சார்பில் தோழர்.இஸ்லாம் அவர்கள் கலந்து கொள்கின்றார்.

TELECOM MECHANIC தேர்வில் வெற்றி பெற்ற 14 தோழர்களுக்கு 
20/01/2014 முதல் சென்னையில் பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது.

BSNL நிர்வாகம் POST PAID செல் சேவைக்கட்டணங்களை 
01/02/2014 முதல் திருத்தி அமைத்துள்ளது. 
ரூ.175 மாதாந்திரக்கட்டண சேவை நிறுத்தப்படுகின்றது.

Monday, 6 January 2014

ஜனவரி 6
தோழர். குப்தா 
முதலாமாண்டு  நினைவு தினம் 

மந்தைகளின் வாழ்வில் 
விந்தைகள் புரிந்தவன்..
அவர்தம் 
சிந்தையில் நிறைந்தவன்.. 
தந்தையாகி... தாயாகி...
யாதுமாகி நின்றவன்.. 
அவன் திருவடி போற்றுவோம்.. 
அவனடியொற்றுவோம்..