செய்திகள்
- 01/06/2015 முதல் சேவை வரி SERVICE TAX 12.36 சதத்திலிருந்து 14சதமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை தனியாக வசூல் செய்யப்பட்ட கல்வி வரி தற்போது 14 சத வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும். போகிற போக்கில் செலவில் பாதி சேவை வரி என்று ஆனாலும் ஆச்சரியமில்லை.
- ITI இரண்டாண்டு கல்வித்தகுதி உள்ள தோழர்கள் எந்த பாடப்பிரிவை எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலும், 9020 சம்பள விகிதத்தில் நியமனம் செய்யப்பட்ட 5ஆண்டுகள் சேவை உள்ள SPORTS ASSISTANTS விளையாட்டு வீரர்களும் TTA இலாக்காத்தேர்வு எழுதலாம் என BSNL தலைமையகம் விளக்கமளித்துள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்காமல் நேரடியாக பெறப்பட்ட பட்ட வகுப்புகள் செல்லாது எனவும் BSNL விளக்கமளித்துள்ளது.
- GPF முன்பணம் வழங்குவது உள்ளிட்ட அனைத்து GPF சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் DOT CELLக்கு அனுப்பிட வேண்டும் என DOT நமது BSNL உருவான 15 ஆண்டுகளுக்குப்பின் பிரச்சினையை எழுப்பியுள்ளது. முன்பணம் வழங்கும் அதிகாரம் DOT க்கு சென்றுவிட்டால் மேலும் பிரச்சினைகள் உருவாகும் என நமது சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. GPF நல்ல நாளிலேயே தில்லைநாயகமாக உள்ளது. DOTக்குப் போனால் மேலும் திணறல் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.
- மருத்துவபில்கள் பட்டுவாடா செய்வதில் கடும் தாமதம் நிலவுவதால் பல மருத்துவமனைகள் BSNL ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தயங்குகின்றன. நமது ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தரமுள்ள மருத்துவமனைகளின் பில்களை உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும் எனவும் தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் BSNL நிர்வாகம் மாநில நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
- 7.5 லட்சம் வங்கி ஊழியர்களுக்கு 15 சத ஊதிய உயர்வு அளிப்பதற்கான இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 30 மாத நிலுவைத்தொகையும் வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
- இந்தியாவில் அகன்ற அலைவரிசை இணைப்புக்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தொட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
- தமிழகத்தின் CGM ஆக தற்போது பொறுப்பில் உள்ள திரு. G.V .ரெட்டி அவர்கள் 30/09/2015 அன்று பணி நிறைவு செய்கின்றார். எனவே அவரது இடத்தில் பணி புரிய தற்போது சென்னையில் PGM ஆகப்பணிபுரியும் திருமதி.பூங்குழலி அவர்களுக்கு தமிழ்நாடு வட்டத்திற்கு மாற்றல் வழங்கப்பட்டுள்ளது.
- நமது NFTE சங்கத்தின் சேலம் மாவட்ட மாநாடு இன்று 26/05/2015 நடைபெறுகின்றது. மாநாடு சிறப்புடன் நடைபெற நமது வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment