காரைக்குடி
விழிப்புணர்வுக் கூட்டம்
புத்தாண்டு சந்திப்பு மற்றும் BSNL விழிப்புணர்வுக்கூட்டம்
01/01/2014 அன்று காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் மற்றும்
RSU தொலைபேசி நிலையம் ஆகிய இடங்களில் துணைப்பொதுமேலாளர்கள் திரு.ஜெயச்சந்திரன், திருமதி.இராஜம்மாள் ஆகியோர் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.
BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன்,
FNTO மாவட்டச்செயலர் தோழர்.முத்துக்குமரன்,
NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி
ஆகியோர் கலந்து கொண்டனர்.
- BSNLன் இன்றைய நிலை,
- மாவட்டத்தில் நமது சேவையின் தன்மை
- வருவாய் பெருக்கத்திற்கான வழிமுறைகள்
- புதிய சேவைகள் தொடக்கம்
- வாடிக்கையாளர் சேவை மையங்களை வலுப்படுத்துதல்
- விற்பனை விழாக்களை நடத்துதல்
- தொலைபேசி பில்களை நாமே பட்டுவாடா செய்தல்
- தொலைபேசி பாக்கிகளை வசூல் செய்தல்
- காலியாக உள்ள நமது இடங்களை வாடகைக்கு விடுதல்
- வங்கிகளின் பணம் தரும் இயந்திரங்களை ATM அமைத்தல்
- ஊழியர்களுக்கு உரிய கருவி வழங்குதல்
- அகன்ற அலைவரிசை பழுது நீக்க மடிக்கணிணி வழங்குதல்
- குடியிருப்பு APARTMENTS பகுதிகளை குறி வைத்தல்
- கூடித்தொழில் செய்தல்
என பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
புத்தாண்டு என்றால் ஆலயத்திற்கு செல்வது
அம்மா கடைக்கு செல்வது என்றில்லாமல்
நமது BSNL ஆலயத்தில் அமர்ந்து BSNL மேம்பாட்டிற்காக
அதன் அதிகாரிகளும் ஊழியர்களும்
தொழிற்சங்கத்தலைவர்களும் ஓன்று கூடி
உருப்படியாய் விவாதித்து நமக்குள்ளே
விழிப்புணர்வு ஊட்டிய செயல் பாராட்டிற்குரியது.
இது போன்ற விழிப்புணர்வு கூட்டங்களை
அனைத்து துணைக்கோட்ட மட்டங்களிலும்
நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஓன்றுபடுவோம்..
நாம் கூடி BSNL தேர் இழுப்போம்..
வாரீர்.. தோழர்களே..
No comments:
Post a Comment