ஜூன் 10
அறப்போர்
கரங்கள் உயராமல் காரியங்கள் இல்லை.. |
மாதந்தோறும் மாறாத துயரங்கள்..
மாவட்டந்தோறும் தீராத துன்பங்கள்...
கொள்ளை அடிக்கும் குத்தகைக்காரர்கள் ..
குறட்டை விடும் அதிகாரிகள்..
ஒப்பந்த ஊழியர் வாழ்வு
ஒப்பேறாமலே போவதா?
உழைப்பவன் வாழ்வு..
உருப்படாமலே போவதோ?
இனி பொறுப்பதில்லை..
இனியும் பொறுப்பதில்லை..
தோழனே..
ஏந்திடு நெஞ்சில் எரிதழல்..
சேர்ந்திடு...
சென்னையில்..பெருந்திரள்..
ஒப்பந்த ஊழியனே...
நீ.. திரள வேண்டும்...
உன்னைக்கண்டு...
நிர்வாகம் மிரள வேண்டும்...
தொடரும்..
உனது துன்பங்கள் அகல வேண்டும்...
சென்னை செல்வோம்.. சேர்ந்து வெல்வோம்
--------------------------------------------------------------------------------------------------------------------------
09/06/2015 அன்று இரவு
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் இருந்து
சென்னைக்கு செல்ல சிறப்பு அரசுப்பேருந்து
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோழர்கள் திரள வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------