Monday, 27 January 2014

SC/ST  தோழர்களின் நலனுக்கான 
 பாராளுமன்றக்குழு 

SC/ST தோழர்களின் நலனுக்கான பாராளுமன்றக்குழு  அவர்களது நீண்ட நாள் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு குறிப்பு அனுப்பியுள்ளது. 32 பிரச்சினைகள் அதில் இடம் பெற்றுள்ளன . அதில் இரண்டு மிக முக்கிய பிரச்சினைகள் பற்றி நமது சங்கக்கருத்தினை பாரளுமன்றக்குழுவிற்கு தெரிவித்திடக்கோரி  நமது மாநிலச்செயலர் மத்திய சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மாநிலச்செயலர் எழுப்பியுள்ள கோரிக்கைகள் 
NEPP பதவி உயர்வில் சலுகை 

SC/ST ஊழியர்களுக்கு நாலு கட்டப்பதவி உயர்வில் சலுகைகள் அளிக்க வேண்டும் என்பது நமது நீண்ட நாள் கோரிக்கை. உச்சநீதி மன்றம் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அளித்த பல்வேறு தீர்ப்புகளை காரணம் காட்டி BSNLலில்  நாலு கட்டப்பதவி உயர்வில் SC/ST தோழர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முடியாது என நிர்வாகம் தொடர்ந்து கூறி வருகின்றது.
இது ஏற்புடையதல்ல. இட ஒதுக்கீடு அளிக்க இயலாவிட்டாலும் நாலுகட்டப்பதவி உயர்வில் அவர்களுக்கு சலுகைகள் அளிக்கலாம். DOTயில் இருந்து BSNLக்கு வந்த ஊழியர்களுக்கு முதல் கட்டப்பதவி உயர்வு 4 ஆண்டுகளிலும்,  இரண்டாம் கட்டப்பதவி உயர்வு 7 ஆண்டுகளிலும் சலுகை முறையில் வழங்கப்படுவது போல் SC/ST  உழியர்களுக்கும் நாலு கட்டப்பதவி உயர்வில் ஓராண்டு சலுகை அளிக்கலாம். வணிகத்துறையில் இது போல் சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கருணை அடிப்படை வேலையில் சலுகை

தற்போது BSNLலில் கருணை அடிப்படை வேலைக்கு மதிப்பெண் முறை பின்பற்றப்படுகின்றது. 55 மதிப்பெண் பெற்ற விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பரிசீலனைக்குப்பின் 55 மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பங்கள் கூட நிராகரிக்கப்படுகின்றன. இது நியாயமான  நடைமுறையன்று. இந்த மதிப்பெண் வழங்கும் முறையில் SC/ST தோழர்களுக்கு சலுகைகள் BSNLலில் வழங்கப்படவில்லை. இது குறித்து JCM தேசியக்குழுக்கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டது.  உடனடியாக BSNLலில் கருணை அடிப்படை பணிக்கான தேர்வு முறைகளில் SC/ST  ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். 

உரிய நேரத்தில் மேற்கண்ட முக்கியப்பிரச்சினைகளை எடுத்துரைத்த மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி அவர்களுக்கு நமது நன்றிகள்.

No comments:

Post a Comment