BSNL சீரமைப்புக்குழு கூட்டம்
BSNL மற்றும் MTNL நிறுவனங்களை சீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள் தலைமையிலான
அமைச்சர் குழு 08/01/2014 அன்று கூடியது.
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
- ஒரு லட்சம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பது..
- அகன்ற அலைவரிசை சேவையை மேம்படுத்துவது..
- கம்பி இல்லா அகன்ற அலைவரிசை இணைப்பு கொடுப்பது..
- BSNLன் செல் கோபுரங்களை பிரித்து தனியாக புதிய நிறுவனம் ஆரம்பிப்பது
- BSNLக்கு வழங்கப்பட்ட தேசியக்கடன் தொகையை தள்ளுபடி செய்வது
- BSNL மற்றும் MTNL செலுத்திய 10ஆயிரம் கோடி அலைக்கற்றை கட்டணத்தை திருப்பித்தருவது
போன்ற பிரச்சினைகள் DOTயால் முன்வைக்கப்பட்டன.
ஆயினும் முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அப்போது VRS வேதாளம் மீண்டும் முருங்கை ஏறலாம்.
No comments:
Post a Comment