செய்திகள்
அதிகாரிகள் சங்கத்திற்கான அங்கீகார விதிகள்
BSNL நிர்வாகத்தால் 06/01/2014 அன்று
வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி
- 35 சத வாக்குகள் பெறும் அமைப்பு முதன்மை அமைப்பாக அங்கீகரிக்கப்படும்.
- 15 சத வாக்குகள் பெறும் அமைப்பு ஆதரவு அமைப்பாக SUPPORT ASSOCIATION அங்கீகரிக்கப்படும்.
- எந்த அமைப்பும் 35 சத வாக்குகள் பெறாத நிலையில் 15 சத வாக்குகள் பெற்ற எல்லா அமைப்புக்களும் ஆதரவு அமைப்புகளாக அங்கீகரிக்கப்படும்.
- அங்கீகார காலம் 3 ஆண்டுகள்.
- தேர்தல் மின்னணு முறையில் நடத்தப்படும்.
BSNLலில் நேரடி நியமனம் செய்யப்பட்ட தோழர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது பற்றி முடிவு செய்ய 15/01/2014 அன்று டெல்லியில் NFTE, BSNLEU, SNEA, AIBSNLEA, AIGETOA ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசணைக்கூட்டம் நடைபெறுகின்றது. நமது சங்கத்தின் சார்பில் தோழர்.இஸ்லாம் அவர்கள் கலந்து கொள்கின்றார்.
TELECOM MECHANIC தேர்வில் வெற்றி பெற்ற 14 தோழர்களுக்கு
20/01/2014 முதல் சென்னையில் பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது.
BSNL நிர்வாகம் POST PAID செல் சேவைக்கட்டணங்களை
01/02/2014 முதல் திருத்தி அமைத்துள்ளது.
ரூ.175 மாதாந்திரக்கட்டண சேவை நிறுத்தப்படுகின்றது.
No comments:
Post a Comment